Type Here to Get Search Results !

மாநில அரசின் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறும் அலங்கார ஊர்திகள் / DECORATIVE VEHICLE FEATURING IN REPUBLIC PARADE OF TAMILNADU GOVERNMNET 2022

 

TAMIL
  • "விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த ஊர்தி அணிவகுப்பில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்களின் சிலைகள் இடம்பெற உள்ளன. 
  • சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் இந்த ஊர்தி வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
  • மங்கள இசை, வள்ளுவர் கோட்டம், பரத நாட்டியம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கம் ஆகியவை முதல் ஊர்தியில் இடம் பெற்றுள்ளன.
  • அதேபோல முதல் சுதந்திரப் போராட்டமாக அறியப்படும் சிப்பாய் புரட்சியைப் போற்றும் வகையில் வேலூர் கோட்டை, காளையார் கோவில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி, வீர பாண்டிய கட்டபொம்மன், பூலி தேவன், அழகு முத்து கோன், ஒண்டி வீரன் சிலைகள் இரண்டாவது ஊர்தியில் இடம் பெற்றுள்ளன. 
  • அதைத் தொடர்ந்து பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விஜய ராகவாச்சாரியார் ஆகியோரின் சிலைகளும் சுதேசி கப்பல் மாதிரி வடிவமும் 3ஆவது ஊர்தியில் இடம் பெற்றுள்ளன.
  • அதைத் தொடர்ந்து தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள 4ஆவது ஊர்தியில் தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், ராஜாஜி, வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, ரெட்டை மலை சீனிவாசன், திருப்பூர் குமரன், வ.வே.சு ஐயர், காயிதே மில்லத், ஜெ.சி குமரப்பா, கக்கன் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. 
  • குடியரசு தின விழாவுக்குப் பின்னர் இந்த 4 ஊர்திகளையும் தமிழகம் முழுக்க பொதுமக்கள் பார்வைக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
ENGLISH
  • Titled "Tamil Nadu in the Liberation Struggle", the procession will feature statues of more than 20 freedom fighters. The vehicle design work is in progress at the Higher Education Council Campus on Kamaraj Road, Chennai.
  • Mangala Music, Valluvar Kottam, Bharata Natyam and the State of Tamil Nadu Record of Achievement are featured in the first vehicle.
  • Similarly, in honor of the soldier's revolution known as the first freedom struggle, the statues of Vellore Fort, Kalaiyar Kovil Marudu Brothers, Velu Nachiyar, Quili, Veera Pandya Kattabomman, Puli Devan, Alaku Muthu Kon and Ondi Veeran are placed in the second vehicle.
  • It is followed by statues of Bharathiyar, checkered Chemmal W. U. Chidambaranar, Subramania Siva and Vijaya Raghavachariyar and an indigenous ship model in the 3rd vehicle.
  • Following that, statues of Father Periyar, Pasumpon Muthuramalinga Thevar, Kamarajar, Rajaji, Vanginathan, Deeran Chinnamalai, Rettai Malai Srinivasan, Tirupur Kumaran, VVS Iyer, Gaidee Millath, JC Kumarappa, Kakkan are included in the newly added 4th vehicle. .
  • All these 4 vehicles are scheduled to go on public view in Tamil Nadu after the Republic Day celebrations.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel