TAMIL
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் (International Civil Aviation Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
- அந்த வகையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் 2021 அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் நடைபெற்று வரும் விமானப் பயணத்தில் சர்வதேச சிவில் விமான நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெரிவிக்க சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது.
- தவிர நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
- கூடுதலாக இந்த நாள் உலகளாவிய விமானப் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சீரான தன்மையை வழங்குவதில் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு (International Civil Aviation Organization- ICAO) ஆற்றிய தனித்துவமான பங்கை அங்கீகரிக்கிறது.
- 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு, தற்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளை விமானத்தில் கொண்டு செல்கிறது.
- விமானப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஆய்வு மற்றும் ஒழுங்குமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சிக்கான தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை வெற்றிகரமாக இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது.
- சர்வதேச விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதையும், விமான வழிசெலுத்தலின் நுட்பங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு ஏப்ரல் 4, 1947-ல் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு உருவாக்கப்பட்டது. பின் அக்டோபர் 1947-ல், ஐக்கிய நாடுகள் சபை ICAO-வை ஒரு சிறப்பு நிறுவனமாக அங்கீகரித்தது.
- 1994-ல் ICAO-ன் 50-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் அனுசரிக்கப்பட்டது. எனினும் 1996-ஆம் ஆண்டு தான் ஐநா பொதுச் சபையில் A/RES/51/33 தீர்மானத்தின் கீழ் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
- பத்திரிகை மற்றும் ஊடக வெளியீடுகள், விமானம் சார்ந்த விரிவுரைகள் மற்றும் வகுப்பறை நிகழ்வுகள் ஆகியவை இந்த நாளில் நடத்தப்படுகின்றன.
- உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதில் விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. உலக அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக சர்வதேச விமானங்களை பார்க்கும் சிகாகோ மாநாட்டின் நோக்கங்களுக்கும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் பொருத்தமாக இருக்கிறது.
- சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினத்தின் 2021-ஆம் ஆண்டின் கருப்பொருள் "உலகளாவிய விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கான புதுமைகளை மேம்படுத்துதல்" (Advancing Innovation for Global Aviation Development) என்பதாகும். 2023-ஆம் ஆண்டு வரை இதே தீமில் தான் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் கொண்டாடப்படும்.
- சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினத்திற்காக ICAO கவுன்சில் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை சிறப்பு தீமை முன் வைக்கிறது.
- எனவே இதற்கு இடைபட்ட 4 ஆண்டுகளுக்கு ஒரே தீமில் தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள தீம் கடந்த 2020-ல் தேர்வு செய்யப்பட்டு வரும் 2023 வரை அனுசரிக்கப்பட உள்ளது.
- International Civil Aviation Day is celebrated every year on December 7. In that sense, today, December 7, is International Civil Aviation Day 2021. International Civil Aviation Day is celebrated to inform the public about the importance of international civil aviation in air travel around the world.
- The day also aims to create awareness among the people about the importance of civil aviation in the economic and social development of the country.
- In addition the day recognizes the unique role played by the International Civil Aviation Organization (ICAO) in providing global aviation security, efficiency and consistency.
- The International Civil Aviation Organization, which has been in operation for 75 years, currently handles an average of more than 4 billion passengers a year each year.
- The organization has successfully developed standards for aviation safety, infrastructure, inspection and regulation, environmental protection, sustainable development and recommended practices.
- The International Civil Aviation Organization was established on April 4, 1947, with the aim of improving international aviation and improving air navigation techniques. Then in October 1947, the United Nations recognized ICAO as a specialized body.
- International Civil Aviation Day was observed in 1994 as part of the ICAO's 50th anniversary celebrations. However, it was not until 1996 that the day was officially recognized by UN General Assembly Resolution A / RES / 51/33. Press and media releases, aeronautical lectures and classroom events are held on this day.
- This day highlights the importance of aviation in improving global connectivity. International Civil Aviation Day is also in line with the objectives of the Chicago Conference, which sees international aviation as a medium to promote world peace and prosperity.
- The theme for International Civil Aviation Day 2021 is "Advancing Innovation for Global Aviation Development". Until 2023, International Civil Aviation Day will be celebrated under the same theme.
- For the International Civil Aviation Day, the ICAO Council puts forward a special evil once every five years. So this day is celebrated on the same theme for the intervening 4 years. The theme mentioned above will be selected in 2020 and will be followed until 2023.