தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் குழு கடன் ரூ.2,674.64 கோடி தள்ளுபடி வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு அரசாணை வெளியீடு
- கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,674.64 கோடி கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- இதை பரிசீலித்த தமிழக அரசு, மகளிர் சுய உதவிக்குழு கடன் நிலுவையில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, அபராத வட்டி, இதர செலவினங்கள் தவிர்த்து அசல் தொகையான ரூ.2,459.57 கோடி மற்றும் வட்டி ரூ.215.07 கோடியும் சேர்த்து ரூ.2,674.64 கோடியை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்குகிறது.
- இந்த நிதியாண்டில் இதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்படும். மீதமுள்ள தொகையை 7 சதவீத வட்டியுடன் 4 ஆண்டுகளில் விடுவிக்கவும் அனுமதியளித்துள்ளது.
முதல் தர கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை கடந்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
- முதல் தர கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற பெருமை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (36 வயது) கிடைத்துள்ளது.
- மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக 130 கோல், ரியல் மாட்ரிட் அணிக்காக 450, ஜுவென்டஸ் அணிக்காக 101, ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 மற்றும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக 115 கோல் அடித்துள்ளார்.
- பீலே (769), ரொமாரியோ, பெரன்க் புஸ்காஸ் (தலா 761), லியோனல் மெஸ்ஸி (756) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
- செய்தித்துறை அறிவிப்பின்படி பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- மேலும், அந்த ஆணையில் பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை முறையான தொழில்நுட்பப் படிப்பு திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை வழங்கப்படும் எனவும் பத்திரிக்கையாளர்களின் புதிய நல உதவித் திட்டங்களுக்கான தகுதிகள் மற்றும் வரையறைகள் குறித்து தனியே ஆணைகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- பத்திரிக்கையாளர் நலவாரிய உதவித் திட்டங்களை வகுத்து செயல்படுத்த செய்து துறை அமைச்சரை தலைவராகவும் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும் அலுவல் சாரா உறுப்பினர்களாக ஆறு நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும், பத்திரிக்கையாளர் நல வாரியத்திற்கு என புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் "பபாசி" தலைவராக குமரன் பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்.வயிரவன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
- 2017-18-ஆம் ஆண்டுக்கான "தேசிய சுகாதார கணக்கீட்டு அறிக்கையின்படி" (National Health Account Estimate report) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மத்திய அரசு, சுகாதாரத்துக்காக செலவிட்டுள்ளதன் பங்கு 1.15 சதவீதத்திலிருந்து 1.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- நிதி சார்ந்த தொழில்நுட்பம் (ஃபின்டெக்) குறித்த சிந்தனை மிக்க தலைமைத்துவ அமைப்பான இன்ஃபினிட்டி அமைப்பைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்
- கிஃப்ட் நகர் மற்றும் ப்ளூம்பெர்க் இணைந்து மத்திய அரசின் உதவியுடன் 2021 டிசம்பர் 3, 4 தேதிகளில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் இந்த நிகழ்வை நடத்தியது. இந்த அமைப்பின் முதலாவது சந்திப்பில் இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகியவை பங்கேற்கும் நாடுகளாக இருந்தன.
- பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தை 2020-21ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.20,050 கோடி முதலீட்டில் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.
- விரிவாக்க திட்டங்கள் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்பது, நவீனமயமாக்கல் மூலம் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது, மீனவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
- நீர் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மத்திய மீன்வளத்துறை எடுத்து வருகிறது. இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆண்டுக்கு 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அபாயகரமான மீன்பிடி முறைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ், ஒடிசா அரசின் மீன்வளத்துறை மேம்பாட்டு திட்டங்களுக்கு 2021-22ம் நிதியாண்டில் ரூ.440.56 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இந்தியாவில் வாகனத் தயாரிப்பு மற்றும் வாகன உதிரிபாக தொழில்துறையினருக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
- இத்திட்டத்திற்காக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.25,938 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சாம்பியன் ஓஇஎம் ஊக்கத்தொகைத் திட்டம் & உதிரிபாக சாம்பியன் ஊக்கத்தொகைத் திட்டம் இருபிரிவுகளைக் கொண்டது. உதிரிபாக சாம்பியன் ஊக்கத்தொகைத் திட்டம், ‘விற்பனை மதிப்புடன் இணைந்த’ திட்டமாகும்.
- இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணியர் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள், ராணுவ பயன்பாட்டிற்கான வாகனங்கள் உள்ளிட்ட பிற எந்த அதிநவீன வாகன தொழில்நுட்ப உதிரிபாக தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறலாம்.
- வானொலி உலகில் முதன்முறையாக, பிரசார் பாரதி பயனர்கள் ஆராய்ச்சி குழுவால் நேயர்களின் எண்ணிக்கை துல்லியமாக தற்போது அளவிடப்படுகிறது.
- நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் நகரங்களின் தர வரிசைப் பட்டியலில், மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் நிகழ்ச்சிகளை கேட்பதாக தெரியவந்துள்ளது.
- சமீபத்திய கணக்கெடுப்பின் படி புனே மற்றும் பெங்களூரு முறையாக முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ள நிலையில், தில்லி என்சிஆர், ஹைதரபாத், மும்பை, லக்னோ, சென்னை ஆகியவை முதல் பத்து இடங்களில் உள்ளன . சென்னை ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
- சென்னை பகுதியைப் பொருத்தவரை, அகில இந்திய வானொலி காரைக்கால், அகில இந்திய வானொலி கொடைக்கானல், அகில இந்திய வானொலி சென்னை எஃப் ரெயின்போ, விவித் பாரதி நேஷ்னல், அகில இந்திய வானொலி சென்னை எஃப் எம் கோல்டு, அகில இந்திய வானொலி சென்னை விபிஎஸ், அகில இந்திய வானொலி தமிழ், அகில இந்திய வானொலி சென்னை பிசி, அகில இந்திய வானொலி மதுரை மற்றும் அகில இந்திய வானொலி கோயம்புத்தூர் எஃப் எம் ரெயின்போ ஆகியவை முதன்மையான இடங்களை முறையே பிடித்துள்ளன.
- பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்-ல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன.