சர்வதேச அளவில் நம்பகத்தன்மை குறித்து கருத்து கணிப்பு
- பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இப்சாஸ் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சர்வதேச அளவில் நம்பகத்தன்மை குறித்து அந்த நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
- இதில் நம்பகத்தன்மைமிக்க பணியாளர்களில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக 64% பேர் வாக்களித்துள்ளனர்.
- அதற்கு அடுத்து விஞ்ஞானிகளுக்கு 61%, ஆசிரியர்களுக்கு 55%, ராணுவ வீரர்களுக்கு 42 %, போலீஸாருக்கு 37%, நீதிபதிகளுக்கு 34%, வழக்கறிஞர்களுக்கு 29%, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு 27%, மத போதகர்களுக்கு 25%, அரசு ஊழியர்களுக்கு 24%, செய்தியாளர்களுக்கு 23%, வங்கி ஊழியர்களுக்கு 23%, தொழிலதிபர்களுக்கு 23%, அமைச்சர்களுக்கு 14% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
- இப்சாஸின் நம்பகத்தன்மைபட்டியலில் அரசியல்வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 10% மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
- சர்வதேச நாடுகளில் மருத்துவர்கள் மீது அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறித்து இப்சாஸ் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் பிரிட்டிஷ் மருத்துவர்களுக்கு 72% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
- நெதர்லாந்து மருத்துவர்களுக்கு 71% பேரும், கனடாமருத்துவர்களுக்கு 70% பேரும்ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவர்கள் மீது 64% மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- உலகின் நம்பகமான நாடு குறித்து இப்சாஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. சுவீடன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, துருக்கி, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பிரதமரின் விவசாய உதவி தொகை திட்டம் - ரூ.20,900 கோடி விடுவித்தார் மோடி
- நாடு முழுதும் உள்ள 10.09 கோடி விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதி தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 'டிபாசிட்' செய்யப்படுகிறது.
- 10வது தவணைஇந்த திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை நிதி கடந்த ஆண்டு ஆகஸ்டில் விடுவிக்கப்பட்டது.இந்நிலையில் 10வது தவணையாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்.
பிரிட்டன் முன்னாள் பிரதமருக்கு டோனி பிளேருக்கு 'சா்' பட்டம்
- 'ஆா்டா் ஆஃப் காா்ட்டா்' உறுப்பிராக டோனி பிளேரை அரசி எலிசபெத் நியமித்துள்ளாா். பிரிட்டனின் மிகப் பழையதும் முதன்மையானதுமான இந்த விருது, 1348-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிறந்த சமுதாய சேவை ஆற்றியவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த விருதைப் பெற்ன் மூலம் டோனி பிளோ, இனி 'சா் டோனி பிளோ' என்று சனிக்கிழமை முதல் அழைக்கப்படுவாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி
- 2021 டிசம்பரில் ஜிஎஸ்டி ஆக ரூ.1,29,780 கோடி வசூல் ஆகி உள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ.22,578 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.28,658, ஐஜிஎஸ்டி ரூ.69,155 கோடி (பொருட்களின் இறக்குமதி வரி ரூ.37,527 கோடி உள்பட), செஸ் ரூ.9,389 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.614 கோடி உட்பட) அடங்கும்.
- அதேநேரத்தில், கடந்த ஆண்டு(2020) டிச., மாதம் வசூல் ஆன ரூ.1.15 லட்சம் கோடியை விட, இது 13 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.