Type Here to Get Search Results !

இந்திய ராணுவ சீருடை மாற்றம் / CHANGE OF UNIFORM FOR INDIAN ARMY

 

TAMIL
  • இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த புது சீருடையை ஜனவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.
  • இந்திய ராணுவ தினம் ஜனவரி 15ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் 13 லட்சம் பேர் கொண்ட இந்திய ராணுவத்துக்கு புது வடிவ சீருடை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
  • இந்திய ராணுவத்தினருக்கான புதிய சீருடையை தேசிய ஆயத்த ஆடை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (NIFT) இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த புது வடிவ சீருடை அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் டிஜிட்டல் அச்சு வடிவிலான அம்சத்தைக் கொண்டது.
  • பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, இந்த புதிய டிஜிட்டல் சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும், காடு, மலை, பனிக்காலங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு உகந்ததாகவும் இந்த ஆடை இருக்கும்.
  • இந்த சீருடையில் மேல்சட்டையை ராணுவத்தினர் கால்சட்டைக்குள் சொருகிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியே தொங்க விட்டிருக்க வேண்டும்.
  • புதிய உருமறைப்பு வண்ணக்கலவை சீருடை மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ராணுவ தின கொண்டாட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, வெவ்வேறு காலகட்டத்தில், குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் இருந்தது முதல் தற்காலம் வரை இந்திய ராணுவ பயன்படுத்தி வந்த சீருடைகளில் வீரர்கள் அணி, அணியாக அணிவகுத்துச் செல்வர்.
  • அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் அணிவகுப்பில் ஏந்திச் செல்வர்.
  • இந்த சீருடையில் பெண் வீராங்கனைகளுக்கும் வசதியாக இருக்கக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையிலேயே ராணுவ வீரர்கள் அணிவகுத்து செல்வர்.
  • இந்த ராணுவ சீருடைகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வராது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இதை பெற முடியும். போலிகளை கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய சீருடை தேசிய அளவில் முழுமையாக அமல்படுத்த 6 முதல் 8 மாதங்களவரை ராணுவ பிராந்திய தலைமையகங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு எப்போது சீருடை மாற்றம் செய்யப்பட்டது?
  • இந்திய கடற்படை வீரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. அதே சமயம், இந்திய ராணுவம், இதற்கு முன்பு மூன்று முறை அதன் சீருடையில் முழு மாற்றத்தை செய்துள்ளது. 
  • சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகளின் சீருடைகள் வித்தியாசமாக இருப்பதை உறுதி செய்வதற்காக முதல் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1980ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றம், போர்க்கள சீருடை முறை (டிபி) என்று அழைக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டில், மூன்றாவது முறையாக செய்யப்பட்ட மாற்றம், இந்திய துணை ராணுவ படைகளான சிஆர்பிஎஃப் என்றழைக்கப்படும் இந்திய ரிசர்வ் காவல் படை மற்றும் பிஎஸ்எஃப் என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களிடம் இருந்து தமது வீரர்களை தனித்துவப்படுத்திக் காட்ட மேற்கொள்ளப்பட்டது.
ENGLISH
  • The Indian Army will unveil a more comfortable and durable uniform for its soldiers on January 15. Indian Army Day is observed on January 15. On this day, a new uniform will be introduced to the 13 lakh Indian Army.
  • The new uniform for the Indian Army has been developed by the Indian Army in association with the National Institute of Readymade Garment Technology (NIFT). The new uniform features a digital printout used by the US military.
  • This new digital uniform has been finalized after examining the military uniforms in circulation in various countries. This outfit will be suitable for warriors working in different climatic conditions, forest, mountain and winter.
  • There is no need to plug the jacket into the trousers of the military in this uniform. Should have hung out. The new camouflage color scheme is designed with uniform yellow earthy, green and olive hues.
  • For the first time in the history of Indian Army Day celebrations, teams of soldiers will march in uniform during different periods, especially from pre-independence to the present day.
  • Soldiers will also carry weapons used in their respective periods.
  • The uniform has been modified to be comfortable for female athletes as well. Soldiers will march in this new uniform during the Republic Day parade.
  • These military uniforms are not for sale in the external market. It is available only at government approved stores. This step has been taken to detect counterfeits.
  • Military regional headquarters have been given 6 to 8 months to fully implement the new uniform nationally.
When was the uniform changed before this?
  • The new uniform was introduced in 2020 for Indian Navy personnel. The Indian Army, meanwhile, has made three changes to its uniform three times before.
  • For the first time since independence the first change was made to ensure that the uniforms of the Indian and Pakistani forces were different.
  • The change made in 1980 was called the War Uniform System (DP). In 2005, a third change was made to distinguish the Indian paramilitary forces from the Indian Reserve Police Force (CRPF) and the Border Security Force (BSF).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel