Type Here to Get Search Results !

TNPSC 8th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடியது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார்.
  • அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவளித்து பேசினர். மசோதாவை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், நீட் விலக்கு பெற வேண்டியதின் அவசியத்தை அவையில் எடுத்துரைத்தார் முடிவில், சட்டப்பேரவையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததால் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
  • இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து மாலை 5.30 மணி அளவில் நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. 
  • 3வது முறையாக நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்&எஃப், பெயின் மற்றும் ஜிக்சி ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும் நிதியங்களால் அதீனாஹெல்த் குரூப் இன்க். வாங்கப்படுவதற்கு சிசிஐ ஒப்புதல்
  • சிசிஐ என்று அழைக்கப்படும் இந்தியப் போட்டியியல் ஆணையம், எச்&எஃப், பெயின் மற்றும் ஜிக்சி ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும் நிதியங்களால் அதீனாஹெல்த் குரூப் இன்க். வாங்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • சிறப்பு நோக்க நிதியங்கள் கையகப்படுத்துபவர்களால் நிறுவப்பட்டுள்ளன. முதலீடு செய்யப்பட்ட மூலதனம் பெருகும் நோக்கத்துடன் நிதியை முதலீடு செய்வதே அவர்களின் முதன்மை வணிகச் செயல்பாடு ஆகும்.
  • அமெரிக்காவின் மசாசூசெட்ஸை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான அத்தீனாஹெல்த் குழு இன்க், மருத்துவப் பதிவு, வருவாய் சுழற்சி, நோயாளி ஈடுபாடு, பராமரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள்தொகை சுகாதாரச் சேவைகள் உள்ளிட்டவற்றில் கிளவுட் அடிப்படையிலான சேவை வழங்கும் நிறுவனமாகும் .
இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளைக் கண்டறிந்துள்ளதால், சிறுதானியங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்
  • உலகளவில் சிறுதானியங்கள் ஏற்றுமதியில், இந்தியா 5வது பெரிய நாடாக உள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் இந்தியா 26.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
  • உலகளவில் சிறுதானியங்கள் ஏற்றுமதி கடந்த 2019ம் ஆண்டில், 380 மில்லியன் அமெரிக்க டாலராகவும், 2020ம் ஆண்டில் 402.7 மில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளது. 
  •  அமெரிக்கா, ரஷ்யா உக்ரேன், சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் சிறுதானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றன.
  • இந்தியாவிலிருந்து நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் சிறுதானியங்களை அதிகளவில் இறக்குமதி செய்கின்றன. லிபியா, துனிசியா, மொராக்கோ, இங்கிலாந்து, ஏமன், ஓமன் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் சிறுதானியங்களை இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.
  • மேற்கண்ட 10 நாடுகள், கடந்த 2020-21ம் ஆண்டில் 22.03 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியாவிலிருந்து சிறுதானியங்களை இறக்குமதி செய்தன. மற்ற நாடுகள் 5.13 மில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்கின்றன.
  • இந்திய ஏற்றுமதியாளர்கள் சிறுதானியங்களை புதிய சந்தைகளில் விறபனை செய்வதற்கான வசதிகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா) அறிவித்துள்ளது. இந்திய ஏற்றமதியாளர்கள் புதிய சந்தைகளில் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை அபெடா செய்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel