TAMIL
- இந்திய ரயில்வே கட்டமைப்பில் கடந்த 2021-ம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால், கடந்த 2019ம் ஆண்டிலிருந்து எந்த பயணியும் உயிரிழக்கவில்லை. இந்த நிதியாண்டில் மொத்தம் 22 விபத்துக்கள் நடந்துள்ளன.
- 840 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 6089 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.
- ரயில்வே மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 78 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மேலும் 17 ஆக்ஸிஜன் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 69 ரயில்வே மருத்துவமனைகள், கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்தன.
- ரயில்வே மருந்துவமனைகளில் கொவிட் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் 6,972 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐசியு படுக்கைகள் 273 லிருந்து 404-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
- தற்போது வரை 899க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் ரயில்கள், 36,840 டன் திரவ ஆக்ஸிஜனை 15 மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளன. வங்கதேசத்துக்கு 3911.41 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
- 4,176 ரயில் பெட்டிகள், தனிமை மையங்களாக மாற்றப்பட்டன. மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி, 324 ரயில் பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- 2021-22ம் நிதியாண்டில் டிசம்பர் 21ம் தேதி வரை 1029.94 மெட்ரிக் டன் சரக்குகள் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் இது, 870.41 மெட்ரிக் டன்னாக இருந்தது.
- சரக்கு ரயிலில் சராசரி வேகம் 2021-22ம் ஆண்டில் மணிக்கு 44.36 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டது.
- கட்டமைப்பு முதலீட்டுக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ. 2.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021 நவம்பர் வரை ரூ.1,04,238 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- 1924 கி.மீ தூர வழித்தடம் 2021 டிசம்பர் 30ம் தேதி வரை மின்மயமாக்கப்பட்டுள்ளது. 1330.41 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 83 மேம்பாலைகள், 338 சுரங்கப் பாதைகள் 2021 நவம்பர் வரை அமைக்கப்பட்டன. 172 நடை மேம்பாலங்கள், 48 லிஃப்டுகள், 50 எஸ்கலேட்டர்கள் நவம்பர் 21ம் தேதிவரை அமைக்கப்பட்டன.
- விவசாயிகள் நலனுக்காக முதல் கிசான் ரயில் சேவை மகாராஷ்டிரா - பீகார் இடையே 2021 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
- 100வது கிசான் ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். கடந்த டிசம்பர் 24ம் தேதி வரை 1806 கிசான் ரயில்கள் 153 வழித்தடங்களில், 5.9 லட்சம் டன் வேளாண் பொருட்களை கொண்டு சென்றுள்ளன.
- The structure of the Indian Railways has grown at an unprecedented rate in 2021. No passengers have been killed since 2019 as security has been beefed up. There have been a total of 22 accidents this financial year.
- 840 railway stations are equipped with CCTV cameras. Wi-Fi is available at a total of 6089 railway stations.
- Medical facilities at railway hospitals have been increased. 78 oxygen production stations have been set up.
- Approval has also been given to set up 17 more oxygen stations. 69 railway hospitals treated the railway employees affected by Kovit-19.
- The number of beds for covit treatment in railway hospitals has been increased to 6,972. ICU beds have been increased from 273 to 404.
- To date, more than 899 oxygen trains have delivered 36,840 tons of liquid oxygen to 15 states. 3911.41 MT of oxygen was distributed to Bangladesh by trains.
- 4,176 train carriages were converted into isolation centers. At the request of the state governments, 324 train sets were sent to various states.
- Improvements in structure
- An unprecedented amount of Rs. 2.15 lakh crore has been allocated. 1,04,238 crore has been spent till November 2021.
- During the financial year 2021-22, 1029.94 MT of cargo was transported by rail till December 21. It was 870.41 MT during the same period last fiscal.
- The average speed of freight trains has been increased to 44.36 km / h in 2021-22.
- The 1924 km long route will be electrified by December 30, 2021. 1330.41 km of new railway lines have been laid.
- 83 flyovers and 338 tunnels were laid by November 2021. 172 pedestrian overpasses, 48 lifts and 50 escalators were set up by November 21st.
- The first Kisan train service between Maharashtra and Bihar was launched on August 7, 2021 for the benefit of farmers.
- The Prime Minister inaugurated the 100th Kisan Train. As on December 24, 1806 Kisan trains were carrying 159 routes carrying 5.9 lakh tonnes of agricultural produce.