TAMIL
- பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பாண்டில் 9494 பணியிடங்களை நிரப்புவதற்கான, 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.
- அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தேர்வு ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்.
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் 2022 ஜூன் இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வு நடைபெறுகிறது. அதாவது 3902 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என 4989 பணியிடங்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்.
- மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 167 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.
- பொறியியல் கல்லூரிகளில் 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும்.
- ஆசிரியர் பணியின் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இந்த உத்தேச தேர்வுகால திட்ட அட்டவணை பயனுள்ளதாக இருக்கும்.
- The Tamil Nadu Teachers' Selection Board has released the examination schedule for the year 2022 to fill 9494 vacancies in the field of school education and higher education. Accordingly, 9494 teacher, lecturer and assistant professor posts are to be filled by 2022 through the Teacher Selection Board.
- Teacher Qualification Examination 2022 - Examination will be held in the 2nd week of April. The announcement will be made next week.
- The competitive examination will be held in the second week of June 2022 again for those who have passed the Teacher Qualification Examination. That means 4989 positions, including 3902 intermediate teacher and 1087 graduate teacher positions, will be selected in the week of June 2nd. The announcement will be made in May.
- Selection for 167 lecturer positions at the State Institute of Educational Research Training will take place in the week of June 2nd. The announcement will be made in May.
- Selection for 1334 Assistant Professor posts in Government Colleges of Arts and Sciences will be held in the 2nd week of November. The announcement will be made in July. The first phase of certification verification will take place in the first week of August.
- Selection for 493 lecturer posts in Government Polytechnic Colleges will be held in the 2nd week of November. The announcement will be made in August.
- Selection for 104 Assistant Professor posts in Engineering Colleges will be held in the 2nd week of December. The announcement will be made in September.
- This proposed examination schedule published by the Teacher Selection Board will be useful for those who are preparing for the competitive examination for the teaching job.