TAMIL
- அகில இந்திய வானொலியின் நேரலையில் ஒலிபரப்பு செய்யப்படும் நியூஸ்ஆன்ஏர் செயலி மிகவும் பிரபலமாக உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்கான (இந்தியா தவிர்த்து) சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, ஃபிஜி முதலிடத்தில் உள்ளது.
- இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முறையே 7 மற்றும் 10 ஆம் இடங்களில் உள்ளன. நியூசிலாந்து, ஜப்பான், அயர்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவை முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வேளையில், சிங்கப்பூர், சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
- அகில இந்திய வானொலியின் உலகளாவிய (இந்தியா தவிர்த்து) நேரலை ஒலிபரப்பில், ஏஐஆர் பஞ்சாபி, ஏஐஆர் தெலுகு, ஏஐஆர் சென்னை ரெயின்போ மற்றும் அஸ்மிதா மும்பை ஆகியவை மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.
- பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர் செயலியில் 240-க்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன.
- இந்த செயலிக்கு இந்தியா மட்டுமின்றி, உலகளவில் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான நேயர்கள் உள்ளனர்.
- டிசம்பர் 1 முதல் டிசம்பர் 15, 2021 வரையிலான காலத்தில் உலகளவில் முதல் 10 இடங்களில் உள்ள நியூஸ் ஆன் ஏர் செயலியில் எப் எம் கோல்டு தில்லி முதலிடத்தில் உள்ளது. ஏஐஆர் தமிழ் 6-ம் இடத்திலும், ஏஐஆர் சென்னை ரெயின்போ 9-ம் இடத்திலும் உள்ளன.
- ஏஐஆர் தமிழ் செயலியை அதிகளவில் பயன்படுத்துவோர் பட்டியலில் அமெரிக்காவில் இந்த செயலி 4-ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவில் ஏஐஆர் சென்னை ரெயின்போ 9-ம் இடத்திலும் உள்ளன. ஜப்பானில் ஏஐஆர் சென்னை ரெயின்போ 4-ம் இடத்திலும், இங்கிலாந்தில் இது 7-ம் இடத்திலும் உள்ளன.
- In the latest rankings of top countries in the world (excluding India) where All India Radio live-streams on NewsOnAir App are most popular, Fiji has toppled United States to take the first position.
- United Kingdom and United Arab Emirates have slipped to 7th and 10th spot respectively. New Zealand, Japan, Ireland and Papua New Guinea have entered top 10, while Singapore, Saudi Arabia, Pakistan and Kuwait are no more in the top list.
- Among the top All India Radio streams globally (excluding India), AIR Punjabi, AIR Telugu, AIR Chennai Rainbow and Asmita Mumbai have made a comeback to top 10, by displacing AIR Mangalore, AIR Raagam, World Service 1 and Vividh Bharati Delhi from the coveted top list.
- According to the rankings of countries (excluding India) for top All India Radio live-streams on NewsOnAir App, AIR Punjabi is quite popular in United States, United Kingdom, Canada, Pakistan, Australia, Finland, Ireland, and Germany.
- More than 240 Radio Services of All India Radio are live-streamed on NewsOnAir App, Prasar Bharati’s official App. These All India Radio Streams on NewsOnAir App have a large number of listeners not just in India, but globally, in more than 85 countries.
- Here’s a glimpse at the top countries, apart from India, where AIR live-streams on NewsOnAir App are most popular; top All India Radio streams on NewsOnAir App in rest of the world. You can also find the country-wise breakup of the same. These rankings are based on data from December 1 – December 15, 2021.