ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேச கால அட்டவணை 2022 / ANNUAL PLANNER OF TEACHER RECRUITMENT BOARD 2022
TNPSCSHOUTERSJanuary 24, 2022
0
தமிழக பள்ளிக்கல்வி துறையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக சேர, பி.எட்., அல்லது டி.எல்.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, உயர்கல்வி துறையில் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பல்வேறு தேர்வுகள் குறித்த உத்தேச கால அட்டவணையை, டி.ஆர்.பி., தலைவர் லதா வெளியிட்டார்.
முதுநிலை ஆசிரியர்பணியில், 2,407 இடங்களை நிரப்ப, அடுத்த மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும்
பள்ளிக்கல்வி துறையில் 3,902 இடைநிலை ஆசிரியர்கள்; 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 4,989 ஆசிரியர்கள் தொடர்ச்சி 3ம் பக்கம் நியமனத்துக்கான போட்டி தேர்வு, ஜூன் 2வது வாரத்தில் நடத்தப்படும்.
இதற்கான அறிவிக்கை மே மாதம் வெளியாகும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான விரிவுரையாளர் பதவியில், 167 காலியிடங்களை நிரப்ப, ஜூன் இரண்டாம் வாரத்தில் தேர்வு நடத்தப்படும். அறிவிக்கை மே மாதம் வெளியாகும்
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளின் உதவி பேராசிரியர் பதவியில், 1,334 இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை ஜூலையில் வெளியாகும்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு, நவம்பர் 2வது வாரத்தில் நடத்தப்படும். ஆகஸ்டில் அறிவிக்கை வெளியாகும்
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 104 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, டிசம்பர் இரண்டாவது வாரம் நடக்கும். செப்டம்பரில் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும்.
தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளில், பல்வேறு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளுக்கு, உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 9,494 ஆசிரியர் பணி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Name of the Post / Recruitment
Tentative month of Notification
No Of Vacancies
Tentative Date of Exam
PG Assistant
Already Completed
2407
2nd & 3rd Week of February
Tamil Nadu Teacher Eligibility Test (TET) 2022
February
–
2nd Week of April
Secondary Grade Teachers and Graduate Teachers
May
4989 (SGT-3902, Graduate Teachers 1087)
2nd Week of June
SCERT Lecturers
May
167
2nd Week of June
Assistant Professor in Government Arts and Science Colleges & College of Education (Vacancies are subject to the Approval of Government)
July
1334
1st Week of August (Certificate Verification Level-1)
Lecturers in Government Polytechnic Colleges (Vacancies are subject to the Approval of Government)
August
493
2nd Week of November
Assistant Professor in Government Engineering Colleges (Vacancies are subject to the Approval of Government)