Type Here to Get Search Results !

TNPSC 19th FEBRUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வேளாண் வளர்ச்சிக்கான நீர்நிலைகள் புதுப்பிப்பு திட்ட அமலாக்கம்: ரூ.869 கோடி கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, உலக வங்கி கையெழுத்து

  • புத்தாக்க மேம்பாடு மூலம் வேளாண் வளர்ச்சிக்கான நீர்நிலைகள் புதுப்பிப்பு திட்டத்தை  அமல்படுத்த,  ரூ.869 கோடி  கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு,  கர்நாடகா மற்றும் ஒடிசா அரசுகள், உலக வங்கியுடன் கையெழுத்திட்டுள்ளன. 
  • இது தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள அமைப்புகள் மேம்படுத்தப்பட்ட நீர்நிலை மேலாண்மை நடைமுறைகளை பின்பற்ற உதவும்.
  • இதன் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையிலான விவசாய முறைகளை பின்பற்றி, விவசாயிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் சிறப்பான வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவும்.
  • 2030ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களை வளமாக்கவும், 2023ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நீர்நிலை மேலாண்மையை திறம்பட அமல்படுத்துதல், மானாவாரி பகுதிகளில் வாழ்வாதாரத்தை அதிகரிக்க உதவும்.
  • மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (IBRD), கர்நாடகாவுக்கு ரூ.453.5 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.370 கோடியும் கடனுதவி அளிக்கும். மீதம் ரூ.45.5 கோடி மத்திய அரசின் நிலவளத்துறைக்கு அளிக்கப்படும். இந்த ரூ.869 கோடி (115 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனை 15 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்
இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டத்தை 2022-23 முதல் 2025-26 வரை அமலாக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது
  • 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு மொத்தம் ரூ.3,375 கோடி செலவில் உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டத்தை அமலாக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷாவின் வழிகாட்டுதல்படியான இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டத்தின் இரண்டாவது கட்டம் தீவிரமான, நவீன காவல் முறையை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
  • அதிவேக தொடர்புடன் இணையதள கட்டமைப்பு மூலம் அர்ப்பணிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்டதாக இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டம் இருக்கும். 
  • இந்தத் திட்டத்தின் அமலாக்கத்திற்கு தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) ஒத்துழைப்புடன் தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு பொறுப்பாக இருக்கும். மேலும் இந்தத் திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் அமலாக்கப்படும்.
நகராட்சி திடக்கழிவு அடிப்படையிலான கோபர்-தான் ஆலையை இந்தோரில் பிரதமர் திறந்து வைத்தார்
  • இந்தோரில் “கோபர்-தான் (உயிரி-அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு) ஆலையை” பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். மத்தியப் பிரதேச ஆளுநர் திரு. மங்குபாய் சி படேல், மத்தியப் பிரதேச முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் திரு. ஹர்தீப் சிங் பூரி, டாக்டர். வீரேந்திர குமார் மற்றும் திரு. கவுஷல் கிஷோர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • "குப்பை இல்லாத நகரங்களை" உருவாக்கும் ஒட்டுமொத்த லட்சியத்துடன், தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0-ஐ பிரதமர் சமீபத்தில் தொடங்கினார். 
  • “குப்பையில் இருந்து வளம்” மற்றும் “சுற்று பொருளாதாரம்” என்ற கொள்கைகளின் கீழ் வளங்களின் மீட்பை அதிகரிப்பதற்காக இந்த பணி செயல்படுத்தப்படுகிறது. இந்தோர்  உயிரி-அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையில் இந்த இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • இன்று திறக்கப்பட்ட இந்த ஆலை, நாள் ஒன்றுக்கு 550 டன் ஈர இயற்கை கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. நாளொன்றுக்கு சுமார் 17,000 கிலோ அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் 100 டன் இயற்கை உரத்தை இது உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • பூஜ்ஜிய நிலமாசு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆலை, எந்தவித கழிவுகளையும் உருவாக்காது. கூடுதலாக, பல சுற்றுச்சூழல் நன்மைகளை இத்திட்டம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், இயற்கை உரத்துடன் பசுமை எரிசக்தியை வழங்குதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.
  • திட்டத்தை செயல்படுத்துவதற்காக. இந்தோர்  கிளீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் சிறப்பு நோக்க அமைப்பு  மாநகராட்சி மற்றும் இண்டோ என்விரோ இண்டக்ரேடட் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டால் (ஐஈஐஎஸ்எல்) பொது தனியார் கூட்டு முறையின் கீழ் ஐஈஐஎஸ்எல்லின் 100% மூலதன முதலீடான ரூ 150 கோடியுடன் உருவாக்கப்பட்டது. 
  • ஆலையால் உற்பத்தி செய்யப்படும் குறைந்தபட்சம் 50% அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தோர்  மாநகராட்சி வாங்கி முன்மாதிரி முயற்சியாக 400 நகரப் பேருந்துகளை இயக்கும். மீதமுள்ள அளவு எரிவாயு திறந்தவெளி சந்தையில் விற்கப்படும். விவசாய மற்றும் தோட்டக்கலை பயன்பாட்டில் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரத்தை பயன்படுத்த இது உதவும்.

வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவை - தமிழகம் உட்பட 100 இடங்களில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • வேளாண் பணிகளில் நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
  • இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த கருடா ஏர்ஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. இவை தமிழகம் உட்படநாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ட்ரோன்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

40 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவில் ஐஓசி அமர்வு

  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அல்லது ஐஓசி அமர்வு என்பது, அந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டம் ஆகும். 
  • இந்தக் கமிட்டியே ஒலிம்பிக்கை நடத்தும் நகரங்களை தேர்வு செய்வது, ஒலிம்பிக் சாசனத்தை திருத்தம் செய்வது, பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளில் முடிவெடுக்கும் என்பதால், ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐஓசி அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
  • சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த அமர்வில் கலந்துகொள்வார்கள். 
  • அதன்படி, இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139வது ஐஓசி அமர்வு நடந்தது. இந்த அமர்வில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ஐஓசி உறுப்பினராக உள்ள நீட்டா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஐஓசியின் அடுத்த அமர்வை இந்தியாவின் மும்பையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
  • இந்தக் கோரிக்கைக்கு நடந்த வாக்கெடுப்பில் 82 வாக்குகளில் 75 வாக்குகள் மும்பையில் நடத்துவதற்கு ஆதரவாக வாக்களிக்க, அதன்படி, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வு மும்பையில் நடத்துவது உறுதியாகியது. 1983-க்குப் பிறகு முதல் முறையாக ஐஓசி அமர்வு இந்தியாவில் நடக்கவுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel