உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- ரூ.700 கோடி செலவில் மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் நினைவாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடவர் மற்றும் மகளிர் இங்கு பட்டம் பெறவுள்ளனர்.
- இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 1,080 விளையாட்டு வீரர்களுக்கு (540 ஆடவர், 540 மகளிர்) பயிற்சி அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
- உலகத் தரத்தில் நவீன வசதிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நவீன சிந்தெடிக் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மைதானங்கள், கபடி ஆடுகளம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.
நேரம் தவறாத விமான சேவை - உலகளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8-வது இடம்
- கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த பட்டியலில் 96.51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது.
- இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு விமான நிலையம்தான் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் கூறியுள்ளது.
நீரஜ் சோப்ரா பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸின் ஒப்பந்தம் 2024 ஒலிம்பிக் வரை நீட்டிப்பு
- நீரஜ் சோப்ரருக்கு வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் வரை அவரது தற்போதைய பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸ் (Klaus Bartonietz) பயிற்சி அளிப்பார் எந்த தெரிவித்துள்ளது இந்திய தடகள கூட்டமைப்பு.
- 'வரும் 2024 பாரில் ஒலிம்பிக் வரை 'தங்கமகன்' நீரஜீன் பயிற்சியாளராக கிளாஸ் பார்டோனிட்ஸ் செயல்படுவார். அதனை தற்போது தக்க வைத்துள்ளோம்' என இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
- மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்