எல்லை மேம்பாட்டிற்கு ரூ.13,020 கோடி அனுமதி
- இந்தியா-பாக். எல்லை 3323 கி.மீ. உள்ளது. இதில் 775 கி.மீ. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியும் அடங்கும். அதுபோல வங்கதேசம் 4096 கி.மீ. சீனா 3488 கி.மீ. நேபாளம் 1751 கி.மீ. பூடான் மற்றும் மியான்மர் உடன் முறையே 699 கி.மீ. மற்றும் 1643 கி.மீ. எல்லைகளை இந்தியா பராமரித்து வருகிறது.
- இந்த எல்லைகளில் தடுப்பு வேலிகள் அமைப்பது விளக்குகள் பொருத்துவது, சாலைகள், சுங்கச் சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் எல்லை கட்டமைப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இத்தகைய எல்லை நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 2021 ஏப். - 2026 மார்ச் வரையிலான ஐந்து ஆண்டுகளில் 13ஆயிரத்து 20 கோடி ரூபாய் செலவிட மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக அளவில் நம்பர் 1 சதுரங்க வீரரை வீழ்த்திய 16 வயது சென்னை சிறுவன்
- ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை 8-வது சுற்றில் எதிர்கொண்டார்.
- இதில், பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கி, தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார். இதனால் பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.
கடற்படை ஆய்வு 2022
- ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் "கடற்படை ஆய்வு 2022" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கடற்படையின் 63 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் மற்றும் 50 விமானங்கள் அணிவகுத்தன. சுமார் 10,000 வீரர்கள் கடற்படை யின் வலிமையை பறைசாற்றினர்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் சென்று அணிவகுப்பை பார்வையிட்ட அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
நீலப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்
- ஐரோப்பிய நாடான பிரான்ஸுக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜீன் ஈவ் லெடிரையனை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.
- நீலப் பொருளாதாரம், கடல்சாா் நிா்வாகம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 'ஐரோப்பிய யூனியன்-இந்தியா ஒத்துழைப்பு 2025-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டி' என்ற ஒப்பந்தம் கையொப்பமானது.
- கடல்வழி வா்த்தகம், கப்பல்கட்டும் தொழில், மீன்பிடித் தொழில், கடல்சாா் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கடல் கண்காணிப்பு, கடல் பல்லுயிா்ப் பெருக்கம், கடற்கரை கண்காணிப்பு-மேலாண்மை, கடல்சாா் பசுமை சுற்றுலா, உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து, கடல்சாா் கொள்கை குறித்த திட்டமிடல் உள்ளிட்டவற்றில் ஒத்துழைத்து பணியாற்ற அந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
- இந்திய விமானப்படை மற்றும் ஓமன் ராயல் ஏர்ஃபோர்ஸ் ஆகியவை ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் 2022 பிப்ரவரி 21 முதல் 25 வரை ஈஸ்டர்ன் பிரிட்ஜ்-VI என்ற இருதரப்பு பயிற்சியில் பங்கேற்கின்றன.
- பயிற்சியின் ஆறாவது பதிப்பான இது, இரு விமானப் படைகளுக்கிடையிலான செயல்பாட்டுத் திறன் மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.
- இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை மற்றும் ஓமன் விமானப்படை பங்கேற்பது இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, தொழில்முறை தொடர்பு, அனுபவங்களின் பரிமாற்றம் மற்றும் செயல்பாட்டு அறிவை மேம்படுத்தும்.