- இந்திய கடலோர காவல் படை தினம் / INDIA COAST GUARD DAY: சுருக்கமாக ஐசிஜி எனப்படும் இந்திய கடலோர காவல் படையானது, இந்திய கடல் எல்லைகளில் ஆண்டு முழுவதிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அமைப்பாகும்.
- அதுவே இந்திய கடற்படையானது, தேசிய மற்றும் சர்வதேச கடல் பகுதிகளில் விரிவான மற்றும் மிக முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.
- 46ஆவது இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படும் நிலையில், கடலோர காவல் படைக்கும், இந்திய கடற்படைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
செயல்பாடுகள்
- இந்திய கடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது மற்றும் கடற்கரை சூழலியலை காப்பது மற்றும் வேட்டையாடுபவர்களை பிடிப்பது மற்றும் மீனவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை கடலோர காவல்படை மேற்கொண்டு வருகிறது.
- இது மட்டுமல்லாமல் கடல் கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது என்றாலும், இது கடற்படை மற்றும் பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.
நோக்கம்
- இந்திய கடலோர காவல் படையின் எல்லை, இந்திய கடல் பகுதிக்கு மட்டும் உட்பட்டதாகும். ஆனால், இந்திய கடற்படை பணிகள் என்பது பெர்சியன் கல்ஃப், சோமாளி பெனின்சுலா மற்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் ஆப் மலாக்கா போன்ற பகுதிகள் வரை விரிவடைந்தது ஆகும்.
- இதேபோன்று தென் மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகள் மற்றும் மெடிடேரியன் கடல்பகுதி ஆகிய இடங்களிலும் இந்திய கடற்படை பணியாற்றி வருகிறது.
- சர்வதேச எல்லைகளில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் போர் சாதனங்களை பராமரிப்பது போன்ற பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
தொடங்கப்பட்ட தேதி
- இந்திய கடலோர காவல்படை கடந்த 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட அமைப்பாகும். ரோந்து மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான பிரத்யேக அமைப்பாக உருவாக்கப்பட்டது.
- இந்திய கடற்படையானது, இந்திய ஆயுதப் படைகளின் ஒரு பிரிவாக 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்டது.
எண்ணிக்கை மற்றும் பலம்
- இந்திய கடலோர காவல்படையில் 20,000 வீரர்கள் மற்றும் 160 கப்பல்கள் மற்றும் 62 விமானங்கள் உள்ளிட்டவை உள்ளன. கடற்படையில் 67,000 வீரர்கள் மற்றும் 75,000 ரிசர்வ் வீரர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர். 150 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படையிடம் உள்ளன.
செயல்பாட்டு நிலையங்கள்
- இந்திய கடலோர காவல்படைக்கு மொத்தம் 42 நிலையங்கள் உள்ளன. இந்திய கடற்படையில் 67 நிலையங்கள் உள்ளன. இவை மேற்கு கடற்படை தளம், தெற்கு கடற்படை தளம் மற்றும் அந்தமான நிகோபார் கடற்படை தளம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
- இந்திய கடலோர காவல்படை தினம் 2023க்கான தீம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- The Indian Coast Guard, abbreviated as ICG, is a government body that conducts various missions along the Indian maritime borders throughout the year.
- It is the Indian Navy's comprehensive and most important operations in national and international maritime areas.
- As the 46th Indian Coast Guard Day is being celebrated, we need to know the fundamental differences between the Coast Guard and the Indian Navy.
- The Coast Guard has been tasked with patrolling Indian waters, preventing drug trafficking and protecting the coastal ecosystem, as well as catching poachers and assisting fishermen.
- Not only this but the organization is also taking measures to prevent pirates, but it is taking place in collaboration with the Navy and other countries.
- The boundaries of the Indian Coast Guard are restricted to the Indian Ocean. However, the Indian naval mission extended to areas such as the Persian Gulf, the Somali Peninsula and the Straits of Malacca.
- Similarly, the Indian Navy is operating in the South and East China Sea and the Mediterranean.
- The Navy has been tasked with training soldiers and maintaining war equipment to ensure India's security at international borders.
- The Indian Coast Guard was established on February 1, 1977. Developed as a dedicated organization to prevent patrols and drug trafficking.
- The Indian Navy was formed on 26 January 1950 as a division of the Indian Armed Forces.
- The Indian Coast Guard has 20,000 soldiers and 160 ships and 62 aircraft. The Navy serves 67,000 soldiers and 75,000 reserve soldiers. The Navy has 150 ships and submarines.
- The Indian Coast Guard has a total of 42 stations. The Indian Navy has 67 bases. These are divided into 3 divisions namely Western Naval Base, Southern Naval Base and Andaman and Nicobar Naval Base. A further 7 stations are under construction.
- The theme for Indian Coast Guard Day 2023 has yet to be announced.