Type Here to Get Search Results !

TNPSC 11th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது
  • இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த ஏவுகணை மேற்கு கடற்கரை கடலில் சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமான இலக்கை அழித்தது.
மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
  • மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, கலைஞர் நினைவு நுாலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அடிக்கல் நாட்டினார்.
  • அதற்கேற்ப, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள, பொதுப்பணித்துறை வளாகத்தில், 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பில், 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில், எட்டு தளங்கள் உடைய கலைஞர் நுாலகம் அமைய உள்ளது. 
மனிதனுக்கு பன்றியின் இதயம் மருத்துவ துறையில் புதிய சாதனை 
  • அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட டேவிட் பென்னட், 57, என்ற தொழிலாளிக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது.
  • ஆனால் மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. அதனால் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனை குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • உயிர் பிழைப்பதற்கு இது ஒன்றே சாத்தியம் என்ற நிலையில், இந்த மருத்துவ பரிசோதனை முயற்சிக்கு டேவிட்டும், அவரது குடும்பத்தாரும் சம்மதித்தனர். 
  • இதன்படி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அவருக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களாகியுள்ள நிலையில், புதிய இதயம் செயல்படத் துவங்கியுள்ளது.
இலங்கை அரசின் மக்கள் வங்கி - கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்தது சீனா
  • மக்கள் வங்கியை கடந்த அக்டோபர் மாதம் கறுப்பு பட்டியலில் இணைக்க கொழும்பிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. 
  • சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே, மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.
  • சீனா நிறுவனத்திற்கும், இலங்கையில் உரத்தை இறக்குமதி செய்த தரப்பினருக்கும் இடையிலான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
  • அந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடந்த 7ம் தேதி மக்கள் வங்கி செலுத்தியது.
  • சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு நாள் முன்பாக இந்த தொகை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்த பின்னணியில், மக்கள் வங்கி மீதான தடையை சீனா தளர்த்தியது.
கஜகஸ்தான் புதிய பிரதமர் நியமனம்
  • மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான், சோவியத் யூனியன் வீழ்ந்த சமயத்தில் உருவான நாடுகளில் ஒன்றாகும். அதிக எண்ணெய் வளமிக்க நாடான இங்கு எரிபொருள் விலையை அந்நாட்டு அரசு உயர்த்துவதாகத் தகவல் வெளியானது.
  • இது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் உத்தரவை எதிர்த்துத் தொடங்கிய மக்கள் போராட்டம் மிக விரைவில் கலவரமாக மாறியது.
  • நாளுக்கு நாள் நிலைமை மோசமானதால் நிலைமையைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் ராணுவக் கூட்டணியான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) வரவழைக்கப்பட்டது. 
  • சோவித் யூனியனில் இருந்து உருவான நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த CSTO படைகளாகும். ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க CSTO படைகள் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்தச் சூழலில் தான் அலிகான் ஸ்மைலோ என்பவரை அந்நாட்டின் புதிய பிரதமராக காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் நியமித்துள்ளார். 49 வயதாகும் அலிகான் ஸ்மைலோ, முந்தைய அரசின் முதல் துணைப் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஸ்பான்ஸராக டாடா குழுமத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம்
  • நடப்பு 2022 சீசன் மற்றும் 2023்ம் ஆண்டு சீசனுக்கும் டைட்டில் ஸ்பான்ஸராக டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டாடா குழுமத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு வழங்கியுள்ளது.
35.8 % பங்குகளை மத்திய அரசுக்கு அளிக்க வோடாபோன் ஐடியா முடிவு
  • வோடாபோன் நிறுவனம் ரூ.1.95 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் இதுவரை ரூ.7,854 கோடி செலுத்தி உள்ளது.
  • இன்னும் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில், வோடாபோன் ஐடியாவின் நிர்வாக குழு கூட்டம்  நடந்தது. 
  • இந்த கூட்டத்தில், ஸ்பெக்டரம் ஏலத்தவணைகள் தொடர்பான முழு வட்டியையும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ஈக்விட்டியாக மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. 
  • சுமார் 35.8 சதவீதம் கொண்ட இந்த பங்கின் சந்தை மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாய். இதற்கு மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். 
  • இதன் பின்னர் வோடாபோன் நிறுவனத்திடம் 28.5 சதவீத பங்குகள் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் 17.8 சதவீத பங்குகள் இருக்கும்.
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி. காமகோடி நியமனம்
  • சென்னை ஐஐடியின் இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் இரண்டாண்டு பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி சென்னை ஐஐடியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றி வரும் காமகோடி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சக்தி என்ற நுண்செயலியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் காமகோடி. பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் காமகோடி மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராக உள்ளார்.
சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் பெறுவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது
  • சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் பெறுவதற்கு சிசிஐ இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொருத்தமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (சதர்லேண்ட்) சி தொடரின் முன்னுரிமை பங்குகள் பொதுப் பங்குகளாக இரண்டு தொகுப்புகளில் கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் (ஜிஐசி முதலீட்டாளர்) வாங்குவதற்கு கூட்டான முன்மொழிவு தரப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel