Type Here to Get Search Results !

2021-ம் ஆண்டில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் / Major Initiatives and Achievements of the Ministry of Fisheries, Animal Husbandry and Dairy by 2021


TAMIL
  • தேசியப் பொருளாதாரத்திற்கு கால்நடைத் துறை பங்களிப்பதோடு, 80 மில்லியன் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியா, நடப்பு ஆண்டில் 198.48 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது, இதன் மதிப்பு ரூ. 8.32 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். 
  • இருப்பினும், உலகின் பெரும்பாலான பால்வள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பண்ணை விலங்குகளின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. 
  • குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, கறவை மாடுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான வருமானம் கிடைப்பதில்லை.
  • உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் உருவாக்கவும், பசுக்களின் எண்ணிக்கையை மரபணு ரீதியாக மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மாடுகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் ரூபாய் 2400 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு சமீபத்திய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு அவர்களின் இடங்களிலேயே கிடைக்கின்றன.
  • கால்நடை மற்றும் பால்வளத் துறையில் மிக உயர்ந்த தேசிய விருதுகளில் ஒன்றான கோபால் ரத்னா விருது 2021-ல் தொடங்கப்பட்டது. இந்தத் துறையில் பணிபுரியும் விவசாயிகள், செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
  • இனப் பெருக்க பண்ணை தளம் 26 நவம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. டிசம்பர் 23, 2021 அன்று மாண்புமிகு பிரதமரால் டெய்ரி மார்க் தொடங்கப்பட்டது. தேசிய செயற்கை கருவூட்டல் திட்டம், மரபணு தேர்வு திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • விவசாயிகளின் நேரடி பயன்பாட்டிற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் தகவல் போர்டல் இ-கோபால் செயலி வடிவில் 10 செப்டம்பர் 2020 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்டது.
  • ராஷ்ட்ரிய கோகுல் மிஷனின் கீழ் 90958 பல்நோக்கு செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களை கிராமப்புற இந்தியாவில் (மைத்ரிகள்) பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கை கருவூட்டல் சேவைகள் விவசாயிகளின் வீட்டு வாசலில் கிடைக்கும்.
  • தரமான பால் உற்பத்தி, பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல்/பலப்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட, மத்தியத் துறை திட்டமான “பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம்” பிப்ரவரி-2014 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மேற்கண்ட திட்டம் ஜூலை 2021-ல் மறுசீரமைக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை ரூ 1790 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டத்தின் கீழ் ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரை மொத்தம் ரூ. 361.67 கோடி (மத்திய பங்கு ரூ.236.94 கோடி) மதிப்பீட்டில் 8 மாநிலங்களில் 12 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மீன்வளத்துறை முக்கிய இடத்தை வகிக்கிறது. இத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் அதிகளவிலான மக்களுக்கு இது ஊட்டசத்து மற்றும் உணவு பாதுகாப்பை வழங்குகிறது. இத்துறை வருவாய் ஈட்டுவதோடு, 28 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.
  • கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து மீன்வளத்துறை இத்துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி இரட்டை இலக்கை அடைந்து 10.87 சதவீதமாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் மீன்வளத்துறை மூலம் 142 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
  • மீன்பிடிப்பதில், இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இதன் அளவு உலகளவில் 7.56 சதவீதமாக உள்ளது.
  • மீன்வளத்துறையின் ஏற்றுமதி 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 46,662.85 கோடி. ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் சாத்தியம் மீன்வளத்துறைக்கு உள்ளது. இதற்காக மீன்வளத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, நிதியுதவியும் அளிக்கப்படுகின்றன.
திட்டங்கள்

1. பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் (PMMSY) 
  • இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை 2020ம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் அமல்படுத்துவதற்கான மொத்த முதலீடு ரூ.20,050 கோடி. 
  • இதில் மத்திய அரசின் பங்கு ரூ.9,407 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.4,880 கோடி பயனாளிகளின் பங்களிப்பு ரூ.5763 கோடி. இத்திட்டத்தை பிரதமர் கடந்த 2020 செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
  • 2020-21ம் ஆண்டில் 34 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ரூ.2881.41 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1089.86 கோடி. முதல் தவணையாக ரூ.585.68 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
  • 2021-22ம் ஆண்டில் 16 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ரூ.2600.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2021-22 ஆம் ஆண்டில் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் சாதனைகள்
  • உள்நாட்டு மீன்பிடிப்பு -  2983 ஹெக்டேர் அளவில் குளங்களில் மீன்வளர்ப்பு, 676 பயோபிளாக் மற்றும் 1178 மறுசுழற்சி மீன் வளர்ப்பு முறை, அணைகள் மற்றும் நீர்நிலைகளில் 10,490 கூண்டுகள் மற்றும் 126 ஹெக்டேரில் மீன் வளர்ப்பு, 110 இரால் பண்ணைகள், 79 ஹெக்டேரில் உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2. கடலில் மீன்பிடிப்பு 
  • 101 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 260 மீன்பிடி படகுகளை மேம்படுத்துதல், மீன்பிடி படகுகளில் 1,353 பயோ கழிவறைகள், 890 மீன் வளர்ப்பு கூண்டுகள், 2 மீன் குஞ்சு பொரிப்பகங்கள், 642 ஹெக்டேரில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
3. மீனவர்கள் நலன்
  • மீனவர்களுக்கு 974 படகுகள் மற்றும் மீன்வலைகள் மாற்றித் தரப்பட்டன. மீன்பிடி தடை காலத்தில் 6, 58,462 மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அளிக்கப்பட்டன.
4. கடற்பாசி வளர்ப்பு
  • 23,000 ரேப்ட் மற்றும் 41,000 ட்யூப் நெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
  • வடகிழக்கு பகுதியில் ரூ.122.50 கோடி மதிப்பிலான மீன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
5. மீன்வளர்ப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதி
  • மீன்வளத்துறைக்கான கட்டமைப்புகளை உருவாக்க மீன்வளத்துறை அமைச்சகம் 2018-19ம் ஆண்டில் பிரத்தியேக நிதியை ரூ.7522 .48 கோடி மதிப்பில் உருவாக்கியது. இதன் மூலம் தகுதியான நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய நிதியுதவி அளிக்கப்படுகிறது.
6. கிசான் கிரெடிட் கார்டு
  • தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின் கீழ் மீனவர்கள் உட்பட 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை கடன்களை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
ENGLISH
  • The livestock sector contributes to the national economy and plays a key role in providing livelihood to 80 million rural households. India, the world's leading milk producer, has produced 198.48 million tonnes of milk in the current fiscal, valued at Rs. 8.32 lakh crore.
  • However, the productivity of Indian farm animals is low compared to most of the dairy countries in the world. Due to low productivity, farmers do not get lucrative income by raising dairy cows.
  • The Rashtriya Gokul Mission has been implemented with an allocation of Rs. This makes various latest technologies available to farmers on the spot.
  • The Gopal Ratna Award, one of the highest national awards in the field of Animal Husbandry and Dairy, was launched in 2021. The purpose of the award is to promote farmers, artificial insemination technicians and dairy cooperatives working in the field.
  • The breeding farm site was launched on 26 November 2021. The Dairy Mark was launched on December 23, 2021 by His Excellency the Prime Minister. The National Artificial Insemination Program, including the Genetic Testing Program, are being implemented.
  • The comprehensive ethnic development market and information portal for direct use of farmers in the form of e-Gopal processor was launched on 10 September 2020 by the Hon’ble Prime Minister.
  • Permission has been granted to employ 90958 Multipurpose Fertilization Technicians in Rural India (Maitri) under Rashtriya Gokul Mission. This will make artificial insemination services available at farmers' doorsteps.
  • Aiming to create / strengthen the infrastructure for quality milk production, procurement, processing and marketing of milk, the Central Sector Plan “National Plan for Dairy Development” has been implemented across the country since February 2014.
  • The above plan was restructured in July 2021. The restructured plan will be implemented from 2021-22 to 2025-26 with a budget allocation of Rs 1790 crore.
  • Under the National Plan for Dairy Development from January 2021 to December 2021 a total of Rs. 361.67 crore (Central share Rs. 236.94 crore) Approved for implementation of 12 new projects in 8 states.
  • The fisheries sector plays an important role in the socio-economic development of the country. The sector is growing rapidly. It provides nutrition and food security to a large number of people in the country. The sector generates revenue and employs more than 28 million people.
  • The fisheries sector has doubled to 10.87 per cent on average from 2014-15. 142 lakh tonnes of fish have been caught by the Fisheries Department in the financial year 2019-20.
  • In terms of fishing, India is the second largest country in the world. Its proportion is 7.56 percent worldwide.
  • Exports of Fisheries are expected to reach Rs. 46,662.85 crore. The fisheries sector has the potential to double exports. Special attention is being paid to this in the fisheries sector. Policies for this are formulated and funded.
Projects

1. Prime Minister's Fisheries Scheme (PMMSY)
  • The project was approved by the Union Cabinet on May 20, 2020. The total investment for the implementation of this scheme over the next 5 years is Rs.20,050 crore.
  • The central government's share is Rs 9,407 crore. The share of the state government is Rs 4,880 crore and the contribution of the beneficiaries is Rs 5763 crore. The project was launched by the Prime Minister on September 10, 2020.
  • 2881.41 crore worth projects in 34 States / Union Territories have been approved for the year 2020-21. The share of the central government is Rs 1089.86 crore. The central government released Rs 585.68 crore in the first installment.
  • 2600.54 crore worth development projects of 16 States / Union Territories have been approved for the year 2021-22.
Achievements of the Prime Minister's Fisheries Plan for 2021-22

A. Inland Fisheries
  • Approved for aquaculture in ponds on 2983 ha, 676 bioflock and 1178 recycling aquaculture system, 10,490 cages in dams and water bodies and 110 lobster farms on 126 ha, saltwater aquaculture projects on 79 ha.
B. Fishing in the sea
  • Permission was granted for upgrading of 101 deep sea fishing boats, 260 fishing boats, 1,353 bio-toilets on fishing boats, 890 fish hatcheries, 2 hatcheries and saltwater aquaculture on 642 hectares.
C. Welfare of fishermen
  • 974 boats and fishing nets were transferred to the fishermen. Livelihood assistance was provided to 6, 58,462 fishing families during the fishery closure period.
D. Sponge breeding
  • 23,000 rafts and 41,000 tube nets were approved.
  • Fish projects worth Rs 122.50 crore were approved in the North East.
E. Fisheries Structure Development Fund
  • The Ministry of Fisheries has set up a special fund of Rs.7522.48 crore in 2018-19 to develop infrastructure for the fisheries sector. Through this, concessional financial assistance is provided to eligible companies.
F. Kisan Credit Card
  • The Union Finance Minister has announced concessional loans worth Rs 2 lakh crore to 2.5 crore farmers, including fishermen, under the Independent India Financial Assistance Scheme.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel