Type Here to Get Search Results !

அவ்வையார் விருது & பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது / AVVAIYAR AWARD & PARAMPARIYA NEL PATHUKAVALAR AWARD

 

TAMIL

அவ்வையார் விருது

  • பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் மகளிரை கவுரவிக்கும் வகையில், சமூக நலத் துறை மூலம் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • மகளிர் அதிகாரம், மத நல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல், நிர்வாகம் ஆகியதுறைகளில் சிறந்து விளங்கியதுடன், சேவை மனப்பான்மையோடு தொண்டாற்றியவர்களைப் பாராட்டி8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது.
  • அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிஜா குமார்பாபுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெண்கள், குழந்தை களுக்கு இவர் ஆற்றிய சேவை களைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், இந்திய குழந்தைகள்நலச் சங்கம், இளைஞர் நீதிக் குழுமம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் குழு, மருத்துவ நெறிமுறை ஆலோசனைக் குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியதற்காகவும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியமைக்காகவும், பயிற்சியாளராக பல சமூகப் பணியாளர்களை உருவாக்கியமைக்காகவும் இந்த விருது இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது
  • 2020-21-ம் ஆண்டுக்கான 'எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்' விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி கருப்பு கவுனி ரகம் சாகுபடியில் அதிக மகசூல் செய்து மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த செ.மூர்த்திக்கு விருதுடன் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், வாசனை சீரக சம்பா சாகுபடியில் அதிக மகசூல் செய்து 2-ம் இடம் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த கோ.பொன்னு புதியவனுக்கு விருதுடன் பரிசுத்தொகை ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையையும், ஆத்தூர் கிச்சிலி சம்பா சாகுபடியில் அதிக மகசூல் செய்து 3-ம் இடம் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த பி.லட்சுமி தேவிக்கு விருதுடன் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ENGLISH

Avvaiyar Award

  • The Avvaiyar Award is given by the Department of Social Welfare in recognition of women who have excelled in service to women. An 8 gram gold medal, a check for Rs. 1 Lakhs.
  • Chief Minister MK Stalin presented the Avvaiyar Award for the year 2022 to Kirija Kumarbabu at a function held at the General Secretariat yesterday. The award is given in recognition of her services to women and children.
  • He has also been awarded for his work as a member of the Indian Children's Association, the Youth Justice Council, the Workplace Sexual Harassment Prevention Committee, and the Medical Ethics Advisory Committee, as well as working with UNICEF and developing many social workers as trainers.
Parampariya Nel Pathukavalar Award
  • The MGR  Parampariya Nel Pathukavalar Award for the year 2020-21 were also presented. Accordingly, a check for Rs. 1 Lakhs
  • Chief Minister Stalin presented award for S. Murthy from Namakkal, who got the highest yield in the state by cultivating black gourd variety, S. Ponnu, a newcomer from Tirunelveli, who got the highest yield in the cultivation of fragrant cumin samba, and P. Lakshmi Devi who got the highest yield in Attur Kichili samba cultivation, and Tirunelveli, who got the highest yield in the samba cultivation.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel