- டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
- இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.
- இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் (TNPSC ) 2021-22 ஆண்டுக்கான காலியாக உள்ள இடங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பாக, அதன் தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
- இந்த சந்திப்பின் போது 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிட்டனர். இதன்படி குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கான அறிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை மார்ச் மாதத்தில் வெளியாகும். அட்டவணை வெளியிடப்பட்ட 75 நாள்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். விடைத்தாள் ஏற்றக்கூடிய லாரிகளை GPS முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறினர்.
- குரூப் 2 -ஏ மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது. குரூப்-4 5,244 காலிப்பணியங்கள் உள்ளது. இது இன்றைய தேதிக்குட்பட்ட காலிப்பணியிடங்கள்.
- அறிவிப்பாணை வெளியான பிறகும் கூட காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி. குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் கட்டாயம்.
- கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும். தமிழ் தாளுக்கான பாடத்திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் வெளியிடப்படும்.
- 32க்கும் அதிகமான தேர்வுகள் இந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 2022-ம் ஆண்டு முழுவதும் எந்தெந்தெந்த தேர்வுகளுக்கு எந்த மாதம் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது என்ற தகவல் அடங்கியுள்ளது.
வரிசை எண் |
பதவி / தேர்வின்
பெயர் |
அறிவிப்பு
வெளியிடப்படும் மாதம் |
1 |
கூட்டுறவுத்
தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் |
ஜனவரி |
2 |
இந்து
சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1 |
ஜனவரி |
3 |
ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு -II (Group 2, Group 2 A) |
பிப்ரவரி |
4 |
நகர்
ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர் |
பிப்ரவரி |
5 |
ஒருங்கிணைந்த
பொறியியல் பணிகள் |
மார்ச் |
6 |
சமூகப்
பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் |
மார்ச் |
7 |
ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு- IV (Group 4, VAO) |
மார்ச் |
8 |
சிறை
மற்றும் சீர்திருத்தத் துறையில் உளவியலாளர் |
ஏப்ரல் |
9 |
இந்து
சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை – III |
ஏப்ரல் |
10 |
இந்து
சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை – IV |
ஏப்ரல் |
11 |
தொல்லியல்துறையில்
இளநிலை கல்வெட்டாய்வாளர் |
மே |
12 |
சமூகநல
மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர் |
மே |
13 |
தமிழ்நாடு
மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி |
மே |
14 |
தொகுதி-
V A பணிகள் |
ஜூன் |
15 |
ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு - I (Group 1) |
ஜூன் |
16 |
மருத்துவக்
கல்வித்துறையில் உள்ள அரசு மறுவாழ்வு நிறுவனம் மற்றும் செயற்கை மூட்டு மையத்தில்
தொழில்முறை ஆலோசகர் |
ஜூன் |
17 |
வனத்துறையில்
வனத் தொழில் பழகுநர் |
ஜூலை |
18 |
தமிழ்நாடு
சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர் |
ஜூலை |
19 |
தமிழ்நாடு
சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிரூபர் மற்றும் தமிழ் நிரூபர் |
ஜூலை |
20 |
ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு - III |
ஆகஸ்ட் |
21 |
ஒருங்கிணைந்த
புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வு |
ஆகஸ்ட் |
22 |
மீன்வளம்
மற்றும் மீனவர் நலத்துறையில் மீன் வள ஆய்வாளர் மற்றும் மீன்வள உதவி ஆய்வாளர் |
செப்டம்பர் |
23 |
பள்ளிக்
கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் |
செப்டம்பர் |
24 |
பொது
சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர் |
செப்டம்பர் |
25 |
மருத்துவம்
- மக்கள் நல்வாழ்வுத்துறையில் உதவிப் பேராசிரியர் |
அக்டோபர் |
26 |
கல்லூரி
கல்வித்துறையில் நிதியாளர் |
அக்டோபர் |
27 |
மாற்றுத்
திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்
மற்றும் முடநீக்கு தொழில் நுட்பாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் |
நவம்பர் |
28 |
தமிழ்நாடு
வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் வேளாண்மை அலுவலர் |
நவம்பர் |
29 |
வனப்
பணிகளில் உதவி வனப் பாதுகாவலர் |
நவம்பர் |
30 |
தமிழ்நாடு
தகவல் தொழில் நுட்பவியல் பணிகளில் உதவி முறைப் பொறியாளர் மற்றும் உதவி முறைப் பகுப்பாய்நர் |
டிசம்பர் |
31 |
ஒருங்கிணைந்த
நூலகர் பணிகள் |
டிசம்பர் |
32 |
தமிழ்நாடு
பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர் |
டிசம்பர் |