Type Here to Get Search Results !

சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது சர்வதேச ஊதா தினம் / INTERNATIONAL EPILEPSY DAY

 

TAMIL

  • சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • வலிப்பு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதில் இருந்து மீள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 
வரலாறு
  • கனடா நாட்டின் நோவா ஸ்காடியா பகுதியைச் சேர்ந்த கேஸடி மெகான் (Cassidy Megan) 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக வலிப்பு நோய் குறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டார். 
  • தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதில் இருந்து மீண்டுவர முடியும் என்றும், மூளை நரம்பியலில் ஏற்படும் நரம்புக் குறைபாடு என்பதையும் எடுத்துக்கூறினார்.
  • 9 வயதில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருடன் 2009ம் ஆண்டு மேரிடைம்ஸ் எபிலெப்ஸி கூட்டமைப்பு மற்றும் அனிதா காஃப்மேன் அமைப்பு கூட்டுச் சேர்ந்து உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். 
  • அன்றுமுதல் சர்வதேச ஊதா தினம் அல்லது வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வலிப்பு நோய் குறித்த தவறான புரிதல்கள் மற்றும் பயத்தை போக்கும் வகையில் உலகளவில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
  • மூளை நரம்பியல் செயல்பாடுகளில் நிகழும் திடீர் மாற்றங்களினால் வலிப்பு ஏற்படுகிறது. இது குறித்து மக்களிடையே பொதுவாக தவறான புரிதல் உள்ளது.
  • அதேநேரத்தில் உலகளவில் 40 விழுக்காடு மக்களுக்கு ஊதா நிறம் பிடித்த வண்ணமாக இருக்கிறது. அவர்கள் சிறந்த மனிதாபிமானிகளாகவும் இருப்பதால் இந்த கலரை, வலிப்பு நோய் விழிப்புணர்வுக்காக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உலகளவில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயால் வாழ்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகால மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். 
  • உலகளவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
சர்வதேச வலிப்பு தினம் 2022 தீம்
  • இந்த ஆண்டு சர்வதேச வலிப்பு தினத்தின் கருப்பொருள் 'கால்-கை வலிப்புக்கான 50 மில்லியன் படிகள்' என்பதாகும்.
ENGLISH
  • March 26 is International Epilepsy Awareness Day or Purple Day. This day raises awareness about brain development problems and seizures all over the world. Doctors say that people with epilepsy can recover from it if they are treated properly.
History
  • Cassidy Megan from Nova Scotia, Canada was the first to raise awareness about epilepsy in 2008. He took the experience to the people and created awareness. He noted that it is possible to recover from it, and that it is a neurological disorder that occurs in the brain.
  • He was involved in an awareness campaign at the age of 9 and in 2009 the Maritime Epilepsy Federation and Anita Kaufman jointly launched a global campaign.
  • International Purple Day or Epilepsy Awareness Day has been observed ever since. There is a worldwide campaign to dispel misconceptions and fears about epilepsy.
  • Seizures are caused by sudden changes in the neurological functions of the brain. There is a general misunderstanding among the people about this. At the same time, purple is the favorite color of 40 percent of the world's population. 
  • This color has been chosen for epilepsy awareness because they are also excellent humanitarians. Worldwide, 50 million people live with epilepsy. People with this disease are 3 times more likely to die prematurely than the general population.
  • It is estimated that one in 100 people worldwide has epilepsy. About 2.2 million people in the United States alone are affected by the disease.
International Epilepsy Day 2022 Theme
  • The theme of this year's International Epilepsy Day is '50 Million Steps for Epilepsy '.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel