ட்ரோன் மூலம் கனிம வளங்களை கண்டறிவதற்காக காரக்பூர் ஐஐடி-யுடன் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
- நாட்டின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான கனிம வள மேம்பாட்டுக் கழகம் ட்ரோன் மூலம் கனிம வளங்களை. கண்டறிவதற்காக காரக்பூர் ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு கனிம வளங்கள் மற்றும் சத்தீஸ்கரில் பெலோடா-பெல்முண்டி என்ற இடத்தில் வைரங்களைக் கண்டறியும் பணியிலும் தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
- மத்திய எஃகுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) ஒராண்டில் 40 மில்லியன் டன்களுக்கு மேல் இரும்புத் தாதை உற்பத்தி செய்த நாட்டின் முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
- கடந்த 1960ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து, தற்போது 40 மில்லியன் டன் என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது.
- உள்நாட்டில் இரும்புத் தாதுவின் தேவை தொடர்ந்து அதிகரிப்பதால், என்எம்டிசி நிறுவனமும், தனது லட்சியத் திட்டங்களை விரிவுபடுத்தி உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
- சமீபகாலமாக என்எம்டிசி நிறுவனம், நவீனத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி, டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
38 மாவட்டங்களில் "முதலமைச்சரின் பசுமைக் கூட்டுறவுத் திட்டம்" - தமிழக அரசு அரசாணை
- தமிழகத்தில் 38 மாவட்டங்களில் "முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்" அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- இயற்கையை பாதுகாக்க,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க எளிய தொழில்நுட்ப முறைகளை வகுக்கும் திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- சுற்றுச்சுழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்தம்
- இந்தியா அதன் எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவிடமிருந்து 2 முதல் 3 சதவீதம் அளவிலே இறக்குமதி செய்கிறது.
- ரஷ்யா கச்சா எண்ணெய்யை சலுகையில் விலை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து மேலதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுவந்தது.
- இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஏற்கனவே சலுகை விலையில் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.
- இந்நிலையில், தற்போது இரு நாட்டு நிறுவனங்களுக்கிடையே அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு
- 14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லி வந்தார்.
- அவருக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்த அவர், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.
- அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
- இதனைத் தொடர்ந்து இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இந்தியாவில் 5 ட்ரில்லியன் யென் முதலீடு செய்யப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்தார். இதையடுத்து இந்தியா-ஜப்பான் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
- கொரோனா தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் இடையோன உச்சிமாநாடு நடைபெறவில்லை.
5 எல்லைகளை சீரமைக்க ரூ.7,000 கோடியில் திட்டம்
- பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகளில், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
- இதற்காக, 2023ம் ஆண்டுக்குள் 7,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு சீரமைக்கப்படும். இந்த திட்டத்தில் புதிய சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், அதிநவீன மின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்படும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு வரை நீட்டிப்பு
- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்பட 24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.
- இந்த கவுன்சிலின் தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார்.
- இந்த நிலையில், இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.