TAMIL
- ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து தகவலை திரட்டி கடந்த 2021-ம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இதில் இந்தியா 7 இடங்கள் முன்னேறி 83-ம் இடத்தைப் பிடித்துள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியா 90-வது இடத்தில் இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு செல்லும் நிலை இருந்தது. இது 2021-ல் 60 ஆக அதிகரித்துள்ளது.
- இந்தப் பட்டியலில் கடந்த 17 ஆண்டுகளாக ஜப்பானும் சிங்கப் பூரும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன. கரோனா கால தற்காலிக கட்டுப்பாடுகளை தவிர்த்து பார்த்தால், இந்த 2 நாடுகளைச் சேர்ந்தவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
- ஜெர்மனியும் தென்கொரியாவும் 190 நாடுகளுடன் 2-ம் இடத்தில் உள்ளன. 189 நாடுகளுடன் பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் ஆகியவை 3-ம் இடத்தில் உள்ளன.
- Henley & Partners has compiled information from the International Air Transport Association and released its Passport Rankings for 2021.
- India has moved up 7 places to be ranked 83rd. In 2020, India was ranked 90th. In the past 2020, Indians have been able to travel to 58 countries without a visa. This has increased to 60 in 2021.
- Japan and Singapore have consistently topped the list for the past 17 years. Excluding the temporary restrictions on the corona period, people from these 2 countries can travel to 192 countries without a visa.
- Germany and South Korea are in 2nd place with 190 countries. Finland, Italy, Luxembourg and Spain are in 3rd place with 189 countries.