வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி
- வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.
- இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
- ஏவுகணையின் அனைத்து பாகங்கள் மற்றும் கருவிகளும், எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டன. இந்த பரிசோதனையை டிஆர்டிஓ மற்றும் கடற்படை அதிகாரிகள் கண்காணித்தனர்.
- ஏவுகணையின் அடுத்தகட்ட சோதனைகள் போர்க்கப்பலில் இருந்து ஏவி பரிசோதிக்கப்படவுள்ளன.
- உத்தர பிரதேசம் கோரக்பூரில் ரூ.10,000 கோடி மதிப்பிலான உரத் தொழிற்சாலை, எய்ம்ஸ் மற்றும் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
'லேஸ்' சிப்ஸ் தயாரிக்கப் பயன்படும் உருளைக்கிழங்கு காப்புரிமையை இழந்தது பெப்சி
- அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் பிரபலமான சிப்ஸ்களில் 'லேஸ்' வகை மிகவும் பிரபலமானது. இந்த வகை சிப்ஸ்களைத் தயாரிக்க எப்எல்-2027 என்ற வகை உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
- 2016-ம் ஆண்டு இந்த ரக உருளைக்கான காப்புரிமையை பயிர் வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணையம் (பிபிவி மற்றும் எப்ஆர்ஏ) அமைப்பிடம் பெப்சி நிறுவனம் பெற்றது.
- இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மெசர்ஸ் குருகாந்தி நிறுவனம் பெப்சி நிறுவனத்துக்கு அளித்த காப்புரிமையை திரும்பப் பெறுமாறு வழக்கு தொடர்ந்தது. பொது நலன் கருதியும், விவசாயிகளின் உரிமையைக் கருத்தில் கொண்டும் இதற்கு வழங்கப்பட்ட காப்புரிமையை ரத்து செய்வதாக பிபிவி மற்றும் எப்ஆர்ஏ இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கியது.
'நைட்டிங்கேல்' விருது
- 1990ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ. பொருளாதாரம், 1993ல் பசுமலை சி.எஸ்.ஐ. கல்லுாரியில் நர்சிங் முடித்தேன். 2001 வரை அங்கே உதவி பேராசிரியராக பணியாற்றினேன். 2001 மே யில் லண்டனில் உள்ள ஜேம்ஸ்குக் பல்கலைகழக மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தேன்.
- ஓராண்டில் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் கடிதங்களின் அடிப்படையில் விருதுக்கு செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் செவிலியர்களின் சேவையை பாராட்டி லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்படும்.
- மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜ்க்கு 50, லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் - TA'ZIZ கூட்டு
- அபுதாபி கெமிக்கல்ஸ் டெரிவேடிவ்ஸ் கம்பெனி RSC லிமிடெட் ("TA'ZIZ") மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இணைந்து ருவைஸ் நகரில் உள்ள TA'ZIZ தொழில்துறை ரசாயன மண்டலத்தில் TA'ZIZ EDC & PVC எனப்படும் உலகளாவியல் ரசாயன கூட்டு தயாரிப்பை அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.
- புதிய கூட்டு முயற்சியானது குளோர்-ஆல்கலி, எத்திலீன் டிக்ளோரைடு (EDC) மற்றும் பாலிவினைல் ஆகியவற்றை உருவாக்கும் வகையில் கட்டப்பமைக்கப்படும்.
- இதற்காக 2 பில்லியன் டாலருக்கு மேலாக (இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி) முதலீடு செய்யப்படவுள்ளது. இத்தகைய ரசாயன உற்பத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக உற்பத்தி செய்யப்படவுள்ளது.
- இதன் மூலம் இறக்குமதி குறைந்து, புதிய உள்ளூர் மதிப்புச் சங்கிலிகள் உருவாக்கப்படும். அதேசமயம், சர்வதேச அளவில் இத்தகைய ரசாயனங்களுக்காக வளர்ந்து வரும் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். . TA'ZIZ இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் மண்டலம் என்பது அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மற்றும் ADQ இடையேயான கூட்டு முயற்சி ஆகும்.
- இந்த திட்டம் ADNOC மற்றும் ரிலையன்ஸின் நீண்டகால மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகிறது. மேலும், MENA ( Middle East and North Africa.) பகுதியில் ரிலையன்ஸின் முதல் முதலீடு இந்த திட்டமாகும்.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் ADNOC நிர்வாக இயக்குனர் சுல்தான் அஹ்மத் அல் ஜாபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், திரு. முகேஷ் டி. அம்பானி ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆசிய இளையோா் பாரா போட்டி 2021
- பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோா் பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தமாக 12 தங்கம், 16 வெள்ளி, 13 வெண்கலம் என 41 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.
- இதில் அதிகபட்சமாக தடகள பிரிவில் 22 பதக்கங்கள் (8 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம்) வென்று தந்துள்ளனா் இந்திய போட்டியாளா்கள்.
- அடுத்தபடியாக பாட்மின்டனில் 16 பதக்கங்கள் (4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்), நீச்சலில் 3 பதக்கங்கள் (1 வெள்ளி, 2 வெண்கலம்), பவா் லிஃப்டிங்கில் 1 வெள்ளியும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.
- இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்ட தகவல்படி, தடகள விளையாட்டில் உயரம் தாண்டுதலில் பிரவீண் குமாா் தங்கமும், ராகுல் வெள்ளியும் வென்றனா்.
- நீளம் தாண்டுதலில் கரன்தீப் குமாா் முதலிடமும், பிரவீண் குமாா், தா்ஷ் சோனி 2-ஆம் இடமும் பெற்றனா். ஓட்டத்தில் 100 மீட்டா் பிரிவில் மீட் ததானி தங்கமும், தா்ஷ் சோனி வெண்கலமும் வென்றனா்.
- 200 மீட்டரிலும் மீட் ததானி தங்கம் வெல்ல, 400 மீட்டரில் மாஃபி வெள்ளியும், பிஜு பென்னட் ஜாா்ஜ் வெண்கலமும் பெற்றனா். ஈட்டி எறிதலில் விக்ரம் சிங் முதலிடம் பிடிக்க, சித்தாா்த் 2-ஆம் இடம், லக்ஸித் 3-ஆம் இடம் பிடித்தனா்.
- வட்டு எறிதலில் விகாஷ் பாட்டிவால் முதலிடமும், காா்திக் எம்.கிருஷ்ணா 3-ஆம் இடமும் பெற்றனா். குண்டு எறிதலில் விகாஷ் பாட்டிவால், அனன்யா பன்சால் ஆகியோா் வெள்ளி வெல்ல, மேதா ஜெயந்த், லக்ஸித், சஞ்ஜய் ஆா்.நீலம் ஆகியோா் வெண்கலம் வென்றனா்.
- கிளப் எறிதலில் காஷிஷ் லக்ரா தங்கம் வெல்ல, நீச்சலில் தேவான்ஷி சதிஜா 1 வெள்ளியும், 2 வெண்கலமும் வென்றாா். பவா் லிஃப்டிங்கில் ராகுல் ஜோக்ராஜ்யா வெள்ளி பெற்றாா். பாட்மின்டனில் நித்யா, சஞ்ஜனா, பாலக் - சஞ்ஜனா ஜோடி, நேஹல் - அபிஜீத் ஜோடி ஆகியோா் தங்கம் வென்றனா்.
- ஜோதி (2 பதக்கம்), நவீன், ஹாா்திக் மக்காா், கரன் - ருதிக் இணை, நித்யா - ஆதித்யா இணை, ஹாா்திக் - சஞ்ஜனா இணை ஆகியோா் வெள்ளி பெற்றனா். பாலக், நவீன் - ஹாா்திக் இணை, சந்தியா, நேஹல் - பாலக் இணை வெண்கலம் பெற்றுள்ளனா்.
- தேசிய அளவிலான 2021-ஆம் ஆண்டிற்கான மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் கோவை "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்” 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.
- "இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்” (Indian Council of Agricultural Research (ICAR) Agricultural Universities' ranking-2021) இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்தியாவில் கல்கரி உற்பத்தியை அதிகரிக்க சமீபத்தில் அமைக்கப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் அடங்கிய குழு தனது பரிந்துரைகளை தாக்கல் செய்தது.
- அதன் அடிப்படையில் உள்நாட்டு கல்கரி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க கல்கரி திட்டத்தை நிலக்கரித்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரித்து துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையிலான குழுவின் முக்கிய பரிந்துரைகள்:
- நிலக்கரி இந்திய நிறுவனமும்(சிஐஎல்), தனியார் துறையும் கல்கரியை வெட்டி எடுக்க கூடுதல் சுரங்கங்களை அடையாளம் காணுதல்.
- கல்கரி பயன்பாட்டுக்கு தற்போதுள்ள நவீனதொழில்நுட்பத்தை பின்பற்றுவது மற்றும் கல்கரியை சுத்தம் செய்வதற்கான கொள்கை திட்டத்தை உருவாக்குவது.
- கல்கரியை சுத்தம் செய்யும் வசதிகளை அமைக்க கல்கரி இணைப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு சிஐஎல் நிறுவனம் ஒதுக்கீடு செய்வது.
- தர அளவுகோல் அடிப்படையில் இறக்குமதி விலைக்கு நிகராக, உள்நாட்டு கல்கரிக்கு விலை நிர்ணய முறையை ஏற்படுத்துவது.
- கல்கரி சுரங்க விவரங்களை, சிஐஎல் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட பரிந்தரை செய்யப்பட்டுள்ளது.
- நோட்டரிகள் எனப்படும் சட்டப்பூர்வ சான்று அலுவலர்கள் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக நோட்டரிகள் சட்டம், 1952 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளை உடைய நோட்டரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நியமிக்க அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அதிகாரம் அளிக்கின்றன.
- நோட்டரி பப்ளிக் ஆக பணியாற்ற விரும்பும் இளம் தகுதி வாய்ந்த சட்டப் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உணரப்படுகிறது. அவர்களின் தொழிலை சிறப்பாக கட்டியெழுப்ப இது உதவும்.
- இதைக் கருத்தில் கொண்டு, வரம்பற்ற புதுப்பித்தலைக் குறைப்பதன் மூலம் பதினைந்து ஆண்டுகள் வரை (ஆரம்ப கால ஐந்து ஆண்டுகள் மற்றும் இரண்டு புதுப்பித்தல்கள் தலா ஐந்து ஆண்டுகள்) நோட்டரிகளின் ஒட்டுமொத்த காலத்தை கட்டுப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது,
- இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், நோட்டரி பணியின் சிறந்த வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கு இது வழிவகுக்கும் மற்றும் தொழிலின் தேவைகளை எளிதாக்கும்.
- மேற்கண்ட நோக்கங்களை அடையவும், தவறான நடத்தைகள் மற்றும் மோசடிகளை தடுக்கவும், தொழிலை டிஜிட்டல் மயமாக்கவும் நோட்டரிகள் சட்டம், 1952-த்தை திருத்துவதற்காக வரைவு நோட்டரிகள் (திருத்தம்) மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.