Type Here to Get Search Results !

2021-ம் ஆண்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயல்பாடுகள் / Overview of Ministry of Electronics and Information Technology (MeitY) in 2021


TAMIL
  • 2021 அக்டோபர் 31ஆம் தேதி வரை 126 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை ஆதார் வழங்கப்பட்டது.
  • பொது சேவை மையங்கள், உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் சேவை நெட்வொர்க்காக உள்ளன. ஊரக பகுதிகளில் கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் உள்ளன. நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் 6,467 கூடுதல் பொது சேவை மையங்களும், கிராம பஞ்சாயத்து அளவில் 10,339 பொது சேவை மையங்களும் சேர்க்கப்பட்டன.
  • தேசிய தகவல் மையத்தின்(என்ஐசி) காணொலி காட்சி வசதிகளை பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சரவை செயலாளர்கள் நாடு முழுவதும் விரிவாக பயன்படுத்துகின்றனர்.
மெய்நிகர் நீதிமன்றங்கள்
  • நீதிமன்றத்தில் கூட்டத்தை குறைப்பதே மெய்நிகர் நீதிமன்றங்களின் நோக்கம். இதன் மூலம் ஒரு நீதிபதியால் மாநிலம் முழுவதும், எந்நேரமும் பணியாற்ற முடியும்.
ஆரோக்கிய சேது
  • இந்த செயலியை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இது நாடு முழுவதும் கொவிட்-19 பரவலை கண்காணிக்கவும், குறைக்கவும் உதவுகிறது.
ஆர்டி-பிசிஆர் மற்றும் ரட்டி செயலிகள் 
  • ஆர்டி-பிசிஆர் மற்றும் ரட்டி செயலிகளை என்ஐசி உருவாக்கியது. இதன் மூலம் நோயாளியின் மாதிரி விவரங்கள் ஐசிஎம்ஆரு-க்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன.
பிரதமரின் கிரா டிஜிட்டல் சக்சர்தா திட்டம் ( PMGDISHA) 
  • இத்திட்டம், ஊரக இந்தியாவில் டிஜிட்டல் அறிவை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது. 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் வீட்டுக்கு ஒருவர் வீதம் 6 கோடி குடும்பங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இதுவரை 5.36 கோடி பேர் பதிவு செய்துள்ளனர், இவர்களில் 4.54 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3.37 கோடி பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல்
  • டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த 206-17ம் நிதியாண்டில் ரூ.1085 கோடியிலிருந்து, 2020-21-ல் 5,554 கோடியாக அதிகரித்துள்ளது.
  • நாட்டில் மின்னணு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சமீப காலங்களில் பல நடவடிக்கையை எடுத்துள்ளது. 2014ம் ஆண்டு 2-ஆக இருந்த செல்போன் நிறுவனங்கள் தற்போது 256 ஆக அதிகரித்துள்ளது. 
  • செல்போன்கள் தயாரிப்பில் உலகளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. செல்போன்கள் உற்பத்தியின் மதிப்பு கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.18,900 கோடியாக இருந்தது. 
  • இது 2018-19ம் நிதியாண்டில் ரூ.1,70,000 கோடியாக அதிகரித்தது. தொழிற்சாலைகளுக்கான மின்னணு பொருட்கள், எல்இடி உற்பத்தி மற்றும் நுகர்வோர் மின்னணு பொருட்களின் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
ENGLISH
  • As of October 31, 2021, more than 126 crore people have been issued digital identity cards.
  • Public service centers are the largest digital service network in the world. There are public service centers at the gram panchayat level in rural areas. An additional 6,467 public service centers were added in urban and rural areas and 10,339 public service centers at the gram panchayat level.
  • The video conferencing facilities of the National Information Center (NIC) are widely used by the Prime Minister, Union Ministers, Governors, Chief Ministers and Cabinet Secretaries across the country.
Virtual courts
  • The purpose of virtual courts is to reduce crowding in court. This allows a judge to serve across the state, at any time.
Health damage
  • The processor was launched by the federal government in April 2020. It helps to monitor and reduce the spread of Covit-19 across the country.
RT-PCR and Ratti processors
  • NIC developed RT-PCR and Ratti processors. This allows patient sample details to be sent immediately to the ICMR.
Prime Minister's Growth Digital Saksartha Project (PMGDISHA)
  • The project was brought in to provide digital knowledge in rural India. It is planned to bring 6 crore households per household under this scheme by March 31, 2022.
  • So far 5.36 crore people have registered, of whom 4.54 crore have been trained. 3.37 crore people are certified.
Payment digitally
  • Digital currency has increased from Rs 1085 crore in the last 206-17 financial year to Rs 5,554 crore in 2020-21.
  • The Central Government has taken several steps in recent times to increase the production of electronic goods in the country. The number of cell phone companies has increased from 2 in 2014 to 256 now.
  • India is the 2nd largest maker of mobile phones in the world. The value of mobile phone production was Rs 18,900 crore in 2014-15.
  • This has increased to Rs 1,70,000 crore in the 2018-19 financial year. Significant progress was also made in the production of industrial electronics, LEDs, and consumer electronics.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel