விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து ரபேல் போர் விமானம் சோதனை ஓட்டம்
- பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் 35 விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
- தற்போது, கடற்படைக்கும் புதிய போர் விமானங்கள் வாங்கப்படுகிறது. கடலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி சென்று தாக்குதல் நடத்தும் ரபேல் எம். போர் விமானத்தின் சோதனை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நடந்தது.
- 40,000 டன் எடை கொண்ட விக்ராந்த், இந்தியாவில் கட்டப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் அரபிக் கடல், வங்கக் கடலில் நடந்து வருகிறது.
- இந்நிலையில், விக்ராந்த் கப்பலில் ரபேல் எம்.போர் விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்திய கடற்படைக்கு முதல் கட்டமாக 26 போர் விமானங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
- இதில், பிரான்சின் ரபேல் எம். அல்லது அமெரிக்க தயாரிப்பான சூப்ர் ஹார்னெட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிறுவன போர் விமானத்தை கடற்படை வாங்க உள்ளது. இதற்காக சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தின் சோதனை அடுத்த மாதம் ஐஎன்எஸ் ஹன்சாவில் நடக்கிறது.
பெட்ரோல் கொள்முதல் செய்ய இலங்கைக்கு இந்தியா ரூ.3,750 கோடி கடனுதவி - இந்தியா வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்
- இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அன்றாடம் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது.
- இதனால் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய முடியாமல், அங்கு மின் பற்றாக்குறை நிலவுகிறது. தேவையான மின்சாரத்தை வினியோகிக்க முடியாமல் அரசின் மின்துறை சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.
- இதையடுத்து, மின்துறை அமைச்சர் காமினி லோகுகே இலங்கையில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்திடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இதனைத் தொடர்ந்து, இந்தியாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் தலா 40,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான கடனுதவி அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
- இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல். பீரிஸைத் தொடர்பு கொண்ட ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசுக்கு பெட்ரோல் கொள்முதல் செய்ய ரூ.3,750 கோடி கடனுதவி அளிக்க ஒப்புக் கொண்டார். இதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.
இரண்டு சதுப்பு நிலங்களுக்கு சர்வதேச முக்கியத்துவம்
- நடத்திய மாநாடு 1971 பிப். 2ல் நடந்தது. இதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப். 2ம் தேதி உலக சதுப்புநில தினமாக கொண்டாடப்படுகிறது.
- இதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்படுகின்றன.
- இந்த வகையில் நம் நாட்டில் 47 சதுப்பு நிலங்கள் ராம்சார் மாநாட்டின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் குஜராத்தில் உள்ள கிஜாடியா வனவிலங்கு சரணாலயம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பக்கிரா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை ராம்சார் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்தார். இதன் வாயிலாக ராம்சார் மாநாட்டின் கீழ் அடையாளம் காணப்பட்ட இடங்களின் எண்ணிக்கை நம் நாட்டில் 49 ஆக அதிகரித்துள்ளன.
டில்லி ஐகோர்ட்டுக்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க 'கொலீஜியம்' பரிந்துரை
- உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் குழு தேர்வு செய்து வருகிறது.டில்லி உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 60. ஆனால், தற்போது, 30 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
- இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஆறு பேரை, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
- மேலும், தெலுங்கானா உயர் நீதிமன்றத்துக்கு 12 பேரையும், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு ஒருவரையும் நீதிபதிகளாக நியமிக்க, கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உலகின் மிக நீண்ட மின்னல்
- அமெரிக்காவின் மிஸிஸிபி, லூசியானா, டெக்ஸாஸ் மாகாணங்களிடையே மிக நீளமான மின்னல் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
- 768.8 கி.மீ. நீளத்துக்கு ஏற்பட்ட இந்த மின்னல் உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மின்னல்களிலேயே அதிக நீளமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- போட்டி சட்டம் - 2002, 32வது பிரிவின் கீழ் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை குபோதா நிறுவனம் வாங்க இந்திய தொழிற்போட்டி ஆணையம்(சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்திய பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரிய விதிமுறைகள் 2011-ன்படி, முன்னுரிமை ஒதுக்கீடு மற்றும் கட்டாய டெண்டர் சலுகை மூலம் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை குபோதா நிறுவனம் வாங்குகிறது.
- குபோதா நிறுவனம் கடந்த 1890ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஜப்பான் நிறுவனம். இந்நிறுவனம் டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. மேலும் தண்ணீர் பாதுகாப்பு உட்பட வேளாண் தொடர்பான பொறியியல் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.
- எஸ்கார்ட்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனமாகும். இந்நிறுவனமும், வோண்துறை தொடர்பான இயந்திரங்கள் மற்றும் ரயில்வே சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், எஸ்கார்ட்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி நிறுவனங்கள் மூலம், வேளாண் துறை தொடர்பான தீர்வுகள், நிதி மற்றும் பங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
- எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), 2022 ஜனவரி மாதத்தில் 4.56 மெட்ரிக் டன் உற்பத்தியை எட்டியதோடு 4.24 மெட்ரிக் டன் இரும்புத் தாதுவை விற்றது.
- கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது உற்பத்தி 18.15 சதவீதமும், விற்பனை 13.4 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
- அதோடு, நிறுவனம் தொடங்கபட்டதில் இருந்து எந்த ஜனவரி மாதத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இரும்பு தாது உற்பத்தி மற்றும் விற்பனை இந்த ஜனவரியில் எட்டப்பட்டுள்ளது.
- 2022 ஜனவரி வரையிலான 2022-ம் நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் உற்பத்தி 32.88 மெட்ரிக் டன் ஆகவும், விற்பனை 32.60 மெட்ரிக் டன் ஆகவும் இருந்தது.
- கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது உற்பத்தி 28.14 சதவீதமும், விற்பனை 25.34 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
- மேலும், இதுவரையிலான எந்த பத்து மாதங்களிலும் இல்லாத அளவுக்கு அதிக இரும்பு தாது உற்பத்தி மற்றும் விற்பனை எட்டப்பட்டுள்ளது.