பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (பிஎம்ஃஎப்எம்இ) கீழ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பின் 6 பிராண்டுகள் அறிமுகம்
- பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (பிஎம்ஃஎப்எம்இ) கீழ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பின் 6 பிராண்டுகளை, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திரு. பசுபதி குமார் பரஸ் மற்றும் இணையமைச்சர் திரு. ப்ரஹலாத் சிங் படேல் ஆகியோர் புதுதில்லி பஞ்சஷீல் பவனில் அறிமுகம் செய்தனர்.
- ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் 10 பிராண்ட் உணவு பொருட்களை தயாரிக்க, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்புடன், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது.
- இவற்றில் அம்ரித் பஃல் என்ற நெல்லி சாறு, கோரி கோல்டு என்ற மல்லி பொடி, காஷ்மீரி மந்த்ரா என்ற மசாலா , மது மந்த்ரா என்ற தேன், சோம்தானா என்ற ராகி மாவு, மற்றும் தில்லி பேக்ஸின் கோதுமை குக்கீஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
- தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
- நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்பதே தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளாகும்.
அமெரிக்காவின் அணு ஆயுத கப்பலுக்கு முதன் முதலாக பெண் கேப்டன்
- அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் அணு ஆயுதம் தாங்கி கப்பலான, யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கனுக்கு, பெண் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அமெரிக்க கடற்படை வரலாற்றில், அணு ஆயுதம் தாங்கி போர் கப்பல்களுக்கு பெண்கள் தலைமை வகித்தது இல்லை. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுஉள்ளது.
- யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கன் என்ற அணு ஆயுதம் தாங்கி போர் கப்பலுக்கு, ஏமி பார்ன்ஷிமிட் என்ற பெண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இந்த கப்பலின் செயல் அதிகாரியாக, 2016 - 19 வரை பணியாற்றினார்.
பிரதான வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி - ரிசா்வ் வங்கி
- உள்நாட்டில் அமைப்பு ரீதியில் பிரதானமாக உள்ள வங்கிகளின் பட்டியலில் (டி-எஸ்ஐபி) எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இடம்பெற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
- கடந்த 2020-ஆம் ஆண்டின் பட்டியலிலும் இதே வங்கிகள்தான் பிரதான வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் டி-எஸ்ஐபி பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது.
- மேலும், வங்கிகளிடம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எச்டிஎஃப்சி வங்கியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கடந்த 2017 மாா்ச் 31-இல் ரிசா்வ் வங்கி அறிவித்தது.
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 6 ஆண்டுகளில் 3.68 கோடி பதிவு
- அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68 கோடி பதிவு செய்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்கள் பதிவு செய்துள்ளனா்.
- இந்த நிதியாண்டில் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் சந்தாதாரா்கள் இணைந்துள்ளனா்.
- ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவா்களில் ஆண்கள் 56 சதவீதம், பெண்கள் 44 சதவீதம். இந்த ஓய்வூதிய நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு சுமாா் ரூ. 20,000 கோடி ஆகும்.
- இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. குறிப்பாக, அமைப்புசாராத் துறைகளில் உள்ள குடிமக்களுக்கு வயதான காலத்தில் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியால் 2015, மே 9-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்த ஆண்டின் பிற்பகுதியில் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஹாங்சூவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த 5 இடங்களில் 45 பயிற்சியாளர்களைக் கொண்டு 117 தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தேசிய முகாமை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 64 வீரர்கள், 53 வீராங்கனைகளுக்கு பாட்டியாலா, திருவனந்தபுரம், பெங்களுரு, புதுதில்லி, பாலுசேரி ஆகிய 5 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
- ஓட்டப் பந்தயம், தடையோட்டம், நடைபோட்டி, நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மாரத்தான், சுத்தி எறிதல், ஹெப்பதலான் போன்ற போட்டிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.