யு.ஜி.சி., தலைவராக ஜகதேஷ்குமார் நியமனம்
- யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு தலைவராக இருந்த பேராசிரியர் டி.பி.சிங் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். டிச.,7ல் இருந்து காலியாக இருந்த யு.ஜி.சி.,யின் தலைவர் பதவிக்கு, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தராக இருக்கும் எம்.ஜகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயது வரையிலும் இந்த பதவியை வகிப்பார். ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தராக 2016ல் பதவியேற்ற ஜகதேஷ்குமார் பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை கையாண்டார். இவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்து, கோரக்பூர் மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்களில் பேராசிரியராக பணியாற்றியவர்.
பொருளாதார வழித்தடத் திட்டம் பாகிஸ்தானுடன் சீனா புதிய ஒப்பந்தம்
- சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் வரை 3,000 கி.மீ. தொலைவுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை சீனா மேற்கொண்டுள்ளது.
- 6,000 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.49 லட்சம் கோடி) செலவில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக செல்லும் இந்தத் திட்டத்துக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
- இந்நிலையில், குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகவும், சீனாவின் அரசு உயரதிகாரிகளைச் சந்திப்பதற்காகவும் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் 4 நாள் பயணமாக வியாழக்கிழமை சீனா வந்தாா். அவருடன் பாகிஸ்தான் அரசின் முக்கியத் துறைகளின் அமைச்சா்களும் வந்துள்ளனா்.
- பெய்ஜிங்கில் சீனாவின் தேசிய மேம்பாடு, சீா்திருத்த ஆணையத்தின் தலைவா் ஹீ லிஃபங்கை இம்ரான் கான் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் சந்தித்துப் பேசினாா். அப்போது பாகிஸ்தானில் சீன முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
- அதைத் தொடா்ந்து, பொருளாதார வழித்தடத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இம்ரான் கானும் பாகிஸ்தான் முதலீட்டுத் துறை அமைச்சருமான முகமது அஸ்ஃபாா் ஆசனும் கையொப்பமிட்டனா்.
- அந்நிய நேரடி முதலீட்டைக் கவா்வது, தொழில் வளா்ச்சியை ஊக்கப்படுத்துவது, பொருளாதார மண்டலங்களை மேம்படுத்துவது, அரசு மற்றும் தனியாா் துறைகளில் திட்டங்களைத் தொடங்குவது- கண்காணிப்பது-நிறைவேற்றுவது ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
வான்புகழ் கொண்ட வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் சாலை
- அமெரிக்காவைச் சேர்ந்த வெர்ஜினியா மாகாணத்தின் பேர்பேக்ஸ் கவுண்டி பகுதியில் உள்ள சாலைக்கு 'VALLUVAR WAY' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெர்ஜினியா மாகாணத்தின் சபை உறுப்பினர்களில் ஒருவரான டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- வள்ளுவரின் பெயர் அமெரிக்க வீதிக்கு வைக்கப்பட்டுள்ளதை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற நூலாக இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது தமிழுக்கும், வள்ளுவருக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகக் கருதப்படுகிறது.
2022 குளிர்கால ஒலிம்பிக் - ஒற்றை வீரராக தேசிய கொடியை ஏந்திச் சென்ற இந்தியாவின் ஆரிஃப் கான்
- 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கில் மொத்தம் 15 பிரிவுகளில் மொத்தம் 109 பதக்கங்களுக்கான போட்டிகள் நடக்கவுள்ளது.
- பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக பெய்ஜிங், யாங்கிங் (Yanqing), ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய 3 இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் BIRDS NEST மைதானத்தில் தொடக்க விழா சிறப்பாக நடந்தது.
- முன்னதாக, சீனாவில் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமை மீறலை சுட்டிக்காட்டி, குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
- அதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை ஒலிம்பிக்கில் ஜோதி தீத்தை தீபமேந்துபவராக நியமித்ததை கண்டித்து இந்தியா சார்பிலும் அரசு பிரதிநிதிகள் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்துள்ளனர்.
- என்றாலும், இந்தியா சார்பில் குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாட காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஆரிஃப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.
- இவர் ஆல்பைன் ஸ்கீயிங் ஸ்லலோம் மற்றும் ஜெயிண்ட் ஸ்லாலோம் (alpine skiing slalom and the giant slalom) எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
- இந்நிலையில் ஐகானிக் பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழா அணிவகுப்பில் ஆரிஃப் கான் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.
- சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்த ஆரிப் கான் தனது பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சூழ இந்தியக் கொடியை தனியாளாக ஏந்திச் சென்றார்.
- வாகனங்களின் உறுதித்தன்மையை தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் மட்டுமே பரிசோதிப்பது குறித்தும் தானியங்கி சோதனை நிலையங்களின் அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- 01 ஏப்ரல் 2023 முதல் கனரக சரக்கு வாகனங்கள்/கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களுக்கும்
- நடுத்தர சரக்கு வாகனங்கள்/நடுத்தர பயணிகள் மோட்டார் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு (போக்குவரத்து) 01 ஜூன் 2024 முதல் நடைமுறைக்கு வரும்.