Type Here to Get Search Results !

TNPSC 13th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது .
  • பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் மூலம் ஈஓஎஸ் -04 என்ற செயற்கைக்கோளும் , இன்ஸ்பயர் சாட் -1 மற்றும் ஐ . என் . எஸ் -2 டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பூவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது .
  • இந்த செய்ற்கைக்கோள்களில் பூமியில் விவசாயம், வனம், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா உள்ளது. புவியை கண்காணிக்கவுள்ள இந்த செயற்கைக்கோளின் மொத்த 1,170 கிலோ.
  • இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மொத்தம் 10 ஆண்டுகள். இஸ்ரோ தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது. அதேபோல், இந்த ஆண்டில் (2022) இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்.
நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த ரூ.26,275 கோடி - மத்திய அரசு ஒப்புதல்
  • அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025-26-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.26,275 கோடியை செலவிடவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது.
  • இந்தத் தொகையானது ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், புதிதாக பட்டாலியன்களை உருவாக்குதல், அதிநவீன ஃபாரன்சிக் (தடய அறிவியல்) ஆய்வகங்கள் உருவாக்குதல், இதர காவல் துறை கருவிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு செலவிடப்படும்.
  • காவல் துறையை நவீனப்படுத்துதல் (எம்பிஎஃப்) திட்டத்தின் கீழ் இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீர், தீவிரவாதம் பாதித்துள்ள வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்கள் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் காவல் துறையை மேம்படுத்த ரூ.18,839 கோடி செலவிடப்படும்.
  • மேலும் ரூ.4,846 கோடியானது மாநில காவல் துறையின் படைகளை மேம்படுத்த செலவு செய்யப்படும். ஃபாரன்சிக் ஆய்வகங்களை மேம்படுத்துதல், யூனியன் பிரதேசங்களில் காவல் துறையை மேம்படுத்த ரூ.2,080.50 கோடி செலவிடப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel