நாட்டில் மின்கழிவு மேலாண்மை
- மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ன் கீழ், 21 வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் தங்கள் வாழ்நாளின் முடிவில் மின்-கழிவு ஆகிவிடும்
- நாடு முழுவதும் 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதியாண்டுகளில், முறையே 7,08,445 டன், 7,71,215 மற்றும் 10,14,961.2 டன் மின் கழிவு உருவானது.
- அபாயகரமான மற்றும் பிற கழிவுகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்து) விதிகள், 2016-ன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
- 04-04-2016 முதல் மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் நாட்டில் மின் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக மின்-கழிவுகள் அதிகரிப்பு காணப்படுகிறது.
- குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர “தோட்டத் திருவிழாவை குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று (10.02.2022) திறந்து வைத்தார்.
- இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையின் முகலாய தோட்டம், பிப்ரவரி 12, 2022 முதல் மார்ச் 16, 2022 வரை (பராமரிப்பு தினமான திங்கட்கிழமைகள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (கடைசி அனுமதி மாலை 4 மணிக்கு) பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்
- சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- முனீஸ்வர்நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க முன்னதாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
- இந்நிலையில் அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விரைவில் முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்கவுள்ளார்.
- அதே சமயம்,கொலிஜியம் பரிந்துரையின்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள்,மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய புயலில் சிக்கிய 40 செயற்கைக் கோள்கள் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்தன
- கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூரிய புயல், வளிமண்டலத்தை அடா்த்தியாக்கியது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் (ஒரு செயற்கைக் கோளின் எடை 260 கிலோ) 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன.
- சில செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகும் தறுவாயில் உள்ளன. இந்த விபத்தைத் தவிா்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இந்த சம்பவத்தால் புவி வட்டப் பாதையிலோ, பூமியிலோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
- பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமாா் 2,000 ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் மூலம் உலகின் தொலைதூர இடங்களுக்கு இணையவழி சேவை கிடைத்து வருகிறது. இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
- பிப்ரவரி 2022 மாதம் மாதத்துக்கான சீராய்வு கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 8ம் தேதி துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.
- ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; 4 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல், ரிசர்வ்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக உள்ளது.
- வட்டியில் மாற்றம் வேண்டாம் என, குழு உறுப்பினர்களில் 5 பேர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, ரெப்போ வட்டியை 1.15 சதவீதம் குறைத்துள்ளது.தொடர்ந்து 10வது முறையாக வட்டி மாற்றம் செய்யப்படவில்லை.
- சில்லரை விலை பண வீக்கம், 2022-23 நிதியாண்டில் 4.5 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில் 5.3 சதவீதமாகவும் இருக்கும்.
- வரும் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), 7.8 சதவீதமாக இருக்கும்.
- இ-ருபி எனப்படும் பிரீபெய்டு டிஜிட்டல் வவுச்சர்களுக்கான உச்ச வரம்பு தற்போது ₹10,000 ஆக உள்ளது. இது ₹1 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மேலும், ஒரு முறைக்குமேல் இந்த வவுச்சரை பயன்படுத்தலாம்.
- வணிக பரிவர்த்தனைகளுக்கு என்ஏசிஎச் வரம்பு ₹1 கோடியில் இருந்து ₹3 கோடியாக உயர்த்தப்படுகிறது.
- இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு விஆர்ஆர் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு வரம்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ₹1 லட்சம் கோடியில் இருந்து ₹2.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது, என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அணுக்கரு பிணைப்பில் அதிக ஆற்றல் - ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை
- அணுக்களை அதிக வெப்பநிலையில் இணைப்பது மூலம் அணுக்கருக்கள் இணைந்து ஆற்றல் வெளிப்படுவது வழக்கம். தற்போது வரை அணுக்கரு இணைப்பு மூலம் 22 மெகாஜூல் ஆற்றலே வெளிக்கொணரப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகள் பலனாக 59 மெகாஜூல் ஆற்றல் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு அருகே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. அறிவியலின் முன் நின்ற மிகப்பெரிய சவாலுக்கு தற்போது தீர்வை நெருங்கியுள்ளதாக இங்கிலாந்து அணுசக்தி ஆணையத்தின் தலைவர் இயான் சாப்மேன் தெரிவித்துள்ளார்.
- உலகெங்கும் தற்போது பெட்ரோலியமே பிரதான எரிபொருளாக திகழும் நிலையில் அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.
- இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத, நடைமுறையில் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய எரிபொருளை கண்டறியும் முயற்சி உலகெங்கும் நடந்துவரும் நிலையில் அணுக்கரு இணைவு மூலம் அதிக ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளது மிக முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பான அணுமின்னுற்பத்தி முறையாகவும் கருதப்படுகிறது.