'கில்லர்ஸ்' இந்திய கடற்படைப் பிரிவுக்கு 'ஜனாதிபதி கொடி' கவுரவம்
- கடந்த 1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் நடந்தபோது, 'கில்லர்ஸ் ஸ்குவாட்ரான்' எனப்படும், இந்திய கடற்படைக்கு சொந்த மான ஏவுகணையுடன் கூடிய போர்க்கப்பல்கள், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
- துறைமுக பகுதியில் இருந்த பாக்., கடற்படையின் போர்க் கப்பல்கள் தகர்க்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த படைப் பிரிவினர், 'ஆப்பரேஷன் விஜய், ஆப்பரேஷன் பராக்கிரமம்' உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் நடந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கில்லர்ஸ் படைப் பிரிவை கவுரவிக்கும் விதமாக, அதற்கு ஜனாதிபதியின் கொடி வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
BWF உலக டூர் பைனல்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை P.V.சிந்து
- இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான BWF உலக டூர் பைனல்ஸ் நடைபெற்றது. உலக தர வரிசையில் முன்னணி இடம் வகிப்பவர்களை கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு சுற்றுகளை வென்று சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- அதில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி என்பவரை 21-15, 15-21 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்திற்கான இறுதி போட்டிக்குள் நுழைந்தார். அதில் தென்னாப்பிரிக்க வீராங்கனை அன்சியங்க் என்பவருடன் கடுமையாக போராடினார்.
- இருப்பினும் உலக சாம்பியனான P.V.சிந்துவால், உலக தர வரிசை பட்டியலின் ஆறாவது இடம் வகிக்கும் அன்சியங்க் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் போனது.
- இதனையடுத்து 16-21, 12-21 என்ற நேர்செட் கணக்கில் தென்னாப்பிரிக்க வீராங்கனை அன்சியங்கிடம் தோல்வியை தழுவி, இறுதியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2021
- ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.
- இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஜொமனியும்-ஆா்ஜென்டீனாவும் மோதின. ஆட்டம் தொடங்கியது. 4-2 என்ற கோல் கணக்கில் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆா்ஜென்டீனா. டொமென் ஆட்ட நாயகனாக தோவு செய்யப்பட்டாா்.
- வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - பிரான்ஸ்வும் மோதின. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
- பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான வேளாண் ஏற்றுமதி மாநாட்டுக்கு ஏபிஇடிஏ ஏற்பாடு செய்திருந்தது.
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
- இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக நான்கு மிகப் பெரிய சர்வே கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) ரூ.2,435 கோடி மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கையெழுத்தானது. இதில் முதல் கப்பலை கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது.
- இந்த கப்பல் இன்று முதல் முறையாக ஹூக்ளி நதி நீரில் இன்று இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் கலந்து கொண்டார்.
- கில்லர் ஸ்குவாட்ரன் என்று வழங்கப்படும் 22-வது ஏவுகனை படகு ஸ்குவாட்ரனுக்கு வரும் 8-ம் தேதி, மும்பை கடற்படை தளத்தில் நடைபெறும் வண்ணமிகு அணிவகுப்பு நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசு தலைவர் தர விருதை வழங்குகிறார்.
- இந்த சிறப்பான நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறது.
- 'எக்ஸ் எகுவெரின் பயிற்சி' எனும் இந்திய-மாலத்தீவு இராணுவ கூட்டுப் பயிற்சியின் 11வது பதிப்பு மாலத்தீவுகளில் உள்ள கத்தூ தீவில் 2021 டிசம்பர் 06 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தப் பயிற்சியானது, தரையிலும் கடலிலும் உள்ள நாடுகடந்த பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்வது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் சிறந்த இராணுவ நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குநிலையை மேம்படுத்தும்.
- கடுமையான பயிற்சியுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் இடம்பெறும். மாலத்தீவுடனான இந்தியாவின் உறவினை மேலும் வலுப்படுத்த இந்தப் கூட்டு பயிற்சி வழிவகுக்கும்.