Type Here to Get Search Results !

TNPSC 9th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


கிராமிய இசை கலாநிதி பட்டம்
  • கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் நாட்டுப்புற இசைப் பாடகர் வேல்முருகன் கச்சேரி நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவருக்கு தருமபுர ஆதினத்தால் 'கிராமிய இசை கலாநிதி' பட்டம் வழங்கப்பட்டது. 
  • மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பாடகர் இயேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்தார்.
  • தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முன்னிலையில் வேல்முருகனுக்கு பட்டம் வழங்கி தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது.
மேற்கு பிராந்திய கடற்படையின் விருது வழங்கும் விழா 2022
  • மேற்கு பிராந்திய கடற்படையின் விருது வழங்கும் விழா 2022 மும்பையில் 8, பிப்ரவரி 2022 அன்று நடைபெற்றது. மேற்கு பிராந்திய கடற்படையின் கொடி அலுவலர் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் இதில் பங்கேற்று வீர தீர மற்றும் தலைசிறந்த சேவைக்காக சுதந்திர தினம் 2020 மற்றும் குடியரசு தினம் 2021-ல் விருது அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
  • இதில் இரண்டு பேருக்கு நவ்சேனா பதக்கமும், (வீர தீரம்) ஒருவருக்கு நவ்சேனா (கடமை, அர்ப்பணிப்பு) பதக்கத்தையும் வழங்கினார். 7 பேருக்கு விஷிஸ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டன.
  • மொத்தமாக வழங்கப்படும் இந்த விருது கொவிட் தொற்று பாதிப்புக் காரணமாக தற்போது அந்தந்த படைப்பிரிவுகளில் தனித்தனியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்வாமித்வா திட்டத்தின் நிலை - தமிழ்நாடு குறித்த விவரங்கள்
  • கிராமப்புற பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து வரைபடமிடுதலுக்கான மத்திய திட்டமான ஸ்வாமித்வா, 2020-21-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. 
  • கிராமங்களில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகள் / ஆவணங்கள் வழங்குவதன் மூலம் சொத்துக்கான உரிமையை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பஞ்சாயத்துராஜ் அமைச்சகம், இந்திய ஆய்வு அமைப்பு, மாநில வருவாய் துறை, மாநில பஞ்சாயத்துராஜ் துறை, மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. 
  • இத்திட்டத்திற்காக இதுவரை 29 மாநிலங்கள் சர்வே ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய ஆய்வு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 103,644 கிராமங்களில் ட்ரோன் விமானங்கள் இயக்கப்பட்டு, 28,072 கிராமங்களில்   36,56,173 எண்ணிக்கையிலான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் 2 கிராமங்களிலும், புதுச்சேரியில் 19 கிராமங்களிலும் இத்திட்டத்தின் கீழ் ட்ரோன் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
தேசிய தாது வளர்ச்சிக் கழகம், 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 125% வளர்ச்சியை எட்டியுள்ளது
  • இந்தியாவின் அதிக அளவில் இரும்புத் தாது உற்பத்தி செய்யும் தேசிய தாது வளர்ச்சிக் கழகம், இது 2021 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ.8,522 கோடியுடன் ஒப்பிடுகையில், 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 125% வளர்ச்சியை எட்டி, ரூ.19,179 கோடி அளவுக்கு விற்று வரவை மேற்கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டின் இதே காலத்தில் கிடைத்த வரிக்கு முந்தைய வருவாயான ரூ.4,633 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.10,101 கோடி கிடைத்திருப்பது 118%  வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. 
  • வரிக்குப் பிந்தைய வருவாயாக கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கிடைத்த ரூ.3,415 கோடியுடன் ஒப்பிடுகையில், 2022 நிதியாண்டின் ரூ.7,583 கோடியாக அதிகரித்திருப்பது 122% வளர்ச்சியாகும்.
  • 2022 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் தேசிய தாது வளர்ச்சிக் கழகம், 10.65 மில்லியன் டன் இரும்பு தாதுவை உற்பத்தி செய்து 9.85 மில்லியன் டன் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel