Type Here to Get Search Results !

முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023 / FIRST G20 EDUCATION WORKING GROUP


 • முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023 / FIRST G20 EDUCATION WORKING GROUP: முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ நடத்துவதற்கு சென்னை தயாராகிறது. பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 30 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்து 80 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 
 • ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கை சென்னை ஐஐடி நாளை (ஜன.31) நடத்த உள்ளது.
 • ‘டிஜிட்டல் கல்வி முன்முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்பாடு’ குறித்து ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தனித்துவ முன்முயற்சி காட்சிப்படுத்தப்படுகிறது.
 • ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கை சென்னை ஐஐடி நடத்துவதுடன் சென்னையில் முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ தமிழ்நாடு நடத்தவிருக்கிறது.
 • இந்தக் கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளர் கே சஞ்சய் மூர்த்தி தலைமை தாங்குவார். அனைவருக்கும் எளிதில் அணுகவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான கல்வியை அளிப்பதற்கு ஜி-20 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி உரையாற்றுவார்.
 • மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை கற்போருக்கு எளிதில் அணுகக் கூடிய மற்றும் சமமான கல்வி வழங்குதல், உயர்தரமான உயர்கல்வி கற்றல் வாய்ப்புகளை விரிவாக்குதல், திறன் கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஒருநாள் கருத்தரங்கில் 3 அமர்வுகளில் இடம் பெறும். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், தேசிய கல்வித் தொழில்நுட்ப அமைப்பின் (என்இடிஎஃப்) தலைவர் அனில் சஹஸ்ரபுதே, மத்திய அரசின் திறன் கல்வித்துறைச் செயலாளர் அதுல்குமார் திவாரி ஆகியோர் இந்த அமர்வுகளுக்கு தலைமை தாங்குவார்கள். 
 • இந்த ஒரு நாள் நிகழ்வில் 19 நாடுகளைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். மேலும், ஐஐடி சென்னையின், வரலாறு, தொலைநோக்கு, திட்டம், இயக்கம் ஆகியவற்றை ஆடியோ வழியாக எடுத்துரைத்தல், பாரம்பரிய மையம், புதிய கண்டுபிடிப்புக்கான மையம், அறிவுசார் மையம் ஆகிய சிறப்புமிக்க 3 மையங்களை பார்வையிடுதல் ஆகியவையும் இந்நாளில் இடம் பெறும்.
 • இந்த கருத்தரங்கு ஜி-20 உறுப்புநாடுகளிடையே பேரார்வத்தை உருவாக்கியிருப்பதாக பேராசிரியர் காமகோடி தெரிவித்தார். பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்துறையில் தங்களின் மிகச் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைக்கும் உள்ளீடுகளை 15 நாடுகள் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜி-20 கல்வி பணிக்குழு
 • உயர்கல்வித்துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி தலைமையில் ஜி 20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் ஃபிப்ரவரி 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய தலைமைத்துவத்துவம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு செயல் வடிவம் அளிக்கிறது.
 • ஜி 20 முதலாவது கல்விப் பணிக்குழு கூட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைக்கிறார்.
 • இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு நீண்ட கால, நிலையான வகையில் எவ்விதம் தீர்வு காண வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். 
 • 30 நாடுகளைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள், சர்வேதேச அமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்துமான, தரமானக் கல்வியை வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
 • ஃபிப்ரவரி 1-ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் பிரதிநிதிகளை சென்னைக்கு அருகே உள்ள மகாபலிபுரத்தின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய புராதன இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. 
 • இதன் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளமான, கட்டடக்கலைப் பாரம்பரியம் மற்றும் உயர்தர கைவினையைப் பிரதிபலிக்கும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மகாபலிபுரம் புராதன சின்னங்களை இந்த நிகழ்வில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள்.
 • பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் உணவு வகைகளின் ருசிகரமான அனுபவத்தையும், வலிமையான கலாச்சார வடிவங்களை கண்டுகளிக்கவும் ஏதுவாக பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
ENGLISH
 • Chennai is gearing up to host the first G-20 Education Working Group 2023. 80 delegates from 30 countries and international organizations are expected to participate in the events on February 1 and 2.
 • IIT Chennai will hold a seminar on 'Role of Digital Technology in Education' tomorrow (Jan.31).
 • A unique initiative from G-20 countries on 'Digital Education Initiatives and Use of Digital Technologies' is showcased.
 • IIT Chennai will host a seminar on 'Role of Digital Technology in Education' and Tamil Nadu will host the first G-20 Education Working Group 2023 in Chennai.
 • The seminar will be chaired by K Sanjay Murthy, Secretary, Higher Education, Central Government. Prof. V Kamakody, Director, IIT, Chennai, will address the use of digital technologies developed by G-20 member countries to provide inclusive and equitable education that is not easily accessible to all.
 • Providing accessible and equitable education for K-12 learners, expanding high-quality higher education learning opportunities, developing technologies for skills education and training will be covered in 3 sessions at this one-day seminar. School Education Secretary Sanjay Kumar, National Education Technology Organization (NETF) Chairman Anil Sahasrabude, Central Government Skill Education Secretary Atul Kumar Tiwari will preside over these sessions.
 • 69 delegates from 19 countries will participate in this one-day event. Also, the history, vision, plan and movement of IIT Chennai will be presented through audio, visit to 3 special centers namely Heritage Centre, Innovation Center and Intellectual Center will also take place on this day.
 • Professor Kamakody said that the seminar has generated enthusiasm among the G-20 member countries. He said 15 countries have sent entries highlighting their best practices in digital technology for school education, higher education and capacity building.
G-20 Education Working Group
 • The first meeting of the G20 Education Working Group, chaired by Higher Education Secretary Mr K Sanjay Murthy, is set to take place on February 1, giving concrete shape to the steps to be taken by the Indian leadership.
 • Union Minister of State for Information Broadcasting, Fisheries, Animal Husbandry and Dairy Dr. L Murugan will inaugurate the first meeting of the G20 Education Working Group.
 • In this two-day meeting, there will be a detailed discussion on how to find a long-term, sustainable solution to the education-related problems faced by various countries at the global level.
 • 80 delegates from 30 countries, international organizations will discuss in detail the provision of inclusive, equitable, relevant and quality education.
 • A tour of the UNESCO World Heritage Site of Mahabalipuram near Chennai is planned for the delegates who will attend the meeting on February 1.
 • Through this, B.C. Delegates participating in the event will visit the UNESCO World Heritage Site of Mahabalipuram, which reflects a rich architectural heritage and high-quality craftsmanship dating back to the early 6th century.
 • Various events have been arranged for the delegates to experience the delicious cuisine of Tamil Nadu and explore the strong cultural patterns.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel