Type Here to Get Search Results !

TNPSC 12th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திய பொருளாதார வளர்ச்சி - உலக வங்கியின் கணிப்பு

  • பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்புகளை மாற்றி அறிவித்து வரும் நிலையில், உலக வங்கி, முன்னர் அறிவித்த நிலையையே தக்கவைத்துள்ளது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஜூலையில் அறிவித்திருந்த நிலையில், இப்போதும் அதுவே தொடர்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. 
  • இதற்கு காரணம், மீட்சி இன்னும் பரவலாக எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், உலக வங்கி, 8.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 
  • மேலும், அடுத்த நிதியாண்டு மற்றும் அதற்கு அடுத்த நிதியாண்டுகளில் வளர்ச்சி 8.7 மற்றும் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்து அறிவித்துள்ளது. 
இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் செயல்பட்டு வந்தார். இவரின் பதவிக் காலம் முடிந்துள்ளதை அடுத்து தற்போது புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) தற்போதைய இயக்குநராக இருக்கும் சோம்நாத், கேரளாவைச் சேர்ந்தவர். 
11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
  • தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. 
  • இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 1,250 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இதற்காக மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 2,145 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். ரூ. 24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் புதிய வளாகம், இதுவரை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. 
  • மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுய்களுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி - ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு உச்சநீதிமன்றம் அறிவிப்பு
  • பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கடந்த 5ம் தேதி பிரதமர் பயணம் மேற்கொண்டார். ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. 
  • இதையடுத்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்தது. 
  • இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஐந்து பேர் கொண்ட குழுவின் விவரங்களை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
  • அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி இந்து மல்கோத்ரா இந்த குழுவின் தலைவராக செயல்படுவார் என்றும், மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் டிஜி அல்லது அவர் நியமனம் செய்யக்கூடிய ஐஜி பதவிக்கு கீழ் இல்லாத அதிகாரி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர்கள், பஞ்சாப், சண்டிகர் மாநில டிஜிபிக்கள், குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இயற்கை வளத்துறை
  • இயற்கை வளத்துறை என்னும் புதிய துறையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த துறையை நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் கவனிப்பார். அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநகரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகிய 3 துறைகள் இந்த புதிய இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
அமெரிக்காவில் முதல் முறையாக கறுப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு
  • அமெரிக்காவின் மிசோரியில் கடந்த 1928ம் ஆண்டில் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ. கறுப்பினத்தை சேர்ந்த இவர் பல்துறை வித்தகர். சிறுவயதிலேயே இனவெறி தாக்குதலுக்கு ஆளானவர். 
  • தனது 7 வயதிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர். பல வன்கொடுமைகளையும் அனுபவித்தவர். அதிலிருந்து மீண்டு, பல வலிகளை தந்த இந்த சமூகத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டார். இனவெறிக்கு எதிராக, கறுப்பின பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
  • பல்வேறு கவிதை, கட்டுரை, புத்தகங்களை எழுதினார். இவர் எழுதிய 'கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என எனக்கு தெரியும்' என்ற சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. தன் வாழ்க்கையின் மூலம் இனவெறியின் கொடுமைகளை மாயா தோலுரித்துக் காட்டினார்.
  • இதற்காக, 2010ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான, 'ஜனாதிபதி விருது' மாயாவுக்கு கிடைத்தது. 2014ம் ஆண்டில் தனது 86வது வயதில் அவர் காலமானார். 
  • இந்நிலையில், மாயா ஏஞ்சலோவின் சேவையை பாராட்டி அவரது உருவம் பொறித்த 25 சென்ட் நாணயத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கறுப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம்
  • கடந்த நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம் 4.91 சதவீதமாகவும்; கடந்த 2020 டிசம்பரில் 4.59 சதவீதமாகவும் இருந்தது.முந்தைய மாதத்தில், உணவு பொருட்கள் பணவீக்கம் 1.87 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 4.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இதையடுத்து சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக அதிகரித்த போதிலும், ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் உள்ளது. நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது.
புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி
  • புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி, பின்னர் கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜா் மணிமண்டபம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ரூ.122 கோடியில் அமைக்கப்பட்ட சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியம். ஒவ்வொரு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். 
  • இது உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தை நோக்கிய பாதையில் புதிய சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதும் முக்கியம் என்று பேசினார்
3 அமைச்சர்களின் சில துறைகள் மாற்றியமைப்பு - தமிழக அரசு
  • தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் , தொழில் துறை அமைச்சரிடம் இருந்து இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை, போக்குவரத்து துறை அமைச்சரிடம் இருந்து தொழில்துறை அமைச்சருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அயலக பணியாளர் கழகம் சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் இருந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு அரசில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. துறைக்குத் தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனைதவளத்துறையிடமிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நான்காவது முறையாக பிரதமரானார் மார்க் ரூடே
  • கடந்த ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அரசு மூலம் கடந்த திங்கட்கிழமை அன்று நான்காவது முறையாக மார்க் ரூடே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2010-ல் தொடங்கி தற்போது நான்காவது முறையாகப் பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் ரூடே, நெதர்லாந்து வரலாற்றிலேயே இரண்டாவது இளம் பிரதமராவார். 
  • இவர் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும்கூட இன்று வரை ஜோகன் டி விட் கல்லூரியில் வாரத்தில் இரண்டு மணி நேரம் மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த பாடங்களை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel