உலக தடகள அமைப்பு சார்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு சிறந்த பெண்மணி விருது
- மோனாக்கோவில் உலக தடகள அமைப்பின் வருடாந்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்த ஆண்டின் சிறந்தபெண்மணிக்கான விருது புகழ்பெற்ற இந்திய முன்னாள் தடகள நட்சத்திர வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜூக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- இளம் வீரர்களின் திறமைகளை வளர்த்ததற்காகவும், பாலின சமத்துவத்தை ஆதரித்ததற்காகவும் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
- கடந்த 2003-ம் ஆண்டு நடை பெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் அஞ்சு. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தார்.
நிகர மதிப்பு கூட்டு அடிப்படையில் (ஜிவிஏ) அறிக்கை
- நிகர மதிப்பு கூட்டு அடிப்படையில் (ஜிவிஏ) உற்பத்தித் துறையில் 15.9 சதவீத வளர்ச்சியை 2012 முதல் 2020 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநிலம் எட்டியுள்ளது. இதன் மூலமான மதிப்பு ரூ. 5.11 லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தித்துறை ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாகவும் அதன் மூலமான வருவாய் ரூ.4.43 லட்சம் கோடியாக உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் சேவைத்துறையில் முன்னணி மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
- இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள மாநிலங்களில் மிக மோசமாக செயல்பாடுகளைக் கொண்ட மாநிலங்கள் வரிசையில் ராஜஸ்தான் (3.8%),தெலங்கானா (5.5%), ஆந்திரா(6.9%) மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
- உற்பத்தி அதிகமுள்ள பிற மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு ரூ. 3.43 லட்சம் கோடி, கர்நாடகா ரூ.2.1 லட்சம் கோடி, உத்தரப் பிரதேசம் ரூ.1.87 லட்சம் கோடி என்றஅளவில் உள்ளன.
- நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்துறை வளர்ச்சி ரூ. 16.9 லட்சம் கோடியாகும். குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிக முதலீடுகளும் இதற்கு பிரதான காரணமாகும்.
உலகளவிலான கூட்டுறவு நிறுவனங்கள் இந்தியாவின் 'இப்கோ'வுக்கு முதலிடம்
- புதுடில்லியை தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் இப்கோ, உரங்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது.
- சர்வதேச கூட்டுறவு நிறுவனங்களின் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட, 'உலக கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கை 2021' பதிப்பின்படி, கூட்டுறவு நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், இப்கோ முதலிடத்தை பிடித்துள்ளது.
- தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிறுவனத்தின் விற்றுமுதல் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக, இப்கோ தெரிவித்துள்ளது.
அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
- டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
- இதனை தொடர்ந்து இன்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
- நாடாளுமன்ற் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.
5-வது சர்வதேச அம்பேத்கர் மாநாட்டின் தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
- எஸ்.சி மற்றும் எஸ்.டி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பும், டாக்டர் அம்பேத்கர் வர்த்தக சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 5வது சர்வதேச அம்பேத்கர் மாநாட்டை, குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் இன்று (02.12.2021) தொடங்கி வைத்தார்.
அழிந்து வரும் மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதற்காக அழிந்துவரும் இந்திய மொழிகளின் பாதுகாப்புக்கான திட்டம்
- அழிந்து வரும் மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதே அரசின் கொள்கை. அழிந்துவரும் இந்திய மொழிகளின் பாதுகாப்பிற்கான திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் இந்தியாவின் அனைத்து தாய்மொழிகள்/மொழிகளின் பாதுகாப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளில் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் செயல்படுகிறது.
- இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து 117 அழிந்து வரும் மொழிகள்/தாய்மொழிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழு இரண்டு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
- இப்பணிகளுக்காக பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தால் 2015-16 முதல் 2019-20 வரை ரூ 45.89 கோடி வெளியிடப்பட்டுள்ளது.