Type Here to Get Search Results !

TNPSC 10th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மேற்கு வங்கத்தில் சமூக பாதுகாப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதற்கு வசதியாக 125 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியாவும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன

  • மேற்கு வங்கத்தில் சமூக பாதுகாப்பு சேவைகள்  எளிதில் கிடைக்கவும் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களுக்கு உதவி செய்யவும் 125 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. 
  • இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் கூடுதல் செயலாளர்  திரு ரஜத்குமார் மிஸ்ராவும், மேற்கு வங்க அரசு சார்பில்  நிதித்துறை செயலாளர் திரு சுதிப்குமார் சின்ஹாவும், உலக வங்கி சார்பில் இந்திய இயக்குநர் திரு ஜூனைத் அகமதும் கையெழுத்திட்டனர்.

உபி, உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி

  • உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதி தொடங்கியது. மார்ச் 7ஆம் தேதி 7வது கட்டமாக நிறைவடைந்தது.
  • உத்தராகண்ட் மாநிலத்தின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும், கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகள் இரு கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • இந்தியாவில் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. முடிவுகள் வெளியாகியுள்ள 237 தொகுதிகளில் பாஜக 158 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
  • மொத்தம் 96 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது மொத்தம் 254 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 61 இடங்களில் வெற்றி பெற்று, 51 இடங்களில் முன்னிலையோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டும் வெற்றியப் பதிவு செய்துள்ளது.
  • பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை உறுதி செய்துள்ளது. அக்கட்சி 92 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலி தளம் 3 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
  • உத்தராகண்ட் மாநிலத்தில் முடிவுகள் வந்த 56 இடங்களில் பா.ஜ.க 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றியும் 3 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. பகுஜன் சமாஜ் 1, சுயேச்சை 1 இடத்திலும் வென்றுள்ளன. தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.
  • மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க 27 இடங்களில் வெற்றியும் 5 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வென்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 5 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளன.
  • கோவா மாநிலத்தில் பா.ஜ.க 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களில் வென்று, 1 இடத்தில் முன்னிலை பெற்று 2ம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் மொத்தம் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சட்டசபை தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பங்கஜ் சிங்

  • பாஜக சார்பாக உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் இந்த முறை களமிறக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக அங்கு தீவிரமாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டடன.
  • இங்கு பங்கஜ் சிங் மொத்தம் 70.84 சதவிகித வாக்குகளை பெற்றார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 16.42 சதவிகித வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் கட்சி 4.36 சதவிகித வாக்குகளை பெற்றது. 
  • இதற்கு முன் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதுவே அதிக வாக்கு வித்தியாச வெற்றியாக இருந்தது.
  • அதை தற்போது பங்கஜ் சிங் முறியடித்துளார். இந்த தேர்தலில் 238867 வாக்குகளை பங்கஜ் சிங் பெற்றார். இவரை எதிர்த்து இரண்டாம் இடம் வந்த சமாஜ்வாதி வேட்பாளர் சுனில் சவுத்திரி வெறும் 61130 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 177737 வாக்குகள் வித்தியாசத்தில் பங்கஜ் சிங் வென்று சாதனை படைத்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel