TAMIL
- இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை செய்யும் படைப்பாளிகளுக்கு ஒன்றிய அரசால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
- 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தமிழ் பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1962ல் எழுதத் தொடங்கிய அம்பை பெண்களின் உளச்சிக்கல்களை, அரசியலை, காதல், காமத்தை என பெண்களின் உலகத்தை, வலியை பல்வேறு பரிமாணங்களின் எழுதக்கூடியவர்.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற அம்பை தமிழ், ஆங்கிலம் என 14க்கும் மேற்பட்ட முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
- அம்பை எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறார்.
- அதேபோல், பால புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் மு.முருகேஷ் ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகளில் இயங்கி வருபவர்.
- சிறுவர் இலக்கியங்களில் முக்கிய பங்காற்றி வரும் இவர், 8 கவிதை நூல்கள், 11 ஹைக்கூ கவிதை நூல்கள், 18 குழந்தைகளுக்கான நூல்கள் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
- எழுத்தாளர் மு.முருகேஷ் 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற குழந்தை இலக்கிய நூலுக்கு பால புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- The Sahitya Akademi Award is given annually by the United Kingdom to authors who have made outstanding contributions to literature.
- The United States Government has released the list of writers who will receive the Sahitya Akademi Award for 2021. This year's Sahitya Akademi Award has been announced for Ambai, a famous Tamil woman writer from Tamil Nadu.
- Ambai who started writing in 1962, can write about women's emotions, politics, love, lust, the world of women and pain in various dimensions. He is proficient in Tamil, English, Hindi and Kannada and has authored over 14 major books in Tamil and English.
- Ambai has been shortlisted for this year's Sahitya Akademi Award for his collection of short stories 'Sivappu Kaluthutan Oru Patchai Paravai'. Similarly, M. Murugesh, a nominee for the Bala Puraskar Award, has been active in haiku, a Japanese form of poetry.
- He has been a major contributor to children's literature and has authored numerous books, including 8 poetry books, 11 haiku poetry books, and 18 children's books. Writer M. Murugesh has been nominated for the Bala Puraskar Award for his book 'Ammavuku Mahal Sonna Ulakin Muthal Kathai'.