Type Here to Get Search Results !

TNPSC 7th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
  • கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 
  •  இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் சுபாஷ் சர்க்கார், திரு சந்தானு தாக்கூர், திரு ஜான் பிர்லா, திரு நிதிஷ் பிரமாணிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதுடன் இந்த ஆண்டினை நாடு தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். 
  • அதே சமயம், இந்த ஆண்டின் முதலாவது மாதம், முதலாவது வாரத்தில் 150 கோடி - 1.5 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை இந்தியா படைத்துள்ளது. 
உத்தரப்பிரதேசத்தில் ரூ. 14169 கோடி மதிப்பிலான 336 கிமீ நீளம் கொண்ட 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு திரு. நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
  • உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ரூ. 14169 கோடி மதிப்பிலான 336 கிமீ நீளம் கொண்ட 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
  • மதுரா-ஹத்ராஸ் - பதோன்--பேரேலி நெடுஞ்சாலை இணைப்பு மூலம் புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களில் போக்குவரத்து சிக்கல்கள் தீர்க்கப்படும். 
  • ஆக்ரா உள்வட்ட சாலை மற்றும் யமுனா விரைவு சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைப்பதன் மூலம் ஆக்ரா நகரம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடும். ஆக்ரா-ஜலேசர்-எட்டா சாலை பித்தளை தொழில் வியாபாரிகளுக்கு வசதி அளிக்கும்.
முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகள் 2021-2022 ஆண்டு தேசிய வருமானம்
  • மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்துதல் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2021-2022 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
  • 2021-22-ம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அல்லது நிலையான விலை மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 147.54 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • முன்னதாக 2020-2021-ம் ஆண்டின் தற்காலிக மதிப்பீட்டின்படி இது 135.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2021-2022-ம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-2021-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாக இருந்தது.
  • தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான 2021-2022-ம் ஆண்டுக்கான ஜிடிபி ரூ 232.15 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • 2020-2021-ம் ஆண்டில் தற்காலிக மதிப்பீடுகளின்படி இது 197.46 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2021-22-ம் ஆண்டில் 17.6 சதவீதம் என்னும் அளவில் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தனிநபர் வருமானம் மற்றும் இதர விவரங்கள் அறிக்கைகள் 1 முதல் 4 வரையில் வழங்கப்பட்டுள்ளன. நிலையான விலைமதிப்புள்ள பொருள்களுக்கான வரியைப் பெறுவதில் வால்யூம் எக்ஸ்ட்ராபொலேஷன் என்ற முறைப்படி எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பொறுத்து வரி விதிக்கப்படும். 
  • பொருட்களுக்கும், சேவைகளுக்குமான வரி கணக்கிடப்பட்டு, மொத்த வரி அளவு கணக்கிடப்படுகிறது.
TNPSC திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்
  • தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வேளாண்மை மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
  • அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகாரிகள் அதிகார அமைப்புகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆள்சேர்ப்பு நடைபெறும்.
  • இதில் போக்குவரத்து துறை மின்சாரத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம், ஆவின் துறைகள் உள்ளிட்ட துறைகளில் தனியாக தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில். தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் பணிகள் நிரப்பப்படும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதுபோன்ற ஆட் சேர்ப்பினை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகார அமைப்புகளில் ஏற்படும் காலியிடங்களில் ஆள்சேர்ப்பு முக்கியத்துவத்தை காணமுடியும். 
2030 வாக்கில் பொருளாதாரத்தில் ஜப்பானை இந்தியா முந்தும் - IHS
  • இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 
  • இருந்தாலும் ஆசிய அளவில் வரும் 2030-இல் பொருளாதார ரீதியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வரும் 2030-இல் இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பான் நாட்டை முந்தும் என IHS Markit தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி காரணமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
  • அதே போல எதிர்வரும் தசாப்தத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக உலக அளவில் அதிவேகமாக வளர்ச்சி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • 2020-21 உடன் 2021-22 காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.3 சதவிகிதத்திலிருந்து 8.2 என உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
  • அதன் மூலம் ஆசியாவில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 13 மசோதாக்கள் நிறைவேறின
  • தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இடையில், தாம்பரம், காஞ்சிபுரம், சிவகாசி, கடலூர், கும்பகோணம், கரூர் ஆகிய 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் தொடர்பான சட்ட மசோதாக்களை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார்.
  • தொடர்ந்து, நகர ஊரமைப்பு சட்டத்தில் நிலம் அல்லது கட்டிட மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கான காலஅளவை ஐந்திலிருந்து 8 ஆண்டுகளாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார்.
  • பேரவைக் கூட்டத்தில் இறுதிநாளான நேற்று சென்னை மாநகர காவல் சட்டத்தை, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
  • தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்விளை பொருள் சந்தைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி, நிதி ஒதுக்க சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
கோவா 'மாஜி' முதல்வருக்கு வாழ்நாள் 'கேபினட்' அந்தஸ்து
  • கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான, முன்னாள் முதல்வர் பிரதாப் சிங் ரானே, 87, தற்போது போரியம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
  • இவர் ஏற்கனவே சபாநாயக ராகவும் இருந்துள்ளார். கோவா சட்டசபை உறுப்பினராக 50 ஆண்டுகளுக்கு முன் தேர்வான அவர், தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார். 
  • சட்டசபையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்கு வாழ்நாள் 'கேபினட்' அமைச்சர் அந்தஸ்து வழங்க, கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 
மருத்துவ படிப்பில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்
  • மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து, மத்திய அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. 
  • இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
  • மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும். 
  • அரசியல் சாசனத்தின்படி இந்த இட ஒதுக்கீடுகள் அனுமதிக்கத்தக்கது தான். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை நடத்தலாம். 
  • இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரையறை குறித்து மார்ச் மூன்றாவது வாரத்தில் விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
வெளியுறவு அமைச்சகம் - 'டாடா கன்சல்டன்சி' ஒப்பந்தம்
  • 'பாஸ்போர்ட்' சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் 'டாடா கன்சல்டன்சி' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • பாஸ்போர்ட் சேவை பெறும் நடைமுறைகளை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எளிமையாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இணையத்தின் வாயிலாக பாஸ்போர்ட் சேவை நடைமுறைகளை கையாளும் 'டிஜிட்டல்' சேவை நடைமுறையில் உள்ளது.
பாகிஸ்தானில் உச்சநீதிமன்றத்திற்கு முதல்முறையாக பெண் நீதிபதி நியமனம்
  • பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண் நீதிபதிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண் நீதிபதியை நியமிக்க அந்நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • 55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். விரைவில் அவர் பாகிஸ்தானின் முதல் உச்சநீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel