அய்யம்பாளையத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டெடுப்பு
- திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- தி.மலை மாவட்டத்தில், தற்போது கண்டெடுக்கப்பட்ட சமணர் படுக்கைகளுடன் சேர்ந்து மொத்தம் 12 சமணர் படுக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்திலேயே தி.மலை மாவட்டத்தில்தான் சமணர் அடையாளங்கள் அதிகளவு காணப்படுவது சிறப்பாகும். அக்காலத்தில் சமணத் துறவிகளை மன்னர்கள் மதித்து வந்துள்ளனர்.
ஆளுநரின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மகாராஷ்ட்ரா அரசு
- வழக்கமாக, அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் ஆளுநரே வேந்தராக செயல்படுவார். தேடுதல் குழுவின் பரிந்துரைப்படி துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு.
- இந்நிலையில், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை மகாராஷ்டிரா அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படி தேடுதல் குழு, துணை வேந்தர் பதவிக்காக 5 பேரின் பெயர்களை மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும்.
- அரசு அதில் இருந்து இருவரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பும். அடுத்த 30 நாட்களுக்குள் அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தர் நியமிக்க வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இது தவிர இணை வேந்தர் பதவி உருவாக்கப்பட்டு, உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்றும் வேந்தருக்கு இணையான பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியல்
- தமிழகத்தில், 2020ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இரண்டாவதாக திருவண்ணாமலை தாலுகா ஸ்டேஷனும், மூன்றாவதாக, மதுரை சிட்டி அண்ணா நகர் (இ-3) ஸ்டேஷனும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ இணை இயக்குநராக வித்யா குல்கர்னி நியமனம்
- தமிழகக் காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐஜியாகப் பணியாற்றியவர் வித்யா குல்கர்னி. இந்நிலையில், அவர் கடந்த நவம்பரில் மத்திய அரசு பணிக்குச் சென்றார்.
- இதற்கிடையே அவரை சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இவருடன் ஒடிசா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி ஞான்சிஷியாம் உபாத்யா, மகாராஷ்டிரா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி நாவல் பஜாஜ் ஆகியோரும் சிபிஐ இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புனேவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஆலையை அமைக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்
- இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முதன்முதலில் என்ட்ரி கொடுத்து பஜாஜ் நிறுவனம்தான். கடந்த ஆண்டு செட்டாக் (Chetak) எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருந்தது.
- இந்த ஆலையில் ஆண்டுக்கு 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது பஜாஜ். அதற்காக சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாம்.
- வேண்டுமானால் கூடுதலாக 250 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். வரும் 2022 ஜூன் முதல் இந்த ஆலையில் உற்பத்தியாகும் வாகனங்கள் சந்தைக்கு வரும் எனத் தெரிகிறது.
பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் - தெலங்கானாவில் 100% முதல் டோஸ்
- தெலங்கானா மாநிலத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டது. பெரிய மாநிலங்களின் பட்டியலில் உள்ள தெலங்கானா மாநிலம் முதன்முறையாக சாதனை படைத்துள்ளது.
- ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாதர் நகர் ஹவேலி, கோவா, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவுகள், சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் இந்த சாதனையை படைத்துள்ளன.
உலக ரேபிட் செஸ் - கோனெரு ஹம்பிக்கு 6-ஆம் இடம்
- உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்புச் சாம்பியனாக இருந்தவரும், இந்தியாவைச் சேர்ந்தவருமான கோனெரு ஹம்பி மகளிர் பிரிவில் 7.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தார். ஓபன் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் 9 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தார்.
- மகளிர் பிரிவில் ஆர்.வைஷாலி 7 புள்ளிகளுடன் 14-ஆவது இடமும், வந்திகா அகர்வால் 6 புள்ளிகளுடன் 38-ஆவது இடமும், பத்மினி ரெளத் 5.5 புள்ளிகளுடன் 49-ஆவது இடமும் பிடித்தனர். இப்பிரிவில் ரஷியாவின் அலக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் 7 வெற்றி, 4 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார். கஜகஸ்தானின் பிபிசரா அசெளபுயேவா 2ஆம் இடமும், ரஷியாவின் வாலென்டினா குனினா 3-ஆம் இடமும் பிடித்தனர்.
- ஓபன் பிரிவில் மித்ரபா குஹா 8.5 புள்ளிகளுடன் 15-ஆவது இடம் பிடிக்க, விதித் குஜராத்தி 7.5 புள்ளிகளுடன் 45-ஆவது இடமும், ஹரீஷ் பாரதகோடி 7 புள்ளிகளுடன் 60-ஆவது இடமும் பிடித்தனர். ஹரி கிருஷ்ணா 6.5 புள்ளிகளுடன் 99-ஆவது இடம் பிடித்தார். இப்பிரிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாதோரோவ், டை பிரேக்கரில் சாம்பியன் ஆனார்.
- ரஷியாவின் இயான் நெபோம்னியாட்சி வெள்ளியும், நார்வே வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சென் வெண்கலமும் வென்றனர்.
- மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் உள்ள தொலைத் தகவல் தொடர்பு பொறியியலுக்கான ராணுவக் கல்லூரியில் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் உதவியுடன் இந்திய ராணுவம் அண்மையில் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது.
- இதே நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தையும், இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. குவான்டம் தொழில்நுட்பத்தில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, அடுத்த தலைமுறை தகவல் தொடர்புக்கு பாய்ச்சல் வேகத்தில் உதவும்.