Type Here to Get Search Results !

2021ல இந்தியா ஆசிய வளர்ச்சி வங்கியில் வாங்கிய கடன் / LOAN FROM ASIAN DEVELOPMENT BANK TO INDIA IN 2021

 

TAMIL
  • ஆசிய வளர்ச்சி வங்கி எனப்படும் ஏசியன் டெவலப்மன்ட் பேங்க் 1966 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நிறுவப்பட்டது. இந்தியா உள்ளிட்ட அறுபத்தி ஏழு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட வங்கி சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கடன்கள் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றுக்காக உதவுகிறது.
  • ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளிடம் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதே ஆசிய மேம்பாட்டு வங்கியின் முதன்மை நோக்கம் என கூறப்படும் நிலையில் கடந்த காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி பெரும் தொகையை கடனாக வழங்கியுள்ளது.
  • இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 4.6 பில்லியன் டாலர்களை ஆசிய வளர்ச்சி வங்கி கடனாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் வகையில் 1.8 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
  • ஆசிய வளர்ச்சி வங்கி 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 4.6 பில்லியன் டாலர் இறையாண்மைக் கடனாக 17 கடன்களை வழங்கியது எனவும், இதில் நாட்டின் கொரோனா வைரஸ் நோய் தொற்றுநோய்க்காக மட்டும் 1.8 பில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது
  • ஆசிய வங்கி கொரோனா நோய் தொற்றை சமாளிக்கவும் தடுப்பூசி கொள்முதலுக்காகவும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்கால தொற்றுநோய்க்கான தயார்நிலைக்காகவும் ஒதுக்கப்பட்டது. 
  • ஆசிய மேம்பாட்டு வங்கியின் இந்தியாவிற்கான வழக்கமான நிதியுதவித் திட்டம் போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, நிதி, விவசாயம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளது. 
  • 12 மாநில திட்டங்களுக்கு 2.2 பில்லியன் டாலர் ஆதரவை தங்களது வங்கி வழங்கியது எனவும், தண்ணீர், சுகாதாரம் மற்றும் மலிவு விலையில் வீட்டுவசதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான நிதி பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் தேசிய நகர்ப்புற முதன்மையான பணிகளுக்கு நிதியளிப்பது ஆகியவற்றுக்கான கடனும் இதில் அடங்கும்  
ENGLISH
  • The Asian Development Bank, also known as the Asian Development Bank, was established in 1966 in Manila, Philippines. The Bank, which has sixty-seven member countries including India, provides loans and technical assistance to promote social and economic growth.
  • The Asian Development Bank (ADB) has lent large sums of money to various countries in the past, with the Asian Development Bank's primary objective being to promote development and cooperation with countries in the Asia-Pacific region.
  • It has been reported that the Asian Development Bank has lent $ 4.6 billion to India in 2021. The organization says it has provided $ 1.8 billion to cover the impact of the corona virus.
  • The Asian Development Bank (ADB) has pledged $ 4.6 billion in sovereign debt to India in 2021, of which $ 1.8 billion is for the country's corona virus epidemic alone.
  • The Asian Bank has allocated $ 1.5 billion for the fight against corona and vaccine purchases, and $ 300 million for strengthening primary health care in urban areas and preparing the country for future epidemics.
  • The Asian Development Bank's Regular Financing Scheme for India is designed to support transport, urban development, finance, agriculture and capacity building.
  • Their bank has provided $ 2.2 billion in support for 12 state projects, including loans for improving access to water, sanitation and affordable housing, improving performance-based funding for urban local bodies, and financing India's national-urban primary projects.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel