இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் - டிசம்பர் 2021
- 2021 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 57.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 23.35 சதவீத வளர்ச்சி.
- 2021 டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 72.35 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 33.86 சதவீதம் நேர்மறையான வளர்ச்சி.
- 2021 ஏப்ரல்-டிசம்பர் வரை இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 479.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 36.31 சதவீத வளர்ச்சி.
- 2021 ஏப்ரல்-டிசம்பர் வரை நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 547.12 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 57.33 சதவீதம் நேர்மறையான வளர்ச்சி.
இலங்கைக்கு ரூ.6700 கோடி கடன் வழங்க இந்தியா உறுதி
- இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் உணவுப்பொருள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
- பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவிடம் 7300 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக இலங்கை மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கப்ரால் சமீபத்தில் கூறி இருந்தார்.
- இந்நிலையில் இந்தியா சார்பில் இலங்கைக்கு 6700 கோடி ரூபாய் கடன் வழங்குவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, அஜித் நிவார்ட்டை சந்தித்தார்.
- இந்திய வழங்கும் கடன் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள் இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும் என அஜித் நிவார்ட் தெரிவித்துள்ளார்.
- 'இந்தியாவின் கடன் உதவியால் இலங்கையிடம் டிச., இறுதியில் இருந்த உணவுப்பொருள் இறக்குமதிக்கான கையிருப்பு இரு மடங்காக உயரும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
- இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் வென்று வரலாற்றை மாறவிடாமல் தென் ஆப்பிரிக்க அணி தக்கவைத்தது.
- கேப்டவுனில் நடந்த கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கீகன் பீட்டர்ஸனுக்கு வழங்கப்பட்டது.
- இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 24 புள்ளிகள், 66.66 சதவீதத்துடன் 4-வது இடத்துக்குமுன்னேறியது. இந்திய அணி, 53 புள்ளிகள் எடுத்தபோதிலும், 49 சதவீதத்துடன் 5-வது இடத்துக்குபின் தங்கியது.
வங்காள விரிகுடாவில் இந்திய-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி
- வங்காள விரிகுடாவில் இந்திய-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளன.இந்தியா-ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
- போர் காலங்களில் எதிரிநாட்டு படைகளை சமாளிப்பது, விமானத்தில் பறப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்திய போர்க்கப்பலான சிவாலிக் & காட்மண்டு, ஜப்பானிய போர்க் கப்பலான உராகா மற்றும் ஹிராடோ ஆகிய கப்பல்களுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டன.
- ஜப்பான்-இந்தியா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன.
- இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களும் இடப்பட்டுள்ளன. இந்நிலையில் இரு நாடுகளிடையே பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.