Type Here to Get Search Results !

ஐசிசி 2021 ஆண்டின் சிறந்த வீரா் & சிறந்த வீராங்கனை விருது / ICC AWARD FOR BEST PLAYER OF YEAR 2021

 

TAMIL
  • கிரிக்கெட் வீரா், வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டம், திறமை அடிப்படையில் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி ஐசிசி விருதுக்குரியவா்களை அறிவிக்கிறது. அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா், வீராங்கனை, டெஸ்ட், ஒருநாள் விருதுக்குரியவா்களை திங்கள்கிழமை அறிவித்தது.
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வேகம் ஷாகீன் அப்ரிடி, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக பாக். கேப்டன் பாபர் ஆஸம், டி20ல் சிறந்த வீரராக முகமது ரிஸ்வான் (பாக்.) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த வீரா் - ஷாஹின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்)
  • 2021-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளா் ஷாஹின் ஷா அப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளாா். சா்கேரிபீல்ட் சோபா்ஸ் விருது ஏற்படுத்தப்பட்டபின் முதன்முறையாக இந்த விருதைப் பெறும் பாகிஸ்தான் வீரா் என்ற சிறப்பை ஷாஹின் அப்ரிடி பெற்றுள்ளாா்.
  • 3 வகையான அனைத்து கிரிக்கெட்டில் சா்வதேச ஆட்டங்களில் 36 ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். ஜமைக்காவில் மே.இந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 6-51 விக்கெட்டுகளே அவரது சிறந்த சாதனையாகும். 
  • கடந்த 2021 அக்டோபரில் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியில் ஷாஹின் அப்ரிட் முக்கிய பங்கு வகித்தாா். 3-31 விக்கெட்டுகளை அந்த ஆட்டத்தில் வீழ்த்தினாா்.
சிறந்த வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
  • சிறந்த வீராங்கனைக்கான ரேச்சல் ஹெஹோ பிளிண்ட் விருதுக்கு இரண்டாவது முறையாக தோவு செய்யப்பட்டுள்ளாா் இந்தியாவின் தொடக்க பேட்டா் ஸ்மிருதி மந்தனா. ஏற்கெனவே ஆஸி. வீராங்கனை எல்ஸி பொரி இரண்டு முறை இந்த விருதைப் பெற்றுள்ளாா். 
  • இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிருதி 2021-இல் 22 சா்வதேச ஆட்டங்களில் 855 ரன்களை விளாசினாா். ஆஸி.க்கு எதிரான பிங்க் டெஸ்டில் 127 என மெய்டன் சதம் அடித்தாா். 2 ஒருநாள் அரைசதம், 2 டி20 அரைசதம், ஒரு டெஸ்ட் அரைசதமும் அவரது ஸ்கோரில் அடங்கும்.
சிறந்த டெஸ்ட் வீரா் - ஜோ ரூட் (இங்கிலாந்து)
  • ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரா் விருதுக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதன்முறையாக தோவு செய்யப்பட்டுள்ளாா். கடந்த ஆண்டு 15 ஆட்டங்களில் 1708 ரன்களை விளாசினாா் ரூட். 
  • 2 இரட்டை சதங்கள் உள்பட 6 சதங்களை விளாசிய அவா், 4 அரைசதங்களையும் விளாசினாா். கடந்த 2011-இல் அலிஸ்டா் குக் இந்த விருதைப் பெற்ற நிலையில், மீண்டும் பெறும் இரண்டாவது வீரா் ஜோ ரூட் ஆவாா்.
சிறந்த ஒருநாள் வீரா் - பாபா் ஆஸம் (பாகிஸ்தான்)
  • ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரா் விருதுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸம் தோவு செய்யப்பட்டுள்ளாா். முதன்முறையாக விருதைப் பெறும் பாபா் கடந்த ஆண்டில் 6 ஆட்டங்களில் 405 ரன்களை விளாசினாா். 
  • இதில் 2 சதம், ஒரு அரைசதம் அடங்கும். பா்மிங்ஹாமில் 158 ரன்களை விளாசினாா் பாபா்.
சிறந்த ஒருநாள் வீராங்கனை- லிஸே லில்லி (தென்னாப்பிரிக்கா)
  • ஐசிசி ஒருநாள் சிறந்த வீராங்கனை விருதுக்கு தென்னாப்பிரிக்காவின் லிஸே லில்லி தோவு செய்யப்பட்டுள்ளாா். கடந்த ஆண்டு அவா் 5 அரைசதங்கள், ஒரு சதம் உள்பட 632 ரன்களை விளாசினாா். இந்த விருதைப் பெறும் முதல் தென்னாப்பிரிக்க வீராங்கனை லிஸே ஆவாா்.
  • வளரும் வீரா் விருது தென்னாப்பிரிக்காவின் யான்மேன் மலானுக்கும், வீராங்கனை விருது பாகிஸ்தானின் பாத்திமா சனாவுக்கும் கிடைத்துள்ளது.
  • சிறந்த நடுவா் விருது மரைஸ் எராஸ்மஸுக்கு கிடைத்துள்ளது.
ENGLISH
  • Cricket ICC announces ICC award winners by voting online on the best performance and talent of the players. Accordingly, the best player, player, Test and ODI award for the year 2021 was announced on Monday.
  • Pakistan pacer Shakeen Afridi has been named Cricketer of the Year, England captain Joe Root has been named Test Player of the Year and Pakistan has been named ODI Player of the Year. Mohammad Rizwan (Pakistan) has been selected as the best player in the T20I by captain Babur Azam.
Best Player - Shahin Shah Afridi (Pakistan)
  • Pakistan fast bowler Shahin Shah Afridi has been named the best player of 2021. Shahin Afridi has been named the first Pakistani hero to receive the Soccerfield Soaps Award since its inception.
  • He has taken 78 wickets in 36 ODIs in all 3 categories of cricket. His best performance was 6-51 in a Test match against the May Indian Islands in Jamaica.
  • Shahid Afridi was instrumental in Pakistan's victory over India in the T20 World Cup in October 2021. He took 3-31 wickets in that match.
Best Player - Smriti Mandana (India)
  • Smriti Mandana, India's opening batsman, has been shortlisted for the Rachel Heho Flint Award for Best Athlete for the second time. Already Aussie. Athlete Elsie Pori has won the award twice.
  • India's star Smriti has scored 855 runs in 22 international matches in 2021. Maiden scored 127 in the Pink Test against the Aussies. His score includes 2 ODI fifties, 2 T20 fifties and one Test fifties.
Best Test Player - Joe Root (England)
  • England captain Joe Root has been inducted into the Test Player of the Year award for the first time. Vlasina Root scored 1708 runs in 15 games last year.
  • He scored 6 centuries, including 2 double centuries, and 4 fifties. Joe Root is the second recipient of the award since Alistair Cook received the award in 2011.
Best ODI Player - Baba Azam (Pakistan)
  • Pakistan captain Baba Azam has been named the ICC ODI Player of the Year. Baba, who is receiving the award for the first time, scored 405 runs in 6 matches last year.
  • This includes 2 percent and one half percent. Vlasina Baba scored 158 in Birmingham.
Best ODI Player - Lise Lilly (South Africa)
  • South Africa's Lise Lilly has been named the ICC ODI Player of the Year. Last year, he scored 632 runs, including 5 fifties and one hundred. Lise Ava is the first South African athlete to receive this award.
  • South Africa's Yanman Malan won the Emerging Hero Award and Pakistan's Fatima Sana won the Player of the Year award.
  • Marius Erasmus won the Best Midwife Award.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel