Type Here to Get Search Results !

TNPSC 6th DECEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

துாய்மை நகர பட்டியலில் உத்திரமேரூர், கருங்குழி முதலிடம் 

  • மத்திய அரசின், துாய்மை பாரத இயக்கம் சார்பில் ஆண்டுதோறும், துாய்மை நகரங்கள் தர வரிசை பட்டியல் தேர்வு செய்து வெளியிடப்படுகிறது.
  • இதில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என, துாய்மை நகரங்கள் குறித்து மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. தென்னிந்திய அளவில், 25 ஆயிரம் மக்கள் தொகை உடைய நகரங்கள் 671, 25 - 50 ஆயிரம் வரையிலான மக்கள் தொகை உடைய நகரங்கள் 107, 50 ஆயிரம் - 1 லட்சம் வரை மக்கள் தொகை உடைய நகரங்கள் 58 எனவும் கணக்கீடு செய்யப்பட்டு, தரப்பட்டியல் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
  • அதன்படி, துாய்மை பாரத இயக்கம் சார்பில், 2020ம் ஆண்டுக்கான தரமான துாய்மை நகரம் பட்டியலில், 25 ஆயிரம் மக்கள் தொகைக்கு கீழ் உள்ள, 671 நகரங்களில், செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி, 25வது இடத்தை பிடித்துள்ளது.

விழுப்புரம் கழுவேலி ஈரநிம் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவிப்பு

  • விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநிலம், கடற்கரை சதுப்பு நில ஏரியாகும். வங்காள விரிகுடாவின் அருகில் ஏறக்குறைய புதுச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஏரி அமைந்துள்ளது.
  • இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த சதுப்பு நில ஏரி, வலசை வரும் பறவைகளுக்கு உணவு தரும் இடமாக உள்ளது. அது மட்டுமின்றி, அவற்றிற்கான இனைப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாகவும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாடு
  • டெல்லியில் நடந்த இந்தியா, ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்து, இருதரப்பு உறவுகள், தடுப்பூசி தயாரிப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • மாநாட்டின் இடையே ராணுவம், விண்வெளி, எரிசக்தி துறையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவிடமிருந்து 6 லட்சம் ஏ.கே-203 துப்பாக்கிகளை வாங்கவும், அவற்றை இரு நாடுகளும் கூட்டாக இந்தியாவில் உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • தடுப்பூசி தயாரிப்பது, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகான சூழல், சர்வதேச தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நியூசி தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை - சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14வது தொடர் வெற்றி

  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
  • இந்தியா 372 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 
  • சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 
  • ஆட்ட நாயகனாக மயாங்க் அகர்வால், தொடர் நாயகனாக அஷ்வின் தேர்வு செய்யப்பட்டனர். இது அஸ்வினின் 9-வது தொடர் நாயகன் விருதாகும்.  தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
  • இந்த வெற்றியுடன் இந்தியா ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. 
  • மும்பை டெஸ்டில் 372 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிதான், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். 
  • தொடர் நாயகன் விருது பெற்ற அஷ்வின் முதல் டெஸ்ட்டில் 6 விக்கெட் (3+3), 2வது டெஸ்ட்டில் 7 விக்கெட் (3+4) என மொத்தம் 13 விக்கெட் வீழ்த்தியதுடன் கணிசமாக ரன் குவித்து ஆல் ரவுண்டராக அசத்தினார்.
  • சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல் கல்ல எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. கும்ப்ளே (350) முதலிடத்தில் உள்ளார்.
  • நியூசிலாந்து தொடர்ந்து 12வது முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
  • இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் விராட் கோலி அணிக்கு வந்தபின், டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் தலா 50 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதாவது ஒரு வீரராக 3 பிரிவுகளிலும் 50 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
  • இந்தியா-நியூசிலாந்து இடையேயான தொடர் முடிவரைந்துள்ள நிலையில் அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. 
  • அதில், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துடுள்ளது. 28 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 124 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 426 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 4வது முறையாக ஒரே ஆண்டில் 50 பிளஸ் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.
  • இந்த ஆண்டில் அவர் 8 டெஸ்ட்டில் 51 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளது. 
  • ஏற்கனவே 2015, 16, 17ம் ஆண்டுகளில் 50 பிளஸ் விக்கெட் எடுத்திருந்தார். இந்த வரிசையில் கும்ப்ளே, ஹர்பஜன்சிங் ஆகியோர் 3 முறை ஒரு ஆண்டில் 50 பிளஸ் விக்கெட் எடுத்துள்ளனர்.
ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்தில் அன்றாடத் தேவைகளுக்கான நஞ்சில்லா காய்கறிகளை, மகளிர் தங்களது வீடுகளில் உற்பத்தி செய்வதற்கும் , குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய இரண்டு லட்சம் விதை தளைகள் மானியத்தில் வழங்கப்படும் 
  • என்றும், நகர்ப்புறங்களில் ஆறு வகை காய்கறி விதைகள் கொண்ட ஒரு லட்சம் மாடித்தோட்டதளைகள் மானியத்தில் வழங்கப்படும்
  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 வகை செடிகள் கொண்ட இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தளைகள் மானியத்தில் வழங்கப்படும் 
  • காய் கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை இடுபொருட்கள் காய்கறிகள் சாகுபடி செய்யக்கூடிய ஆயிரம் கிராமங்களில் 1250 ஏக்கர் பரப்பளவில் மண் வளத்தை மேம்படுத்த இடுபொருட்கள் 638 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைப்பதற்கான மானியம் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடிக்கு மானியம் உள்ளிட்ட 105 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.
தேசிய துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் ராஹி சர்னோபட் தங்கம் வென்றார்
  • டில்லியில், 64வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் பெண்களுக்கான தனிநபர் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் மஹாராஷ்டிராவின் ராஹி சர்னோபட் 31, பங்கேற்றார். 
  • காமன்வெல்த் (2014), ஆசிய விளையாட்டில் (2018) தங்கம் வென்ற இவர், 37 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, இவரது 'ஹாட்ரிக்' தேசிய சாம்பியன் பட்டம்.  டில்லியின் நம்யா கபூர் (31 புள்ளி), ஹரியானாவின் மனுபாகர் (27) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 
வங்கதேச சேலஞ்ச் பாட்மின்டனில் அபிஷேக் சைனி சாம்பியன்
  • வங்கதேச சேலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் அபிஷேக் சைனி சாம்பியன் பட்டம் வென்றார்.வங்கதேச தலைநகர் தாகாவில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது.
  • இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அபிஷேக் சைனி, ரித்விக் சஞ்ஜீவ் மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய அபிஷேக், இரண்டாவது செட்டை 21-18 என வென்றார். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியில் அபிஷேக் 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். 
  • பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மெஹ்ரீன் ரிசா, ஆரதி சாரா சுனில் ஜோடி 22-20, 21-12 என, மலேசியாவின் கஸ்துாரி ராதாகிருஷ்ணன், வெனோஷா ராதாகிருஷ்ணன் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 
  • கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரதிக், அக்சயா ஜோடி 15-21, 18-21 என, இலங்கையின் சச்சின் தியாஸ், கவிதி ஜோடியிடம் தோல்வியடைந்தது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் 2021
  • ரஷ்யா-குரேஷியா நாடுகள் மோதிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் இறுதி போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்தது.
  • இதில் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் 6-4, 7-6(5) என குரேஷியாவின் போர்னா கோஜோவையும், 2ம் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவ், 7-6, 6-2 என மரின் சிலிக்கையும் தோற்கடித்தனர். 
  • இதனால் ரஷ்யா 2-0 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி 3வது முறையாக பட்டம் வென்றது. இதற்கு முன் 2002, 2006ம் ஆண்டுகளில் ரஷ்யா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel