பியூச்சர் ஜெனரல் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நெதர்லாந்து நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
- பியூச்சர் ஜெனரல் இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எப்ஜிஎல்ஐசி) பங்குகளை நெதர்லாந்து என்வி ஜெனரல் நிறுவனம் (ஜிபிஎன்) வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து எப்ஜிஎல்ஐசி-யில் ஜிபிஎன்-ன் பங்கு 49%ல் இருந்து தோராயமாக 71% ஆக இருக்கும்.
- இந்த கொள்முதல் எப்ஜிஎல்ஐசி-யில் தற்போதைய ஜிபிஎன்-ன் பங்குகளை அதிகரிக்கும். இதுதொடர்பான சிசிஐ-யின் விரிவான உத்தரவு வெளியிடப்பட உள்ளது.
- 2021-22-ம் ஆண்டு கரீப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.
- 2021-22 கரீப் பருவத்தில், 23.01.2022 வரை, 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத், அசாம், அரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா, பாகர், ஒடிசா, மகாராஷ்ட்ரா, சத்தீஷ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச ஆதரவு விலையில் ரூ.1,18,812.56 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் மூலம், இதுவரை, 77.00 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
- 23.01.2022 வரை, தமிழகத்தில் இருந்து, 7,43,077 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1,20,231 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
- 2026-க்குள் $300 பில்லியன் நிலையான மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி" என்ற தலைப்பில் மின்னணு துறைக்கான 5 ஆண்டு செயல்திட்ட வரைபடம் மற்றும் இலக்குகள் ஆவணத்தை இந்திய செல்லுலர் மற்றும் மின்னணு சங்கத்துடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டது.
- இரண்டு பகுதி தொலைநோக்கு ஆவணத்தின் இரண்டாவது தொகுதி இதுவாகும். "இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் பங்கு" என்ற தலைப்பில் நவம்பர் 2021-ல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.
- இரண்டு முறை உலக ஸ்குவாஷ் சாம்பியன் பதக்கம் வென்ற கிறிஸ் வாக்கரை இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளராக நியமனம் செய்ய மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஸ்குவாஷ் மற்றும் மிதிவண்டி ஓட்டுதலில் இங்கிலாந்தின் சார்பாக போட்டிகளில் கலந்து கொண்ட வாக்கர், 16 வாரங்களுக்கு இந்திய அணிக்கு பயிற்சியளிப்பார்.
- முன்னாள் இங்கிலாந்து கேப்டனான வாக்கரின் நியமனம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேர்வுக் குழு மற்றும் ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டது.
- பெண் குழந்தைகளின் உரிமைகளை பிரபலப்படுத்தவும் அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உட்பட பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று ‘பெண் குழந்தை பாதுகாப்பு’ குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
- இந்த ஆணையத்தின் தலைவர் திருமதி. ரேகா சர்மா, ஹரியானாவின் முன்னாள் அமைச்சர் திரு.ஓ.பி.தங்க்கர், குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவர் பிரக்யா வாட்ஸ் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.
- மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் மகளிருக்கான தேசிய ஆணையம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறது.
- இந்த அமைச்சகத்தின் மூலம் 2008-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.