Type Here to Get Search Results !

TNPSC 23rd JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 
 • 40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தமிழக அணி அரை இறுதியில் 35-24 மற்றும் 35-26 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.
 • தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழக மகளிர் அணி 35-28, 28-35, 35-28 என்ற கணக்கில் ஆந்திராவை விழ்த்தியது.
 • தமிழக அணியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சமீதாவும் இடம் பெற்றிருந்தார். இந்த அணிக்கு பயிற்சியாளராக ஐ.சார்லஸ் ராஜ்குமாரும், மேலாளராக ரமேஷும் பணியாற்றினர்.
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது; இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலை - பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்
 • இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் 125-வதுபிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 
 • 'நேதாஜியை கவுரவிக்கும் வகையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும். இது நேதாஜிக்கு நாடு செலுத்தும் நன்றிக் கடனாகும். 
 • சிலை நிறுவப்படும் வரை அவரின் உருவம் முப்பரிமாண மின் ஒளியில் (ஹாலோகிராம்) திரையிடப்படும்' என்று பிரதமர் அறிவித்தார்.
 • அதன்படி, நேதாஜியின் பிறந்தநாளான நேற்று, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவரது முப்பரிமாண மின் ஒளி (ஹாலோகிராம்) சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். 
 • பேரிடர் மேலாண்மையில் தன்னலமற்ற, மதிப்புமிக்க தொண்டாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபரை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற பெயரில் விருது நிறுவப்பட்டிருக்கிறது. 
 • நிறுவனம் மற்றும் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. நிறுவனத்துக்கான விருதில் ரூ.51 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், தனிநபர் விருதில் ரூ.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
 • இந்த ஆண்டு விருதுக்காக நிறுவனங்களிடம் இருந்தும், தனிநபர்களிடம் இருந்தும் 243 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. 
 • தனிநபர் பிரிவில் பேராசிரியர் வினோத் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கும், கடந்த 2019, 2020, 2021-ம் ஆண்டு விருதாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கினார்.
 • மக்களவை செயலகத்தின் சார்பில் நேதாஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
சையது மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து சாம்பியன்
 • இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட் உடன் மோதிய சிந்து அதிரடியாக விளையாடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 
 • இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சையது மோடி தொடரில் சிந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017ல் அவர் இத்தொடரில் பட்டம் வென்றிருந்தார்.
 • கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் இஷான் பட்னாகர் - தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான ஹேம நாகேந்திர பாபு - ஸ்ரீவேத்யா குரஸடா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக டூர் எக்ஸ்டி அந்தஸ்து தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் சாம்பியன் பட்டம் இது.
தலிபான்கள் மேற்குலக நாடுகள் பேச்சு - நாா்வேயில் தொடக்கம்
 • மேற்குலக நாடுகளின் அதிகாரிகள், ஆப்கன் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள் ஆகியோருடன் தலிபான்கள் நடத்தும் மூன்று நாள் பேச்சுவாா்த்தை நாா்வேயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 • நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நடைபெற்றுவரும் இப்பேச்சுவாா்த்தையில் தலிபான்கள் தரப்பில் வெளியுறவு அமைச்சா் ஆமிா் கான் முத்தகி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
 • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னா் சா்வதேச நாடுகள் அந்நாட்டுக்கான உதவியை நிறுத்தியுள்ளன. இதனால் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. சா்வதேச நிதியுதவி மற்றும் அங்கீகாரத்தை தலிபான் ஆட்சியாளா்கள் எதிா்நோக்கியுள்ள சூழலில் இப்பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
 • இப்பேச்சுவாா்த்தையின்போது, அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகளால் முடக்கப்பட்ட 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.74,000 கோடி) நிதியை விடுவிக்கும்படி அமைச்சா் முத்தகி வலியுறுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 • நாா்வே இதற்கு முன்னா் பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்னைகள் தொடா்பாக இரு தரப்பினரிடையே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ஆப்கன் பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தையை நடத்துகிறது.
2021ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 வீரர்
 • 2021-ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.
 • டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 2021-ஐ ஆட்சி செய்திருக்கிறார். 29 ஆட்டங்களில் விளையாடிய ரிஸ்வான் 1,326 ரன்களைக் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 73.66. ஸ்டிரைக் ரேட் 134.89. பேட்டிங் மட்டுமில்லாது கீப்பிங்கிலும் ரிஸ்வான் அசத்தியுள்ளார்.
சிறந்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு விருது
 • நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தல்களை சரியாக நடத்தி முடிக்க மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகள் தேசிய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • இந்நிலையில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனவரி 25ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது
 • உலகில் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் இந்தியா முதல் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 1,23, 846 மெட்ரிக் டன் அளவுக்கு வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் (2020-21) வரை 114 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
 • பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 200 மில்லியன் டாலர் என்ற அளவை இந்தியா தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கெர்கின்ஸ் என்றழைக்கப்படும் வெள்ளரி ஊறுகாய் ஏற்றுமதியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது.
 • 2020-21-ல் இந்தியா 223 மில்லியன் டாலர் மதிப்பிலான 2,23,515 மெட்ரிக் டன் வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது.
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி விழாவுக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு
 • இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினம், அதன் பெருமைமிகு மக்களின் வரலாறு, கலாச்சாரம், சாதனைகளைக் குறிக்கும் வகையிலான, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி அலங்காரம் செய்யும் விழாவுக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 • இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழுக்கள், சாலைகள் மற்றும் சதுக்கங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரங்கோலி அலங்காரங்களைச் செய்ய வேண்டும். 
 • அவற்றுக்கு பெண் விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்லது நாட்டின் பெண் முன்னோடிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும். நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரங்கோலி அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 
 • இந்த நிகழ்ச்சி மூலம், பெண் குழந்தைகள் தினம், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாட ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel