Type Here to Get Search Results !

2021ஆம் ஆண்டு வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த அறிக்கை / REPORT ON UNEMPLOYMENT RATE IN 2021

 

TAMIL
  • இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை இழப்புகள் மற்றும் காரிப் பருவத்தின் விதைப்புப் பணிகள் முடிந்த நிலையில் வேலையின்மை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
  • கடந்த 2020ஆம் ஆண்டும் கொரோனா காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் ஜூலையில் 37. 6 சதவிகிதமாக இருந்தது. 
  • அதை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதம் 37.5 சதவிகிதமாக குறைவாக உள்ளது. அது வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 8.4 ஆக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு மார்ச் மாதத்தைவிட குறைவானது. 
  • கொரோனா பாதிப்புக்கு முந்தைய பிப்ரவரி, ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 7.22 மற்றும் 7.76 சதவிகிதத்திற்கு இடையில் இருந்தது.
  • தற்போது சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து நிலையில் தற்போது, கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
  • இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த அறிக்கையை பொருளாதார கண்காணிப்பு மையம் தற்போது வெளியிட்டுள்ளது. 
  • இதன்படி தற்போது நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை சதவீதம் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒடிசா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், அரியானா மாநிலம் கடைசியாக உள்ளது. 
  • அரியானாவில் 100ல் சுமார் 25 பேருக்கு வேலை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
  • வேலைவாய்ப்புன்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக அரியானா 25.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 24.5 சதவீதத்துடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
  • ஜம்மு காஷ்மீர் 22.8 சதவீதத்துடன் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழகம் 5.5 சதவீதத்துடன் 15வது இடத்தில் உள்ளது. 
  • கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ENGLISH
  • The Center for Economic Monitoring of India said in the last few months that the unemployment rate has been rising due to declining employment in rural areas across India. Unemployment is said to have increased in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme as job losses and the completion of sowing work in the dry season.
  • During the Corona period in 2020, the country's overall employment rate was 37.6 percent in July. That compares with 37.5 percent in August. It has raised the unemployment rate to 8.4 percent. This increase is lower than in March.
  • Unemployment was between 7.22 and 7.76 percent in February, January and December before the Corona disaster. It has been reported that the federal government has ordered the easing of restrictions on corona exposure, which has been declining for about three years now.
  • The Center for Economic Monitoring has released a report on the unemployment rate for 2021. According to the report, Odisha has the lowest unemployment rate in the country, followed by Haryana.
  • About 25 out of 100 people in Haryana are reported to be out of work. Haryana has the highest unemployment rate at 25.7 percent. It is followed by Rajasthan with 24.5 per cent.
  • Jammu and Kashmir is in third place with 22.8 per cent. Tamil Nadu ranks 15th with 5.5 percent.
  • Unemployment in Odisha is said to be low due to measures taken by the government to create livelihood opportunities in both rural and urban areas.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel