Type Here to Get Search Results !

TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழி தேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு அரசாணை / Government of Tamil Nadu makes Tamil language compulsory in all competitive examinations conducted by TNPSC

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழி தேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு அரசாணை (G.O.) வெளியிட்டுள்ளது. 
  • இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
  • கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொருத்த வரையில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும்
  • தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
  • தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
தொகுதி-I, II மற்றும் IIA ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை (Preliminary Examination) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் (Two stages of Examination) கொண்டதாக உள்ள தொகுதி l, II மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது, முதன்மைத் தேர்வுடன் (Main Written Examination) விரிந்துரைக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக அமைக்கப்படும்.
  • மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.
  • இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் (Qualifying Paper) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளின் (தொகுதி III மற்றும் IV) நடைமுறைகள் விவரம்
  • தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel