TAMIL
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான "ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்" விருதுக்கு நியுசிலாந்தின் டேரில் மிட்செல் தேர்வாகி உள்ளார்.
- கடந்த ஆண்டு இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இங்கிலாந்து நிர்னயித்த 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது.
- அந்த ஆட்டத்தில் நியுசிலாந்து சார்பாக டேரில் மிட்சல், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் நீஷம் தரையோடு அடித்த பந்து, அந்த பந்தை வீசிய இங்கிலாந்து வீரர் அடில் ரஷித்தை நோக்கி நேராக வந்தது.
- அப்போது எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் ரன் அவுட்டாகாமல் இருந்து கிரீஸ்க்குள் பேட்டை வைக்க முயற்சி செய்தபோது பந்து வீச்சாளர் அடில் ரஷித் மீது பயங்கரமாக மோதிக்கொண்டார்.
- ஆனால் டேரில் மிட்செல் மீது தவறு இல்லாத நிலையிலும், ரஷித் தடுமாறியதால் ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் டேரில் மிட்செல் ரன் ஓட மறுத்துவிட்டார். அப்போது, டேரில் மிட்செலின் நேர்மையை பார்த்து கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டினர்.
- இந்த நிகழ்வுக்காக தற்போது ஐ.சி.சி., டேரில் மிட்செலுக்கு "ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்" விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
- New Zealand's Daryl Mitchell has been nominated for this year's Spirit of Cricket "award by the International Cricket Council.
- Last year's Twenty20 World Cup cricket tournament was held in the United Arab Emirates. In the semi-final match between England and New Zealand teams held a multi-examination.
- Batting second, New Zealand were playing towards England's target of 167 runs. While Daryl Mitchell and James Neesham were batting for New Zealand in the match, the ball hit the ground by James Neesham and came straight towards England's bowler Adil Rashid.
- Mitchell, who was then on the opposite end of the innings, collided violently with bowler Adil Rashid as Mitchell tried to put the bat into the crease from a run out.
- But Daryl Mitchell refused to run, despite the fact that there was nothing wrong with him and Rashid stumbled and had a chance to take the run. Back then, cricket critics praised Daryl Mitchell for his honesty. The ICC is currently honoring Daryl Mitchell with the "Spirit of Cricket" award for this event.