Type Here to Get Search Results !

தந்தை பெரியார் விருது & டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது 2022 / THANTHAI PERIYAR & DOCTOR AMBEDKAR TAMILNADU GOVERNMENT AWARD 2022

 

TAMIL

தந்தை பெரியார் விருது
  • தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. 
  • அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக்கலைஞ்சியம் என தமிழ்ச் சமூகத்தால் போற்றப்படுபவர். 
  • திராவிட இயக்க வரலாலான நீதிக் கட்சி வரலாறு என்னும் நாவலை அது 1916-ல் தொடங்கப்பட்டது முதல் 1944-ல் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது வரை இரண்டு தொகுதிகளாகப் படைத்துள்ளார். 
  • மேலும், திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக்கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதி தமிழ்ச்சான்றோர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். 
  • இவரது எழுத்துப் பணியைப் போற்றும் வகையில் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருது அப்போதைய முதல்வர் கருணாநிதி கரங்களால் வழங்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது
  • அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது. 
  • அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  • டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெறத் தேர்வு செய்யப்படுள்ள சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தன்னுடைய பணிக் காலத்தில் 96,000 வழக்குகளுக்குத் தீர்வு கண்டு சாதனைப் படைத்தவர். 
  • இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை வழக்காடும் வழக்கறிஞராகப் பணியாற்றி, ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலாய் உயர் நீதிமன்றத்தில் ஒலித்து மாபெரும் சாதனை படைத்தவர். 
  • இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாதிய வேறுபாடுகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிமை மறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான இவரது தீர்ப்புகளால் மக்களிடையை மிகுந்த நன்மதிப்பைப் பெற்றார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அந்தவகையில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கு டாக்டர் அம்பேத்கர் விருதும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிற்கு சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சம் என்றிருந்த நிலையில், அது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கம், விருதுக்கான பரிசுத்தொகை, தகுதியுரை ஆகியவற்றை ஜன.15ம் தேதியான திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
ENGLISH

Thanthai Periyar Award

  • In a statement, the Government of Tamil Nadu said, 'Every year, the Government of Tamil Nadu honors the Thanthai Periyar Award for Social Justice in recognition of those who strive for social justice.
  • Accordingly, the Government of Tamil Nadu has decided to present the Thanthai Periyar Award for Social Justice for the year 2021 to Thirunavukarasu, a Dravida movement analyst and writer.
  • Thirunavukarasu, who has been selected to receive the Thanthai Periyar Award for Social Justice, is hailed by the Tamil community as the mobile encyclopedia of the Dravidian movement.
  • He has written the novel History of the Justice Party, a history of the Dravidian movement, in two volumes from its inception in 1916 until its renaming as the Dravidar League in 1944.
  • He is also the author of various historical books on the roots of the Dravidian movement and the pillars of the Dravidian movement.
  • In recognition of his writing work, the then Chief Minister Karunanidhi presented the Thiru.V.Ka Award of the Government of Tamil Nadu in 2006.
Dr. Ambedkar Government of Tamil Nadu Award
  • Similarly, the Dr. Ambedkar Government of Tamil Nadu Award is given annually to encourage people from Tamil Nadu who are striving for the betterment of the Adithravidar and Indigenous peoples.
  • The Government of Tamil Nadu has decided to present the Dr. Ambedkar Tamil Nadu Government Award for the year 2021 to former Chennai High Court Judge K. Chandru.
  • Former Chennai High Court Judge Chandru, who has been selected to receive the Dr. Ambedkar Tamil Nadu Government Award, has achieved a record 96,000 cases during his tenure.
  • He has worked as a lawyer prosecuting criminal and legal cases in the Chennai High Court and has made a great contribution to the voice of the poor and working people in the High Court.
  • It is noteworthy that the various judgments he delivered were in the interest of the oppressed people. He was also well-respected by the people for his rulings against caste discrimination, oppression, discrimination against Scheduled Castes and Scheduled Tribes.
  • Accordingly, Dr. Ambedkar Award has been announced for Chennai High Court Chief Justice Chandru and Dravida Movement Analyst K. Thirunavukarasu has been awarded the Father Periyar Award for Social Justice.
  • While the prize money for this award was Rs 1 lakh, it has now been increased to Rs 5 lakh. Tamil Nadu Chief Minister MK Stalin will present the Gold Medal, Prize money and merit award to the award parents on January 15 on Thiruvalluvar Day.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel