Type Here to Get Search Results !

தேசிய பெண் குழந்தைகள் தினம் / NATIONAL GIRL CHILDRENS DAY

 

TAMIL
  • தேசிய பெண் குழந்தைகள் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. எனினும், பெண் குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
  • 2019-21 புள்ளி விவரப்படி, 6 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளில் 71.8 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகின்றனர். எனினும், 10 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிக் கல்வி பெறும் பெண்களின் அளவு 41 சதவிகிதம்தான். அதுவே, ஆண்களின் சதவிகிதம் 50.2 சதவிகிதமாக உள்ளது.
  • படிப்பறிவு கொண்ட பெண்களின் அளவு 71.5 சதவீதமாக இருக்கும் நிலையில், ஆண்களின் சதவீதம் 84.4-ஆக உள்ளது. இணைய வசதியைப் பயன்படுத்தும் பெண்களின் அளவு வெறும் 33.3 சதவீதமாக இருக்கும் நிலையில், இணையத்தைப் பயன்படுத்தும் ஆண்களின் சதவீதம் 57.1-ஆக உள்ளது.
  • 20 முதல் 24 வயதிற்குள்ளான பெண்களில் 23.3 சதவிகிதத்தினர் 18 வயதிற்கு முன்பாகவே திருமணமானவர்கள் என்கிறது தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை. ஆண்களில் திருமண வயதான 21-க்கு முன்பாக திருமணமானவர்களும் இருக்கின்றனர். 
  • 25-லிருந்து 29 வயதிற்குள்ளான ஆண்களில் 17.7 சதவிகிதத்தினர் திருமண வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.
  • இந்தியாவில் குழந்தை திருமணத்திற்குள் தள்ளப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடி. 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்தால் சட்ட விரோதம் எனக் கூறும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் குழந்தைகளுக்கு திருமணம் நிகழ்வதாக UNICEF புள்ளி விவரம் கூறுகிறது.
  • 15 முதல் 19 வயதுடையவர்களில் 59 சதவிகித பெண்கள் ரத்த சோகையுடன் இருக்கும் நிலையில், 31 சதவிகித ஆண்களும் ரத்த சோகையுடன் இருக்கிறார்கள்.
  • பாலின வேறுபாடுகளைக் களைந்து, அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் சமத்துவம் கண்ட 156 உலக நாடுகளின் பட்டியலில் 140-ஆவது இடத்தில்தான் இந்தியா உள்ளது.
ENGLISH
  • National Girl Child Day is celebrated on January 24 every year. This day is celebrated to create awareness about the rights of girl children and to promote their education, health and nutrition. However, what is the current status of girl children is questionable.
  • According to 2019-21 statistics, 71.8 percent of girls over the age of 6 start going to school. However, only 41 percent of girls have been in school for more than 10 years. That is, the percentage of men is 50.2 percent.
  • The literacy rate for women is 71.5%, compared to 84.4% for men. While the proportion of women using the internet is just 33.3 per cent, the proportion of men using the internet is 57.1 per cent.
  • According to the National Family Health Survey, 23.3 percent of women between the ages of 20 and 24 are married before the age of 18. Among men, there are those who are married before the age of 21.
  • 17.7 per cent of men between the ages of 25 and 29 are getting married before the age of marriage. The number of children forced into child marriage in India is 22 crore. UNICEF statistics show that 15 lakh children are married off every year in India, which says it is illegal to marry under the age of 18.
  • Between the ages of 15 and 19, 59 percent of women are anemic, and 31 percent of men are anemic. India ranks 140th out of 156 countries in the world in terms of gender equality, politics, economy and education.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel