Type Here to Get Search Results !

TNPSC 25th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை - வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
  • நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி, தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வழங்கப்படவுள்ளது.
  • உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது.
  • திருவொற்றியூர் கட்டட விபத்தின்போது,அப்பகுதி மக்களை காப்பாற்றிய திமுகவின் தனியரசுக்கு விருது.
  • விழுப்புரம்,திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்புத்துறை வீரர் ராஜீவ்காந்திக்கு விருது.
  • கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன் என்பவர் விருது பெறுகிறார்.
  • மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு விருது.
  • திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காபடரிய தேதுலுக்கம்ப்பட்டியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு சிறுவன் லோகித்திற்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
  • திருப்பூரில் நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.
வீர தீர செயல்கள் புரிந்த 6 ராணுவ வீரர்களுக்கு 'சவுரிய சக்ரா' விருது
  • குடியரசு தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்கள் புரிந்ததற்காக ராணுவ வீரர்கள் ஆறு பேருக்கு, 'சவுரிய சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது வீர தீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
  • இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான சவுரிய சக்ரா விருது ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் வீரமரணமடைந்த ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • பயங்கரவாதிகளை துணிச்சலுடன் சுட்டு வீழ்த்தி, வீர மரணமடைந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார் அனில் குமார் தோமர், ஹவில்தார் பின்கு குமார், ஹவில்தார் கஷிரே பம்மநல்லி, செபாய் மருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோருக்கு சவுரிய சக்ரா விருது மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
  • இவர்களைத் தவிர கடந்த ஆண்டு ஜூலையில் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ராகேஷ் ஷர்மாவுக்கும் சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • இதேபோல் 19 பேருக்கு பரம் விஷிஸ்த் சேவா பதக்கம்; நான்கு பேருக்கு உத்தம் யுத்த சேவா பதக்கம்; 33பேருக்கு அதி விஷிஸ்த் சேவா பதக்கம்; 84 பேருக்கு சேனா பதக்கம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம்
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டாவது ஹரியாணா வீரர். இதைக் கௌரவிக்கும் வகையில், குடியரசு தின நாளில் அவருக்கு பரம வசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்படவுள்ளது.
  • ஹரியாணா மாநிலத்தில் குடியரசு நாள் அணிவகுப்பில் நீரஜ் சோப்ரா குறிப்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த அணிவகுப்பில் 10 ஒலிம்பிக் வீரர்கள் குறித்து காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது.
அம்பேத்கர், பகத்சிங் படங்களுக்கு மட்டும் அனுமதி! - டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு
  • டெல்லியில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்களிலும் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக டாக்டர் பிஆர் அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 
  • இனி அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் வைக்க மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட டாங்கா தீவுக்கு நிதியுதவி அறிவித்த மத்திய அரசு
  • சுனாமியால் பாதிக்கப்பட்ட டாங்கா தீவுக்கு பேரிடர் புனரமைப்பு உதவியாக 2 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • கடந்த சனிக்கிழமை பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடியில் உள்ள எரிமலையில் ஏற்பட்ட திடீா் சீற்றம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. அதையடுத்து, எரிமலைப் பிழம்பும், நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன.
  • டாங்கா தீவின் நிலைக்கு ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது, இந்தியா டாங்காவிற்கு ஆதரவாக நின்றதை குறிப்பிட்டுள்ளது.
225 பறவைகள் உள்பட சேலம் வன கோட்டத்தில் 147 பட்டாம் பூச்சி இனம்கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு
  • சேலத்தை தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் சேலம் வனக்கோட்டம், மிகவும் பழமை வாய்ந்த வனக்கோட்டமாக திகழ்ந்து வருகிறது. தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டு சேலம் வனக்கோட்டம் அமைந்துள்ளது.
  • மாவட்டத்தில் சேர்வராயன் மலை, ஜருகுமலை, பச்சமலை, கல்ராயன் மலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை என பல மலைகள் மற்றும் குன்றுகள் உள்ளன. அத்துடன் காவேரி, சுவேதா நதி, சரபங்கா நதி, வெள்ளாறு, வசிஷ்ட நதி, ஆணைமடுவு ஆறு, திருமணி முத்தாறு, காட்டாறு, கோமுகி நதி என சிறு, சிறு ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருக்கின்றன. 
  • வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவையினங்கள் குறித்து வனத்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதில், சேலம் வனக்கோட்டத்தில் 225 பறவையினங்களும், 147 பட்டாம்பூச்சி இனங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel