Type Here to Get Search Results !

உலக தாய்மொழி தினம் / WORLD MOTHER LANGUAGE DAY

 

TAMIL
  • ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது.
  • யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், ''அனைத்து தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் தாய்மொழி தவிர பிற மொழிகளில் கற்பிக்கப்படுகிறார்கள்.
  • உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. 
  • இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாசாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. 
  • இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும்'' என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
கரும்பொருள் 
  • 2022ம் ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு 
  • இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். 
  • வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.
  • இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. 
  • இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
  • இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். 
  • தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம்
  • இதைப்படிக்கின்ற போது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர்.
  • தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ENGLISH
  • The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) has declared February 21 as World Mother Language Day.
  • The UNESCO report emphasizes multilingual learning through the mother tongue. It also states that learning in the mother tongue is a fundamental right. But, '' all sides still have a long way to go to ensure education in the mother tongue. The majority are taught in languages ​​other than their mother tongue.
  • Forty percent of the world's population does not have access to the language they speak or understand.
  • Today, over 7,000 languages ​​are spoken worldwide. But many languages ​​are on the verge of extinction. When a language becomes extinct, so does culture and intellectual heritage.
  • In today's digital world connecting languages ​​and creating learning content is essential. Distance learning methods based on the mother tongue should be integrated, ”UNESCO said.
Theme
  • Mother Language Day 2022 has been declared a "UNESCO Use of Technology for Multilingual Learning" concept.
History
  • Following the partition of Pakistan from India, Pakistan was divided into two parts, West and East. Of these, East Pakistan and present-day Bangladesh.
  • In East Pakistan, which has a large Bengali-speaking population, Urdu was the only national language. Despite being of the same religion, Urdu, the most widely spoken language in West Pakistan, is not accepted by the people as it is being imposed in East Pakistan.
  • Following this, the 'Bengali Language Movement' was formed on February 21, 1952 to demand Bengali as the national language in East Pakistan.
  • Following this, students from the Bengali language movement and various parties, including political leaders, engaged in a series of struggles. As a result of the action of the police department, 4 students were killed. The struggle spread vigorously. In 1956, Bengali was declared the language of East Pakistan.
  • Subsequently, in 1998, Bangladeshi scholar Rabiqul Islam proposed at UNESCO that February 21 be observed as World Mother Languages ​​Day every year in memory of the victims of the fighting in Dhaka.
  • February 21, 1999 was declared International Mother Language Day by UNESCO to commemorate the victims of the Mother Tongue Movement and to protect the mother tongue rights of all people. Since 2000, February 21 has been celebrated as World Mother Languages ​​Day.
Language struggle in Tamil Nadu
  • As you read this, many may remember the struggles against Hindi dumping in India and Tamil Nadu in 1938 and 1965, as in Bangladesh. Nadarasan and Thalamuthu were killed in 1939 in a struggle against Hindi dumping in Tamil Nadu.
  • More than 100 people were killed in the ensuing 1965 second phase of the conflict. Tamil Nadu Martyrs' Day is observed on January 25 in Tamil Nadu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel